
Post No. 12,253
Date uploaded in London – – 10 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
1.மாணிக்கவாசகரின் இயற்பெயர் என்ன?
xxxx
2.மாணிக்கவாசகர் காலத்தில் நடந்த நரி-பரி திருவிளையாடலை யார் முதலில் குறிப்பிடுகிறார். அதிலிருந்தது நமக்குத் தெரிவது என்ன ?
xxxxx
3.மாணிக்கவாசகர் கால பாண்டிய மன்னர் யார்?
XXXXX
4.மாணிக்கவாசகர் பற்றி இன்றுவரை துலங்காத மர்மம் என்ன?
XXXXX
5.மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம் தவிர அவர் வேறு என்ன நூல்
பாடினார்?
xxxxx
6.மாணிக்கவாசகர் பாடிய நூலில் அவரே குறிப்பிடும் மன்னர் பெயர் என்ன ?
xxxxx
7. திருவாசகத்தை முழுதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்? சைவத் திருமுறைகளில் அது எங்கே இடம்பெறுகிறது?
Xxxxxx
8.மாணிக்கவாசகரின் திருவாசக முதல் பாடலிலும் கடைசி பாடலும் உள்ள ஒற்றுமை என்ன?
xxxx
9.மாணிக்கவாசகரின் எந்தப் பாடலில் டார்வினின் பரிணாமக் கொள்கையும் (Theory of Evolution )இந்துக்களின் மறுபிறப்புக் கொள்கையும் (Reincarnation or Rebirth) வருகிறது?
Xxxxx
10.மாணிக்கவாசகரின் எந்தப்பாடலில் BIG BANG THEORY பிக் பேங் என்ற வானியல் அண்ட வெடிப்புக் கொள்கை வருகிறது ?
Xxxxx

விடைகள்
1.மாணிக்கவாசகரின் இயற்பெயர் எவருக்கும் தெரியாது; அவர் பிறந்த திருவாதவூரின் பெயரால் வாதவூரார் என்றும் இறைவன் கொடுத்த பெயரால் மாணிக்க வாசகர் என்றும் அழைக்கப்படுகிறார்
(என் ஆராய்ச்சிக்கட்டுரையில் வாதவூர் இறைவன் பெயர்தான் அவர் அம்மா, அப்பா சூட்டிய பெயர் என்று காட்டியுள்ளேன்;அவருடைய இயற்பெயர் வேதபுரீஸ்வர சத்தியதாசன்= பொய் அடிமைஇல்லாத புலவர்)
xxx
2.தருமி என்ற பிராமணப் புலவருக்கும் நக்கீரருக்கும் ஏற்பட்ட சண்டையைப் பாடிய அப்பர் பெருமானே தே வாரத்தில் நரி- பரி அதிசயம் பற்றியும் பாடுகிறார் (காண்க- மாணிக்கவாசகர் காலம் எது?) அதிலிருந்தது நமக்குத் தெரிவது மாணிக்கவாசகரின் காலம் தேவாரம் பாடிய மூவருக்கும் முந்தியது.
மேற்கோள்கள்:-
1.தருமி பொற்கிழி கதை
நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன் காண்
– திருப்புத்தூர் தாண்டகம், அப்பர் தேவாரம்
2.நரி—பரி லீலையும் அப்பர் தேவாரத்தில் வருகிறது.
–
நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும்
விரதங் கொண்டு ஆடவல்லானும் விச்சின்றி நாறு செய்வானும்
முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த
அரவு அரைச்சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே
–(4-33 அப்பர் தேவாரம்,திருவாரூர் பதிகம்)
xxxxxx
3. அரிமர்த்தன பாண்டியன் காலத்தில் மாணிக்கவாசகர் வாழ்ந்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. ஆனால் வரலாற்றில் அப்படி ஒரு பாண்டியனைக் காணமுடியவில்லை. இருந்த போதிலும் திருவிளையாடல் புராணம் குறிப்பிடும் மன்னர் பட்டியலைக் கொண்டு பார்த்தால் இவருக்குப் பின்னரே சம்ப்ந்தர் கதை வருகிறது. மாணிக்கவாசகருக்கும் சம்பந்தருக்கும் இடையே பெரிய மன்னர் வரிசை இருக்கிறது!
Xxxxxx
4.பெரிய புராணமும் திருத்தொண்டத்தொகையும் குறிப்பிடும் நாயன்மார் பட்டியலில் இவர் பெயர் நேரடியாக இல்லை. அதே போல மாணிக்கவாசகர் பாடல்களிலும் தேவார மூவர் பெயர் நேரடியாக இல்லை.; இது ஏன் என்றே தெரியவில்லை.
xxxxxxx
5.பாவை பாடிய வாயால் கோவை பாடுக என்றவுடன் அவர் திருக்கோவை பாடியதாக சொல்லுவார்கள்
xxxxxx
6.பெரிய வரகுணன் ; (இது இரண்டு பாண்டியர்களுக்கு இருந்த பெயர்.).
xxxxxxx
7.ரெவரெண்ட் ஜி .யூ .போப் G U Pope என்ற கிறிஸ்தவ மத பிரச்சாரகர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அது எட்டாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது .
xxxxx
8.ஓம்காரம்
திருவாசகத்தின் முதல் பாடலிலும் (சிவபுராணம்), கடைசி பாடலிலும் ஓம்காரம் ஒலிக்கும்.
இதே போல பாரதியின் பாஞ்சாலி சபதமும் ஓம் காரத்தில் துவங்கி ஓம்காரத்தில் முடியும்
xxxxx
9.புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.
யாப்பிலக்கணம் காரணமாக, பரிணாம வளர்ச்சியின் வரிசை சிறிது மாறியிருப்பதைக் காணலாம். டார்வினின் பரிணாமக் கொள்கை
xxxxxxx
திருவண்டப் பகுதியில் மாணிக்கவாசகர் — எண்ணற்ற பலகோடி நட்சத்திர மண்டலங்களிருப்பது பற்றி பாடி வியக்கிறார்:
அண்டப்பகுதியின் (UNIVERSE IS EGG SHAPED) உண்டைப் பிறக்கம் (BIG BANG)
அளப்பருந்தன்மை வளப்பெருங்காட்சி
ஒன்றனுக்கொன்று (GRAVITY SUSTAINS IT )நின்றெழில் பகரின்
நூற்றொருகோடியின் (BILLION SUNS) மேற்பட விரிந்தன
—திருவாசகம்
பாரதியும் ,
நக்கபிரானருளால் இங்கு
நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்
தொக்கன அணடங்கள் வளர்
தொகைபல கோடிபல் கோடிகளாம்
இக்கணக்கு எவர் அறிவார் – புவி
எத்தனை உளதென்பது யார் அறிவார்
என்று பாடி வியக்கிறார்.
—சுபம்—-
Tags- மாணிக்கவாசகர், நரி -பரி , அப்பர், திருவாசகம், திருக்கோவை, Quiz