,_a_rear_view_of_shrines_in_Chikkaballapur_district.jpg)
போக நந்தீஸ்வர கோவில்
Post No. 12,246
Date uploaded in London – – 8 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பெங்களூரிலுள்ள முக்கியமான 19 கோவில்களைக் கடந்த இரண்டு தினங்களில் கண்டோம். இனி பெங்களூருக்கு வெளியேயுள்ள கோவில்களைக் காண்போம்
TEMPLE PICTURES ARE TAKEN FROM WIKIPEDIA; THANKS
Part 3
சிறிய , புதிய கோவில்களுக்கு எண் (Number) கொடுக்கவில்லை
20. CHIKKA TIRUPATI சிக்க திருப்பதி
சிக்க திருப்பதி என்றால் சின்ன திருப்பதி என்று பொருள்.. பெங்களூர் நகரிலிருந்து 31 கிலோமீட்டர் தொலைவில் திருப்பதி பாணியில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோவில் இது.
ஐந்து நிலைக் கோபுரத்துடன் அமைந்த கோவிலில் வெங்கடேஸ்வரர் நின்ற திருக்கோலத்தில் அபய ஹஸ்தத்துடன் காட்சி தருகிறார் . கருட மண்டபம் பெரிதாக உள்ளது. குளமும் அருகில் இருக்கிறது ஆண்டு தோறும் நடக்கும் பிரம்மோற்சவம், தேர்த்திருவிழா , காவடித் திருவிழாவுக்கு மக்கள் 15 , 20 கிலோமீட்டர் பாத யாத்திரையாக வருகின்றனர் . கோடிக்கணக்கான ரூபாய் வரவு இருப்பதால் அரசாங்க அறநிலையத் துறை எடுத்துக்கொண்டுவிட்டது !!.
XXXXX
முக்திநாகா கோவில் Mukthi Naga Temple
இதுவும் அண்மைக்கால கோவில்தான்
16 அடி உயரமுள்ள , ஒரே கல்லில் ஆன நாகர் உருவமிங்குள்ளது. அதன் எடை 36 டன்! சுப்ரமண்யர் சிலையும் உளது.பெங்களூர் நகரிலிருந்து 18 20 கிலோமீட்டர் ; ராமோஹள்ளி அருகில் இருக்கிறது அதையும் தாண்டிச் சென்றால் தொட்ட /பெரிய ஆலமரத்தைக் காணலாம். 400 ஆண்டு வயதுள்ள ஆலமரம் 3 ஏக்கர் பரப்பை வியாபித்துள்ளது .

XXXXX
பெங்களூர் நகரிலிருந்து 21 கி.மீ. தொலைவில், கனகபுரா சாலையில் பண்டிட் ரவி சங்கரின் ART OF LIVING ASHRAM வாழும் கலை ஆஸ்ரமம் இருக்கிறது. அங்கு வேத பாடசாலை, சுமேரு மண்டபம், தியான மண்டபம், முதலியன கட்டப்பட்டுள்ளன
XXXX
ராஜ ராஜேஸ்வரி கோவில், மைசூரு ரோடு.Raja Rajeshwari Temple
அண்மைக்காலத்தில் திருச்சி சுவாமிகளால் கட்டப்பட்ட கோவில் இது மகாமேரு, ஸ்ரீ சக்ரம் உள்ளன ; வேதாகம பாடசாலையும் உள்ளது .பஸ் நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டர்
XXXXX
கனகபுரா சாலையில் கெப்பே தொட்டி கிராமத்தில் பிரமிட் த்யான கேந்திரம் அமைக்கப்பட்டுள்ளது PYRAMID MEDITATION CENTRE
XXXX
SATHYA SAI ASHRAMAM AT WHITE FIELD
பெங்களூர் நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் ஓயிட்பீல்ட் பிருந்தாவனத்தில் அமைந்த பிருந்தாவனம் எனும் சத்ய சாய் பாபா ஆஸ்ரமும் குறிப்பிடத்தக்கது.
