
Post No. 12,247
Date uploaded in London – 9 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
காலன் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – 6
ச.நாகராஜன்
12-6-2023 அன்று பகோடா, கொலம்பியாவிலிருந்து வந்த பத்திரிகை செய்தி இது:
கொலம்பியா அமேஸானில் கடந்த 40 நாட்களாகத் தொலைந்ததாகக் கருதப்பட்ட குழந்தைகள் காட்டிலிருந்த கொட்டைகள், வேர்கள், தாவரங்கள் உள்ளிட்டவற்றைச் சாப்பிட்டு உயிருடன் இருந்தனர். அவர்கள் அவற்றைச் சாப்பிடக்கூடியவை தான் என்பதை அறிந்திருந்தனர்- அவர்களது வளர்ப்பு அப்படி!
கொலம்பியாவின் ராணுவத் துருப்புகள் கொலம்பியா காடுகளில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் அவர்களால் குழந்தைகளைக் கண்டுபிடிக்க முடிந்தது – உயிருடன்!
ஒன்று முதல் 13 வயது முடிய இருந்த நான்கு குழந்தைகள் மே முதல் தேதி நடந்த ஒரு விமான விபத்தில் சிக்கிப் பிழைத்தனர். அந்தக் குழந்தைகளின் தாயார், விமான பைலட், இன்னும் ஒரு வயதானவர் ஆகியோர் விபத்தில் இறந்தனர்.
‘புதர்க் குழந்தைகள்’ என்று அந்தக் குழந்தைகளின் பாட்டனாரால் அழைக்கப்பட்ட குழந்தைகள் யுக்கா மாவைச் (Yucca Flour) சாப்பிட்டு உயிருடன் இருந்தனர். யுக்கா மாவு அந்த விமானத்தில் ஏற்றப்பட்டிருந்தது. அத்தோடு அவர்களைத் தேடிச் சென்ற ஹெலிகாப்டர்கள் போட்ட உணவு பார்சல்களிலிருந்தவற்றையும் அவர்கள் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தனர்.
அமேஸான் பிரதேசத்தில் இருந்த கிழங்குகள், கொட்டைகள், வேர்கள் ஆகியவற்றையும் உண்டு அவர்கள் உயிருடன் இருந்தனர் என்று Luis Acosta of the National Indigenous Organaisation of Columbia கூறியது.
“நாம் இயற்கையுடன் ஒரு குறிப்பிட்ட தொடர்பைக் கொண்டிருக்கிறோம்” என்று ஜேவியர் பெடன்கோர்ட் (Javier Betancourt) என்ற இன்னொரு ONICE தலைவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், “ காட்டில் வாழ்ந்து அதைக் காத்து வரும் குடிமக்கள் போல உலகம் இப்படிப்பட்ட விசேஷ தொடர்பை இயற்கையுடன் கொண்டிருக்க வேண்டும்” என்றார்.
பகோடாவில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரி ஒன்றில் குழந்தைகள் நல்ல உற்சாகத்துடனுன் ஆரோக்கியத்துடனும் இருக்கச் செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவும் (Gustavo Petro) இதர அதிகாரிகளும் சென்று பார்த்தனர்.
பாதுகாப்பு மந்திரி இவான் வெல்ஸ்குயஸ் (Defence Minister Ivan Velsquez குழந்தைகள் குழுவைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்ட 13 வயதான பெண்ணான லெஸ்லி முகுடியை (Lesly Mucutuy) புகழ்ந்தார்.
“அவளது தைரியத்தை போற்றுவதோடு நிற்காமல் அவளது தலைமையையும் நாம் உணர வேண்டும். அவளால் தான் – அவளது காடு பற்றிய அறிவினால் தான் – இதர மூன்று குழந்தைகளும் அவளது பாதுகாப்பினால் உயிருடன் இருந்தனர்” என்றார் அவர்.
லெஸ்லியின் ஒன்பது வயதான தங்கை சொலினி (Soleiny) “நிறையப் பேசுகிறாள்” என்று குழந்தைகள் காப்பக இயக்குநரான ஆஸ்ட்ரிட் சஸெரஸ் (Astrid Caceres) கூறினார்.
ஐந்து வயதான குழந்தை டியன் படிப்பதற்கு புத்தகங்கள் கேட்கும் போது ஒரு வயதான குழந்தை நர்ஸுகளுடன் நம்ப முடியாத அளவில் அமைதியுடன் இணக்கமாக இருக்கிறது” என்றார் அவர்.
இரண்டு இளம் குழந்தைகளின் தந்தையான மானுவல் ரானொகு (Manuel Ranoque) ஞாயிறு அன்று கூறுகையில், லெஸ்லி அவளது தாயார் நான்கு நாட்கள் வரை உயிருடன் இருந்ததாகத் தெரிவித்தாள்” என்றார்.
இறப்பதற்கு முன்னர், இடிபாடுகள் நிறைந்த அந்த இடத்திலிருந்து “போய் விடுங்கள்” என்று அவர் கூறினாராம்.
இதற்கு மேல் அவர் எதையும் கூறவில்லை.
அந்தப் பகுதியைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் நூறு ராணுவ வீரர்களுடன் இணைந்து “ஆபரேஷன் ஹோப்” (Operation Hope) என்ற பெயரில் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர்.
காடுகளின் அந்தப் பகுதி பற்றிய தகவல்கள் அவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்தது.

ராணுவ ஹெலிகாப்டர்கள் குழந்தைகளின் பாட்டி அவர்களின் ஹுயிடோடோ (Huitoto) மொழியில் “ஒரே இடத்தில் இருக்குமாறு” கூறியதை ஒலிபரப்பியது.
இந்த விபத்தினால் காட்டில் இருந்த சமயத்தில் இரு குழந்தைகளின் பிறந்த நாளும் வந்தது. டியனுக்கு ஐந்து வயதானது. கிறிஸ்டினுக்கு ஒரு வயதானது.
குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டம் இனி தான் நடக்க இருக்கிறது’ என்று இயக்குநர் சஸெரஸ் கூறினார்.
அற்புதமான இந்த செய்தி உணர்த்தும் உண்மை – காலன் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – என்பதைத் தான்!
**
நன்றி : கல்கத்தாவிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழ் –
TRUTH Vol 91 Issue 11 dated 30th June 2023