தெரிந்த ஊர், தெரிந்த கதை: புதிய விளக்கங்கள்!! (Post No.12,260)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,260

Date uploaded in London – –  11 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மதுரைத் தமிழ் அறிஞர் திரு சொ சொ மீ சுந்தரம், லண்டனில் உள்ள ஈ லிங் கனக துர்கை அம்மன் கோவிலில் தொடர் சொற் பொழிவு நடத்தி வருகிறார். காலை 11 மணிக்கும் மாலை 7 மணிக்கும் நடத்திவரும் 60 நிமிட  சொற் பொழிவு 18-7-2023 வரை தொடரும் . தினமும் ஏதேனும் சில புதிய செய்திகளை அறிந்து வருகிறேன். நேரில் வருவதற்கு இயலாதவர்களுக்கு  இதோ புல்லட்in Bullet Points  பாயிண்ட்ஸ் :–

இன்று 11-7-2023ல்- திருக்கடவூரின் மூன்று சிறப்புகளை எடுத்துரைத்தார்.

1. எமன் அடிபட்டு உயிழந்தது;  மார்க்கண்டேயன் என்றும் 16 வயது ஆன கதை 

2.குங்கிலியக் கலய நாயனார் அருள்பெற்றது

3.அபிராமி பட்டர் கதை

xxxx

நாலு ஊரில் நாலு பேருக்கு முதல் மரியாதை!

மதுரையில் யாருக்குத் தெரியுமா முதல் வழிபாடு?

அம்மா மீனாட்சிக்கு ;

சிதம்பரத்தில்  யாருக்குத் தெரியுமா முதல் வழிபாடு?

அப்பாவுக்கு; அதாவது நட ராஜப் பெருமானுக்கு; சிவகாமிக்கு அப்புறம்தான் .

புள்ளிருக்கு வேளூர் என்னும் வைத்தீஸ் வரன் கோவிலில்?

குழந்தைக்கு; அதாவது ; முத்துக்குமார சாமி என்னும் முருகனுக்கு. அங்கு கார்த்திகை அபிஷேகத்தைக் காண வேண்டும்

அடியாருக்கு எங்கு தெரியுமா முதல் மரியாதை ?

ஆவுடையார் கோவிலில் ; அங்கே மாணிக்க வாசகருக்குத் தான் எல்லாம் ; அர்ச்சனை, அபிஷேகம், புறபாடு எல்லாம் அவருக்கே ; அங்கே லிங்கம் கிடையாது ; ஆவுடையார் மட்டும்தான் .

Xxxxx

எங்கே கூட்டம் சேரும்?

திரு பைஞீலியில் எமன் சந்நிதியில்தான் அதிக கூட்டம் : சிவன் சந்நிதியில் அல்ல

திருக்கடவூரில் தாம் காலால் உதைத்தமையால் மாண்ட தர்மராசனுக்கு இறைவன் மீண்டும் குழந்தையாக உயிர் கொடுத்தத் தலம் திரு பைஞீலி.

குடைவரைக் கோயிலாக அமைந்துள்ள ஒரு சந்நிதி இங்கு எமனுக்காக உள்ளது. எமனுக்கே அருள் கிடைத்ததால் நமக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு!

திருநள்ளாற்றில் சிவன் சந்நிதியில் கூட்டமே இல்லை . எல்லோரும் சனீஸ்வரன் (சனை சரன் ) சந்நிதியில் பெரும் கூட்டமாக நிற்கிறார்கள். அவனுடைய வாகனமான காக்கைக்கு கூட தங்க கவசம். தங்கக்  காக்கை! ஏராளமான அர்ச்சகர்கள் அங்கே நிற்கிறார்கள்.

Xxxxx

குங்கிலிக் கலய நாயனார்  

திருக்கடவூரில் தினமும் குங்கிலிய தூபம் இடும் திருப்பணியை நியதியாகச் செய்து வந்தார். ஆதலால் அவரைக் குங்கிலிக் கலய நாயனார்  என்று அழைத்தனர்.தன்னிடமும் இருந்த பொருளை எல்லாம் சிவபெருமானுக்கு குங்கிலிய புகை போடுவதிலேயே செலவழித்ததால் குடும்பம் பசி பட்டினியால் வாடியது ; அப்படியும் அவர் குங்கிலியம் ஏற்ற விரும்பியதால் மனைவி தன தாலியையும் கொடுத்துவிட்டார். அதை வாங்கிக் கொண்டு பசி, பட்டினி தீர ஏதேனும் வாங்குங்கள் என்று சொல்லி அனுப்பினாள் . வழியில் ஒரு நீண்ட வண்டி முழுதும் குங்கிலியம் ஏற்றிவந்த வியாபாரியிடம் தங்கத் தாலியைக் கொடுத்து,  வண்டி நிறைய குங்கிலியம் வாங்கி , நேராகக் கோவிலுக்குச் சென்றார் . இறைவனுக்கு அதைத்  தந்து வழக்கமான பணியைச் செய்தார் ; குடும்பத்தையே மறந்தார். அன்றிரவு அவரது மனைவி கனவில் தோன்றிய சிவ பெருமான் அவருக்கு வேண்டியதனைத்தையும் அருளினார் . வீடே அரண்மனையாக மாறியது . வீட்டிற்குத் திரும்பி வந்த நாயனாருக்கு வீடே அடையாளம் தெரியாத அளவுக்கு செல்வ வளம் நிரம்பியிருந்தது . சிவனே தன கனவில் காட்சி தந்த விஷயத்தை மனைவி விளக்கினார் . தனக்குக் கிடைக்காத காட்சி மனைவிக்கு கிடைத்தே என்று ஏங்கினார்

ஏன் மனைவிக்கு முதல் தரிசனம் கிடைத்தது?