XXXX
21.போக நந்தீஸ்வர கோவில்
SHRI BHOGANANDUSHWARA TEMPLE
_-_Bhoga_Nandeeshwara_Temple.jpg)
பெங்களூர் நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் நந்தி ஹில்ஸ் NANDI HILLS அமைந்துள்ளது . இதன் அடிவாரத்தில் .போக நந்தீஸ்வர கோவில் இருக்கிறது. இது சோழர், ஹொய்சாளர், விஜய நகர வம்சத்தினரால் சிறப்பிக்கப்பட்ட பழம் பெருமைமிக்க கோவில்.
போக நந்தீஸ்வரர், உமா மஹேஸ்வரர் , அருணாசலேஸ்வரர் மூர்த்திகள் உள; .சோழர் கால யோக நந்தீஸ்வரர் கோவில் மலை மேல் இருக்கிறது .
நுளம்ப வம்சம், கங்க வம்சம் என்று ஒவ்வொருவராக அமைத்த பல சந்நதிதிகளைக் காணலாம். 1200 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் இந்த இடத்தைக் குறிப்பிடுகின்ற்ன. உமா மஹேஸ்வரர் இணைந்திருப்பதால். புதுமண தம்பதிகள் வந்து ஆசிபெறுகின்றனர்.. மிகவும் பழமையும் கலை வேலைப்பாடு மிக்க சபா மண்டபமும் உள்ள இந்த இடம் தொல்பொருட் துறையினரின் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளது . அருமையான கல்யாணி புஷ்கரணி என்னும் குளமும் இந்தக் கோவில் வளாகத்திற்கு அழகு சேர்க்கிறது.
சிக்கபல்லபூர் ,அருகிலுள்ள பெரிய ஊராகும் .
கர்நாடகத்தின் பொறியியல் வல்லுநர், ராஜதந்திரி விஸ்வேஸ்வரய்யா பிறந்த முத்தனஹள்ளி இந்த மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
XXXXX
22.கடி சுப்ரமண்யர் கோவில் Ghati Subramanya
பெங்களூர் நகரிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் தொட்டப்பல்லபூர் அருகில் இந்த சுப்ரமண்யர் கோவில் இருக்கிறது 600 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடைத்து..
இந்தக்கோவிலின் சிறப்பு நரசிம்ம மூர்த்தியும் சுப்ரமண்யர் கோவிலில் இருப்பதாகும். இதனால் ஷஷ்டி, நரசிம்ம ஜெயந்தி எல்லாம் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன . மேலும் சுப்ரமண்யரை நாக பிரதிஷ்டை செய்து வழிபட்டால் குழந்தை இல்லாதோர் குழந்தை கிடைக்கப்பெறுவர் என்ற நம்பிக்கை இருப்பதால் கோயில் அருகில் ஆயிரக் கணக்கில் நாகர் சிலைகளைக் காணலாம்..
ஏழு தலை நாகத்துடன் சுப்ரமண்யர் கிழக்கு நோக்கி நிற்கிறார்.; அருகில் மேற்கு நோக்கிய வண்ணம் நரசிம்ம மூர்த்தி நிற்கிறார் இருவரையும் ஒரே நேரத்தில் தரிசிக்க வசதியாக கர்ப்பக் கிரகத்தின் அருகில் பெரிய கண்ணாடியும் நிறுவப்பட்டுள்ளது. இத்தகைய அபூர்வக் காட்சியை வேறு எங்கும் காண்பது அரிது

இரண்டு சிலைகளும் பூமியிலிருந்து தானாக எழுந்த ஸ்வயம்பூ மூர்த்திகள் என்ற நம்பிக்கையும் உளது.
TO BE CONTINUED………………………………..
TAGS- கர்நாடகம், 108 கோவில், பகுதி 3, சிக்க திருப்பதி, நந்தி ஹில்ஸ்