QUIZ மதுரை மீனாட்சி பத்து QUIZ (Post No.12,248)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,248

Date uploaded in London – –  9 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.மீனாட்சி கல்யாணத்தால் உண்டான நதியின் பெயர் என்ன?

xxxxx

2.கோவில் குளத்தின் பெயர் என்ன

xxxxxx

3.மீனாட்சி அம்மனுக்கு தங்கத்தில் காலணிகள் செய்த வெள்ளைக்கார கலெக்டர் பெயர் என்ன ?

xxxxxx

4.மதுரை மீனாட்சி கோவில் மதிலின் பெயர் என்ன ?

xxxxxx

5.மதுரை மீனாட்சி கோவிலுக்கு எத்தனை நுழை வாயில்கள் ?

xxxxxx

6.உயர்ந்த கோபுரம் எது ?

Xxxx

7.மீனாட்சி பிறந்த போது அம்மா, அப்பா என்ன கவலைப்பட்டார்கள் ?

xxxxx

8.மீனாட்சியின் ஒரிஜினல் பெயர் என்ன ?

xxxxxx

9.மீனாட்சி அம்மனின் தந்தை, தாயார் பெயர்கள் என்ன ?

xxxxx

10.முஸ்லீம் சுல்தானால் 40 ஆண்டுக்காலம் பூட்டிக்கிடந்த மீனாட்சி கோவிலை யார் மீண்டும் திறந்தார்?

xxxx

Answers விடைகள்

1.கல்யாணச் சாப்பாடு மிஞ்சிவிடுமே என்று பெண் வீட்டார் கவலைப்பட்டபோது, சிவனின் குட்டிபூதமான குண்டோதரன்,  அனைத்தையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டு தண்ணீர் தாக்கத்தில் தவித்தான் . சிவன் ‘வை கை’ என்று சொல்லி பூமியில் கையை வைக்கச் சொன்னார். ‘வை’ ‘கை’ நதி ஊற்றாகப் பொங்கி எழுந்தது.

Xxxxxx

2.பொற்றாமரைக்குளம் ; தங்கத் தாமரை மலர்ந்த இடம்.

Xxxxx

3.பீட்டர் ரோஸ் ; பெரிய மழையில் கட்டடத்தின் மீது இடி விழும் முன் பச்சைப் பாவாடையுடன் வந்து எழுப்பி, தன உயிரையே காப்பாற்றியதால் மீனாட்சிக்கு தங்கச் செருப்பு அணிவித்தார்.

Xxxxxx

4.கபாலி மதில் ; திருஞான சம்பந்தர் தேவாரத்தில் வருகிறது

Xxxxxx

5.ஐந்து ; 4 பெரிய கோபுரங்கள் + அம்மன் சந்நிதி வாயில்

Xxxxx

6.தெற்கு கோபுரம் . மொத்தம் சிறிதும் பெரிதுமாக 14 கோபுரங்கள் உள்ளன . தெற்கு  கோபுரத்தின் உயரம் 170 அடி (சுமார் 52 மீட்டர்)

Xxxxx

7.அந்தச் சிறுமிக்கு 3 முலைகள் இருந்தன. ஆனால் அவள் தனக்குரிய கணவனைக் காணும்போது மூன்றாவது முலை மறைந்துவிடும் என்று அசரீரி எழுந்தது .அவர்களுடைய கவலையும் மறைந்தது. சுந்தர  ஈஸ்வரர் என்னும் சொக்க  நாதனைக் கண்டவுடன் அவருடைய மூன்றாவது மார்பகம் மறைந்தது

Xxxxx

8.தடாதகைப் பிராட்டி. சம்பந்தர் தேவாரத்தில் அங்கயர் கண்ணி ;

அங்கயர் கண்ணி = சம்ஸ்க்ருதத்தில் மீனாட்சி.

Xxxxxx

9.தந்தை – மலயத்வஜ பாண்டியன் , தாயார் – காஞ்சன மாலா

Xxxxx

10.விஜயநகர சாம்ராஜ்ய படைத்தலைவர் கம்பண்ண உடையார். அந்த அற்புதத்தை அவர் கூடவே வந்த அவருடை ய மனைவி கங்கா தேவி , மதுரா விஜயம் என்ற நூலில் ஸம்ஸ்க்ருத கவிதைகளாக எழுதி வைத்துள்ளார்

—-subham—–

Tags-  மதுரை மீனாட்சி , கபாலி மதில், மதுரா விஜயம்

Leave a comment

Leave a comment