நிவேதிதா வாழ்க்கையில் நடந்த அற்புதம்;  லண்டனில் சிலை திறப்பு (Post No.12,243)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,243

Date uploaded in London – –  8 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

சிஸ்டர் நிவேதிதா (Sister Nivedita) என்று அழைக்கப்பட்ட , சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான , மார்கரெட் நோபிளின் (Margaret Noble) சிலை, சென்ற சனிக்கிழமை, ஜூலை 1, 2023ல் லண்டனின் தென்பகுதி பேட்டையான விம்பிள்டனில் (Wimbledon, London) திறக்கப்பட்டது

முதலில் அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு அற்புதத்தைக் காண்போம்.

1902-ம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி காலை 9-10 க்கு சுவாமி விவேகானந்தா சமாதி அடைந்தார் அப்போது நிவேதிதா அங்கு இல்லை. ஆனால் அன்றிரவு அவருக்கு ஒரு கனவு ஏற்பட்டது. விவேகானந்தரின் குரு வான ராமகிருஷண பரமஹம்சர் , அவருடைய உடலிலிருந்து மீண்டும் ஒரு முறை செல்வது போன்ற கனவு அது. இதன் பொருள் விளங்காமல் திகைத்தார். மறுநாள் காலையில் பேலூர் மடத்திலிருந்து சுவாமி சாரதானந்தர் , ஒரு துறவி மூலமாக கடிதம் அனுப்பினார். அதில் சுவாமி விவேகானந்தரின் சமாதி செய்தி இருந்தது மறுநாள் காலை 7 மணிக்கு சுவாமிஜியின் சடலம் இருந்த அறைக்குள் சிஸ்டர் நிவேதிதா நுழைந்தார் . சடலத்தின் தலைமாட்டில் உட்கார்ந்துகொண் டு விசிறியால் வீசினார் . அன்று, அதாவது ஜூலை 5 பிற்பகலில் சடலம் தகனம் செய்யப்பட்டது. சுவாமிஜியின் சடலம் காவித் துணியால் சுற்றப்பட்டிருந்தது . அதிலிருந்து ஒரு சிறிய துண்டினை வெட்டி மற்றோர் சிஷ்யையான Josephine MacLeod  ஜோசபைன் மக் லியொடுக்கு அனுப்ப விரும்பினார் . சுவாமி சாரதானந்தா அதற்கு அனுமதி கொடுத்தார். மனதில் ஏதோ ஒரு தயக்கம் ஏற்படவே நிவேதிதா அதைச் செய்யவில்லை. எல்லோரும் மயானத்துக்குச் சென்றனர் . சடலம் ‘தகதக’  என்று எரிந்து கொண்டிருந்தது . அனைவரும் வருத்தத் தோடு  அக்காட்சியைக் கண்டு கொண்டிருந்தனர் . மாலை ஆறு மணி ஆனது . சிதைத் தீ அவிந்துகொண்டிருந்த தருணத்தில் திடீரென்று காற்று வீசியது. ஏதோ ஒன்று சிதைத் தீயிலிருந்து பறந்துவந்து நிவேதிதா அருகில் விழுந்தது. அதை அவர் காணவில்லை. யாரோ ஒருவர் தன்னுடைய உடையை இழுப்பது போல உணர்ந்தார். அப்போதுதான் அருகில் விழுந்த துண்டு,  தான் வெட்டி எடுக்க நினைத்த, காவித்துண்டு என்பதை உணர்ந்தார் சுவாமிஜியே அதைத் தனக்கு அனுப்பிய தாகக் கருதி , அதை விரும்பியவாறே ஜோசப்பைனுக்கு அனுப்பிவைத்தார். அவருக்கு எழுதிய கடிதத்தில் நிவேதிதா குறிப்பிடுகிறார் : நான் வெட்டி எடுக்க நினைத்த 2, 3 அங்குலத் துணி திடீரென்று பறந்துவந்து என் காலடியில் விழுந்தது  . தோள்பட்டையை யாரோ உலுக்கியது போல உணர்ந்தேன் . இதை சுவாமிஜி அனுப்பிய கடிதம் என்றே கருதலாம் என்று ஜோசப்பை னுக்கு  1902 செப்டம்பர் 14ம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

xxxx

சிஸ்டர் நிவேதிதாவுக்கு விம்பிள்டனில் சிலை ஏன் ?