ஒரு பெண் இழக்க முடியாத தாலியையே தந்ததால் அவருக்கு முதல் தரிசனம்!.

குங்கிலியப் புகை பரவும் தெற்குத் தெருவில் மரணமே ஏற்படுவதில்லை !

சாம்பிராணி ஏன் போடுகிறோம்?

சாம்பிராணி புகை கிருமி நாசினி. எல்லா நோய்க் கிருமிகளையும் கொன்று விடும்.

Xxxx

இன்னும் ஒரு கதை சொல்கிறேன் என்று தொடர்ந்தார் சொ சொ மீ சுந்தரம் .

அருகில் திருப்பனந்தாள் என்ற தலம் இருக்கிறது .

இவ்வாலயம் பனைமரத்தை தலவிருட்சமாக கொண்டு விளங்குவதால் திருப்பனந்தாள் ஆயிற்று. இன்றும் ஆலய பிரகாரத்தில் இரு ஆண் பனை தெய்வீக தன்மையுடன் உள்ளது. தாலம் என்றால் பனை. பனை வனத்தில் வீற்றிருக்கும் ஈசன் தாலவனேஸ்வரர் ஆனார். ஈஸ்வரன் மேற்கு நோக்கியும் அம்பாள் கிழக்கு நோக்கியும் எழுந்தருளி இருக்கிறார்கள். . தாடகை என்னும் மங்கை குழந்தை வரம் வேண்டி தினமும்  மாலை தொடுத்து ஈசனுக்கு அணிவித்தாள். ஒரு நாள் கையில் நீர்க்குடத்துடன் சென்று  மாலையை அணிவிக்க முயன்றபோது  தாவணி நழுவவே தயங்கி நின்றாள் . , அவளுக்கு சிரமம்  ஏற்படாமலிருக்க இறைவனே குனி ந்து மாலையை ஏற்றார். அன்று முதல் தலைசாய்ந்த நிலையிலேயே இருந்தது. அப்போதை ய சோழமன்னன் யானை, குதிரை கொண்டு கட்டி இழுத்தும் பலன் தரவில்லை. குங்கிலியக்கலய நாயனார்  வந்தபோது ஈசனின் தலையை நிமிர்த்த எண்ணி ஒரு கயிற்றை தன் கழுத்தில் சுருக்கிட்டு மறுமுனையை ஈசன் கழுத்தில் கட்டி இழுத்தார். மிக எளிதாக தலை நிமிர்ந்தது

Xxxx

ஆண்குழந்தை பெறுவதற்கு வழி என்ன?

மூச்சை இழுத்து நிதானமாக 108 முறை ஓம் நமசிவாய சொன்னால் எந்த நோயும் வராது .

வலது புற நாசியில் மூச்சு ஓடுவது சூரிய கலை. இடது புற நாசியில் மூச்சு ஓடுவது சந்திர  கலை; இரு புறமும் ஓடுவது சுழுமுனை .

வலது புற நாசித்  துவாரம் வழியே மூசசு விடுவது நல்லது என்கிறார் வடலூர் வள்ளலார் . 

கணவன் மனைவி சேருகையில் கணவன் வலது நாசியில் சுவாசிப்பானால் ஆண்  குழந்தையும் இட து நாசியில் சுவாசிப்பானால் பெண் குழந்தையும், சுழுமுனையில் சுவாசம் சென்றால் அலியும் பிறக்கும் என்கிறார் திருமூலர் . கெட்ட வாயுவான அபானன் ஏற்பட்டால் கெட்ட குழந்தை பிறக்கும் என்கிறது திருமந்திரம்.

ஆகையால் இடது புறம் சாய்ந்து படுத்தால்  வலது நாசியில் சுவாசம் ஓடும்.

Xxxxx

சிவன் செய்தது நியாயமா அநியாயமா ?

எமனுக்கு ஏன் காலன் என்று பெயர்?  அவன் மிகவும் TIME  / மணி பார்த்து எல்லாம் செய்வதால் அவனுக்கு காலன் என்று பெயர். அவன் late லேட் டாகவும் வரமாட்டான்; முன்னதாகவும் before time   வர மாட்டான்; உரிய நேரத்தில் வந்து உயிரை எடுப்பான்.  மார்க்கண்டேயனுக்கு 16 வயதுதான் என்பது தீர்மானிக்கப்பட்ட து ; எமன் உரிய நேரத்தில் வந்து தன் கடமையைச் செய்தான் ; அப்படியிருக்கும்போது எமனை , சிவ பெருமான் இடது காலால் உதைத்து எமனை வதை செய்தது நியாயமா ?

