
Post No. 12,244
Date uploaded in London – – 8 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
1.நால்வரில் ஒருவரான சுந்தரரின் இரண்டு மனைவிகள் பற்றி நாம் அறிவோம்? அவர்களுடைய முற்பிறப்பு என்ன?
XXXX
2.சுந்தரர் பிறந்த ஊர் எது ? பெற்றோர் யாவர்?
XXXX
3.இளமையில் அவரை வளர்த்தவர் யார்?
xxxx
4. சுந்தரர் கல்யாணத்தில் என்ன கலாட்டா/ ரகளை நடந்தது?
xxxxx
5.சிவபெருமான் சுந்தரருக்கு வழங்கிய பெயர் என்ன ?
xxxxx
6. சுந்தரர் ஏது பாடுவதென்று திகைத்து நின்ற காலையில் சிவனே எடுத்துக்கொடுத்த பாடல் அடி என்ன?
Xxxxx
7.சுந்தரரின் 2 மனைவியர் யாவர் ?
xxxxx
8.செங்கற்களே தங்கக்கட்டியாக மாறி சுந்தரரை வியப்பில் ஆழ்த்திய ஊர் எது?
xxxxx
9.ஒரு ஊரில் ஆற்றில் போட்டு, மறு ஊர்க்குளத்தில் தங்கக்காசுகளை எடுத்த கதை என்ன ?
xxx
10.முதலை விழுங்கிய பிள்ளையை Parellel Universe பாரல்லல் யூனிவெர்சிலிருந்து வளர் அடைந்த நிலையில் மீட்டுக்கொடுத்த ஊர் எது?

Xxxxx
விடைகள்
1.கயிலை மலையில் சிவபெருமானுக்கு நெருங்கிய தொண்டர் ஆலால சுந்தரர். அங்கு உமை அம்மையாரின் சேடிகளாக விளங்கிய அநிந்திதை , கமலினி மீது அவர் காதல் கொண்டார். அவர்களும் அப்படியே மையல் கொண்டனர். ஆக மூவரையும் இகலோக சுகம் அனுபவித்த பின்னர், பரலோகம் வர அம்மையும் அப்பனும் ஆசீர்வதித்தனர் . மூவரும் நம்பி ஆரூரர் , பரவை , சங்கிலி என பூவுலகில் அவதரித்தனர்.
Xxxxx
2.திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூரில் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் நம்பி ஆரூரர் . தந்தை பெயர் –சடையனார். தாயார் பெயர் — இசை ஞானியார்.
xxxxx
3.திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்க முனையரையர் , வீதி உலா வருகையில் முகப்பொலிவுடன் விளங்கிய சுந்தரரைக் கண்டு வியந்து, பெற்றோர் அனுமதியுடன் தனது பிள்ளை போல வளர்த்தார் .
xxxxx
4.சிவ பெருமான் ஒரு வேதியர் வடிவத்தில் வந்து இந்தப் பையன் எனக்கு அடிமை. அந்த விஷயம் முடிவுக்கு வந்த பின்னர் திருமணத்தை நடத்தலாம் என்கிறார். வாக்குவாதம் வளரவே, முதியவர் ஊரான திருவெண்ணெய் நல்லூருக்குச் சென்று ஒரிஜினல்/ மூல ஓலையைப் பார்த்து சுந்தரர் அடிமைதான் என்று முடிவு செய்தனர் . முதியவரின் முகவரியைக் கேட்டபோது அவர் ஆலயத்துக்குள் சென்று மாயமாய் மறைந்தார் சிவ பெருமானே அவரை ஆட்கொள்ளவந்ததை அறிந்து அனைவரும் பிரமித்து நின்றனர்.
xxxxx
5. வன் தொண்டன்
மற்றுநீ வன்மை பேசி வன்றொண்ட னென்னு நாமம்
பெற்றனை; நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டே யாகு; மாதலான் மண்மே னம்மைச்
சொற்றமிழ் பாடு’ கென்றார் தூமறை பாடும் வாயான்.