வட அயர்லாந்தில் (இப்போது பிரிட்டனின் பகுதி; இது தவிர, தென் பகுதி அயர்லாந்து உள்ளது அது தனி நாடு) பிறந்த மார்கரெட் நோபிள் 17 வயதிலேயே ஆசிரியர் பணியாற்றினார் . பின்னர் அவரே விம்பிள் டன் பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றைத் துவங்கி புதுமையான திட்டங்களை செயல்படுத்தினார். சுவாமி விவேகாநந்தரைச் சந்தித்து கல்கத்தாவுக்கு வந்த பின்னரும் ஒரு பள்ளிக்கூடத்தைத் திறந்தார். இப்போது லண்டனின் மெர்ட்டன் கவுன்சிலின் கீழ் வரும் விம்பிள்டன் பேட்டையில் ரிச்சர்ட் லாட்ஜ் பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் முன்னால் , லேக் ரோடில் சிலை திறக்கப்பட்டுள்ளது. இது கல்கத்தாவிலிருந்து இங்கே கொண்டுவரப்பட்டது.

xxxx

சிலையை யார் திறந்தனர் ?

மெர்ட்டன் மேயரும் இங்கிலாந்தின் டாரிங்டன் ஊர் மேயரும் சிலையைத் திறந்தனர் Mayor Councillor Doug Smyth Mayor of Great Torrington where w sister Nivedita Celebrations have installed another statue of Nivedita . it was donated by West Bengal Government 

Second Person is the Madam Mayor Jill Manly she is the mayor of Merton where the statue is installed now ).

xxxx

டாரிங்க்டனுக்கும் நிவேதிதாவுக்கும் என்ன சம்பந்தம்?

நிவேதிதா , இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் இறந்தார். ஆயினும் அவருடைய அஸ்தி, அவரது குடும்ப கல்லறை டாரிங்டனில் (Great Torrington, Devon, England) இருப்பதால் அங்கே புதைக்கப்பட்டுள்ளது. அங்கே ஏற்கனவே மேற்கு   வங்க அரசு அனுப்பிய ஒரு சிலை நிறுவப்பட்டுள்ளது . ஆக விம்பிள்டன் சிலை இரண்டாவது சிலை ஆகும் .

xxxx

சிலைத் திறப்புவிழாவில் டாக்டர் உமா பாசு அருமையாக நிவேதிதா படலைப் பாடினார் . இன்னும் ஒரு பாடலை சுதீப் சக்ரவர்த்தி பாடினார் . சபை நிறைந்த கூட்டம். லண்டனில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் கேந்திர தலைவர் சுவாமிஜி சர்வஸ்தானந்தா , பிரேசில் நாட்டு ராமகிருஷ்ணா மிஷன் கேந்திர தலைவர் நிர்மலாத்மானந்தாஜி ஆகியோர் சிலைக்கு மாலையிட்டு அஞ்சலி  Rev Swami Nirmalatmanandaji maharaj Minister in charge of Sao Paolo Brazil , Rev Swami Sarvasthanandaji MIC London ) செலுத்தினர் . கூட்டத்தில் பேசிய அனைவரும் சிஸ்டர் நிவேதிதா ஆற்றிய சேவையைக், குறிப்பாக, பெண்கள் கல்விக்கு ஆற்றிய சேவையை, புகழ்ந்தனர். பெண்கள் பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி கே பேஜ் (Mrs K Page) பேசுகையில் பள்ளி மாணவிகள் வந்து கூட்டத்தில் தொண்டாற்றியமைக்கு நன்றி கூறினார் . வருங்காலத் தலைமுறைக்கு நிவேதிதா ஊற்றுணர்ச்சி தருவார் என்றார்.  திருமதி சாரதா சர்க்கார் (Mrs Sarda Sircar) அனைவருக்கும் நன்றி நவின்றார் .

சிலைத் திறப்பு விழாவினை ஒட்டி ஒரு மலரும்(Souvenir)  வெளியிடப்பட்டது .

லேக் ரோட் , விம்பிள்டனில் (Lake Road, Wimbledon, London)  உள்ள சிலையை எவரும் எப்போதும் தரிசிக்கலாம்.

xxxxxxx

நிவேதிதா வாழ்க்கையில் சில மைல் கற்கள்

Sister Nivedita (பிறப்பு 28 October 1867 – மறைவு 13 October 1911)

1867, October 28

இயற் பெயர் –Margaret Elizabeth Noble (later called Sister Nivedita by Swami Vivekananda) iதாயார் – Mary Isabel Hamilton and தந்தை —Samuel Richmond Noble of Scotch Street, பிறந்த ஊர் –Dungannon, Northern Ireland.