அவன் ஒரு மிஸ்டேக்Mistake  செய்தான். வீசிய பாசக் கயிற்றை சிவன் கழுத்திலும் போட்டுவிட்டான் . ஏனெனில் மார்க்கண்டேயன் தனது முடிவு நெருங்குவதை எண்ணி சிவலிங்கத்தை சிக்கெனப் பிடித்தான் ; ஆகையால் எமன் இருவர் கழுத்திலும் விழுமாறு பாசக் கயிற்றை வீசி அடிபட்டான் .

ஏன் இடது கால் ?

அதிலும் கூட சிவன் கருணை காட்டினார் . இடது புறம் அன்னை வசிக்கும் கால். அம்மாவின் அருள் அவனுக்குக் கிடைக்கவே அவன் மீண்டும் குழந்தையாக திருப் பைஞீலியில் பிறக்க முடிந்தது.

Xxxxx

பிறவா யாக்கைப் பெரியோன் !!

பணம் இல்லாவிடில் நாம் யாரிடம் பணம் கேட்போம் ?

பணம் படைத்தவர்களிடத்தில் கேட்போம்  .. பிறவி வேண்டாம் என்றால் யாரிடம் கேட்கவேண்டும் ?

யாருக்குப் பிறப்பு இல்லையோ , அவனிடம் கேட்க வேண்டும். பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை ; ஆதி அந்தம் இல்லாதவன் யார் ?

இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் சொல்கிறார் — பிறவா யாக்கைப் பெரியோன் சிவ பெருமான் என்று.

அவனைப் பிடிப்பதும் சிக்கெனப் பிடிக்க வேண்டும் என்பார் மாணிக்கவாசகர் .

(பால் நினைந்தூட்டும் …………… திருவாசகப்  பாடல்)

காரைக்கால் அம்மையார் சொன்னார் – பிறவாமை வேண்டும் பிறப்புண்டேல் உன்னை மறவாமை வேண்டும் என்று .

Xxxx

எல்லோரும் பெரிய புராணம் படிக்க வேண்டும் ; 63 நாயனார் கதைகள் உள்ளன

அடியார்களைச் சோதிக்கவா ஒவ்வொரு நாயன்மாருக்கும் சிவன் இடையூறுகளைத் தந்தான் ?

இல்லை .

அடியார்களின் பெருமையை விளக்கவே அப்படிச் செய்தான்  என்கிறார் சேக்கிழார் பெருமான்.

xxxx

சதுர கிரியில் ஒரு அனுபவம்

சதுர கிரியிலும் சிவன் சாய்ந்த நிலையில் காட்சி தருகிறார். காடுகளுக்கு இடையே உள்ள அந்த மலைக் கோவிலிலும் சிவன் சாய்ந்த நிலையில் இருக்கிறார். நான் திருவாசகத்தில் உள்ள 658 பாடல்களுக்கும் சிங்கப்பூரில் உரை சொல்லி சொற்பொழிவு ஆற்றினேன் . அதை அப்படியே சதுரகிரி கோவிலில் ஒலிபரப்பினார்கள். நான் சென்றபோது அங்கு திருவாசகத்தில் இருந்து இரண்டு பாடல்களைப் பாடினேன் ; என் குரலைக் கேட்டவுடன் நீங்கள் தான் அந்தப் பேச்சாளரா என்று கேட்டுவிட்டு  பட்டர்,  கோவிலைச் சுற்றிக் காட்டினார். நல்ல தரிசனம் ; அங்கே அமர்ந்து கொண்டிருந்தபோது ஒரு நாய் வந்து என் மடியில் படுத்துக்க கொண்டது ; ஒரு புறம் அச்சம் ; மறுபுறம் திகைப்பு . ஆடாமல் அசையாமல் இருந்தேன் . மாணிக்க வாசகர் , அவரது திருவாசகத்தில் 40 இடங்களுக்கு மேலாக தன்னை நாயேன் என்று சொல்லிப்பாடியது  நினைவுக்கு வந்தது . நாய் போன பின்னர் பட்டர் சொன்னது வியப்பில் ஆழ்த்தியது. சதுரகிரி மலை சித்தர்கள் உலா வும்  இடம் என்பது எல்லோருக்கும் தெரியும் . அங்கு நாய்கள் வடிவத்திலும்  சித்தர்கள் இருப்பார்கள் என்று பட்டர் சொன்னார் !!

அடுத்த கதை அபிராமி கதை

அபிராமி என்றால் மிகவும் அழகானவள் என்று பொருள் .

ஸ்ரீ சக்ரம் உள்ள இடம் . மாலையில் அபிராமி கதையைத் தொடர்கிறேன் என்று சரியாக பகல் 12 மணிக்கு

சொ சொ மீ சுந்தரம் தனது உரையை நிறைவு செய்தார்.

—- subham ——-

Tags- சொ சொ மீ சுந்தரம், சதுர கிரி, அனுபவம், திருக்கடவூர் , குங்கிலியம், நாயனார்

Leave a comment

Leave a comment