xxxxxx
6.நானும் நீயும் வாதிட்டபோது நீ என்னை பித்தன் என்று ஏசினாய். அதையே சொல்! பாடல் வரும் என்றார் சிவா பெருமான் . உடனே சொற்றமிழ் பாடல் ஊற்று போல வெளியே பொங்கியது :–
திருவெண்ணெய்நல்லூர் பாடல் எண் : 1
பித்தாபிறை சூடீபெரு
மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாய்இனி
அல்லேனென லாமே.
xxxxx
7.கயிலையில் இருந்த கமலினி , பூவுலகில் பரவை நாச்சியார் என்ற பெயரில் பிறந்தார். அவர் முதல் மனைவி..
அநிந்தினி , வேளாளர் குடியில் ஞாயிறு என்னும் ஊரில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்தார். அவர் சுந்தரரின் இரண்டாவது மனைவி
xxxxx
8.திருப்புகலூரில் செங்கற்களை தலையணையாகப் பயன்படுத்தி உறங்கும்போதுப் பணம் வேண்டுமே என்ற கவலையில் உறங்கினார் . காலையில் கண்விழித்தபோது கற்கள் அனைத்தும் தங்கக்கட்டிகளாக மாறியிருந்ததைக் கண்டார் .
xxxxx
9.திருமுது குன்று சென்று சிவனை வேண்டியபோது பன்னீராயிரம் பொற்காசுகள் கிடைத்தது. அதை மணிமுத்தாற்றில் போட்டுவிட்டு திருவாரூர்க் குளத்தில் மூழ்கி எடுத்தார் . இப்போது இவைகளை சைன்ஸ் பிக்ஸன் (Science Fiction Films) திரைப்படங்களில் டெலி ட்ரான்ஸ்போர்டேஷன் Tele Transportation என்ற பெயரில் காண்கிறோம். .
xxxxx
10.சேரமான் பெருமாள் நாயனாரைக் காண மலைநாட்டுக்குச் செல்லுகையில் திருப்புக்கொளியூரில் ஒரு வீட்டில் மேள தாளமும் எதிர் வீட்டில் அழுகையும் ஒலித்ததைக்கண்டு காரணம் வினவினார். இரு வீட்டுப் பையன்களும் பல ஆண்டுகளுக்கு முன்னர் குளத்திற்குச் சென்ற பொழுது ஒரு சிறுவனை முதலை விழுங்கியதால் அந்த வீட்டுக்காரர்கள் அழுகின்றனர் என்று ஊர்மக்கள் விளம்பினார்கள் .மடுவின் கரைக்குச் சென்று பதிகம் பாடவே அந்தச் சிறுவனை முதலை கொண்டுவந்து கொடுத்தது.
(இறுதியில் சுந்தரர் வெள்ளை யானையில் ஏறி கயிலை செல்லுகையில் சேரமான் பெருமாள் நாயனார் குதிரையில் பின்தொடர்ந்து கயிலைக்கு ஏகி னார் ;அதே நேரத்தில் பிள்ளையார் தன் துதிக்கையால் அவ் வையாரையும் அவர்களுக்கு முன்னதாகவே கயிலைக்கு கொண்டு சென்றதாக ஒரு கதை உண்டு.)
–subham—
Tags–சுந்தரர், நம்பி ஆரூரர், பரவை , சங்கிலியார் , பித்தா பிறை சூடி , சொற்றமிழ் பாடு , அர்ச்சனைப்பாட்டு , அடிமை, வழக்கு , சேரமான் பெருமாள் நாயனார், முதலை
answers

–subham—Tags–சுந்தரர், நம்பி ஆரூரர், பரவை , சங்கிலியார் , பித்தா பிறை சூடி , சொற்றமிழ் பாடு , அர்ச்சனைப்பாட்டு , அடிமை, வழக்கு , சேரமான் பெருமாள் நாயனார், முதலை