சகோதரர்–:Richmond Noble, சகோதரி —May Noble  (Wilson)

1891-94

விம்பிள்டனில் பள்ளி ஆசிரியை வேலை

1894

Margaret co-founds the Sesame Club, சீசேம் கிளப் துவக்கம்

1895 November.

Margaret meets Swami Vivekananda at a lecture at Isabella Margesson’s residence at West End, London. சுவாமி விவேகானந்தருடன் சந்திப்பு

1898, January 28.

கப்பல் மூலம் கல்கத்தாவுக்கு வருகை

1898, March 17.

சாரதா தேவியுடன் சந்திப்பு

1898, March 25.

பிரம்மச்சர்ய ஆஸ்ரமம் ஏற்பு . நிவேதிதா என்று சுவாமிஜி பெயர் சூட்டல்

1898, May 11.

இமயமலைக்குப் பயணம் with Swamiji and fellow disciples Sara Bull and Josephine McLeod.

xxxx

1898, November 13.

நிவேதிதா துவக்கிய பெண்கள் பள்ளியை சாரதா தேவி துவக்கிவைத்தல்

1899, March.பிளேக் நோய் பரவல்; கல்கத்தாவில் நிவேதிதா சேவை

1899, May 28.

காளி மாதா வழிபாடு பற்றி வீர கர்ஜனை மிகுந்த சொற்பொழிவு   Kali Worship at the Kalighat Temple.

1899, June 20.

சுவாமிஜியுடன் ல ண்டன்  பயணம் Nivedita leaves for England with Vivekananda and Turiyananda to raise funds for the school. In London, Vivekananda meets her family for the first time.

1900, February 27.

அமெரிக்காவில் ராமகிருஷ்ணா உதவி அமைப்பு ஏற்படுத்தல் Nivedita establishes the “Ramakrishna Guild of Help” in America,

1900, 8 July.காளி மாதா பற்றிய நூல் வெளியீடு

Nivedita’s book Kali the Mother is published.

1900, 29 August.நிவேதிதாவுக்கு சுவாமிஜி வாழ்த்து 

Nivedita receives Swamiji’s now famous benediction at Perros-Guirec village, in Brittany, France. “Be thou to India’s future son / The mistress, servant, friend in one.”

1901 May. நார்வே நாட்டுக்குப் பயணம்

1901 September-December. பிரபல விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸின்  புஸ்தகம் வெளியிட உதவி

1902 பேலூர் மடத்தில் சுவாமிஜியுடன் இறுதிச் சந்திப்பு

Xxxx

1905 கர்சன் பிரபுவின் வங்கப் பிரிவினையால் கிளர்ச்சி; நிவேதிதா நாட்டு சேவையில் தீவிரம்

1906

சுப்பிரமணிய பாரதியார் சந்திப்பு; பெண் விடுதலைக்கு நிவேதிதா ஆசி வழங்கல் 

1906 to 1911

வங்கத்தின் பிரபலங்களை சந்தித்தல் ; இலங்கை ஆனந்த குமாரசாமியுடன் நூல் எழுதல்

1911 டார்ஜீலிங் நகரில் நிவேதிதா மரணம்

Nivedita died on 13 October 1911, aged 43, at Roy Villa in Darjeeling, West Bengal

Xxx

பல நூல்களை எழு திய நிவேதிதா என்றும் நினைவில் நிற்பார்

Old articles:

அயர்லாந்தில் சகோதரி நிவேதிதா வீட்டுக்கு …

tamilandvedas.com

https://tamilandvedas.com › அயர…

6 Dec 2018 — அங்கு ஸிஸ்டர் நிவேதிதா (Sister Nivedita) பிறந்த ஊருக்கு என்னையும் என் மனைவியையும் ..

VISIT TO SISTER NIVEDITA’S HOME TOWN (Post No.5734)

tamilandvedas.com

https://tamilandvedas.com › 2018/12/04 › visit-to-siste…

4 Dec 2018 — This is a non- commercial blog. I went to Dungannon, the birth place of Sister Nivedita, disciple of Swami Vivekananda. The Mayor of the town …

Sister Nivedita

tamilandvedas.com

https://tamilandvedas.com › tag › si…

 ·

11 Dec 2018 — This is a non- commercial blog. Greatest of the Modern Tamil Poets Subrahmanya Bharati met Sister Nivedita on his way back to Madras from the …

NIVEDITA BOOK

https://tamilandvedas.com › tag › ni…

9 Oct 2021 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. Tagged with NIVEDITA BOOK …

—-subham—-

Tags– நிவேதிதா சிலை, விம்பிள்டன், சுவாமி விவேகா நந்தா , டாரிங்டன், மேயர்

Leave a comment

Leave a comment