
Post No. 12,258
Date uploaded in London – – 11 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
1.மணிமேகலையை எழுதியவர் யார் ? இந்த நூல் எந்த மதத்தைப் போற்றும் காவியம் ?
xxxx
2.ஆபுத்திரன் யார்?
xxxxx
3.காவிரி நதி எப்படி உண்டானதாக இந்த நூல் செப்புகிறது ?
xxxxx
4.பேரின்பம் எது என்று இந்த நூல் காட்டுகிறது ?
Xxxxxx
5.இந்த நூலின்படி காவிரிப் பூம்பட்டினத்தின் மற்றோரு பெயர் என்ன ?
xxxxx
6.மணிமேகலா தெய்வம் மணிமேகலையை வான் வழியே எங்கு கொண்டு சென்றது ?
XXXXXX
7.மணிமேகலையை திருமணம் செய்துகொள்ளத் துடித்தவன் யார் ?
xxxxx
8.மணிமேகலைக்கு வற்றாத உணவுத்தரும் அமுத சுரபியை யார் கொடுத்தது ?
xxxxx
9.மணிமேகலை, வஞ்சி மாநகருக்குப் போனது ஏன் ?
Xxxx
10.இரட்டைக் காப்பியங்கள் எவை ?
xxxxxxxx
விடைகள்

1.சீழ்த்தலைச் சாத்தனார் ; பவுத்த மதம்
XXXXXX
2.வாரணாசியில் வாழ்ந்த அந்தணர் அபஞ்சிகனுக்குப் பிழை செய்த பாவம் நீங்க அவன் மனைவி சாலி, குமரிக்கு வந்து நீராடிவிட்டு மீளும்போது தனக்குப் பிறந்த குழந்தையை வழியில் விட்டுச் சென்றுவிட்டாள்..அந்தக் குழந்தையைப் பசு ஒன்று நாவால் தடவிக் கொடுத்து பாலூட்டி ஏழு நாள் வளர்த்தது. அங்கு தன் மனைவியுடன் வந்த இளம்பூதி என்னும் மறைகாப்பாளன் குழந்தையைத் தன் ஊருக்கு எடுத்துச்சென்று வளர்த்து ஆபுத்திரன் (= பசு மகன்) எனப் பெயர் சூட்டி கல்விகேள்விகளில் வல்லவனாக்கினான். சிந்தாதேவி (பௌத்த கோயில் தெய்வம்) அவன்முன் தோன்றித் தன் கையிலிருந்த அமுத சுரபி என்னும் பாத்திரத்தைக் கொடுத்தது. பின்னர் இது மணிமேகலையை அடைந்தது.
xxxxx
3.அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகங் கவிழ்த்த காவிரிப்பாவை
அதாவது சோழ மன்னன் காந்தமன் வேண்டிக்கொண்டபோது , அகத்திய முனிவன் தனது கமண்டலத்தைக் கவிழ்த்து காவிரி நதியை உண்டாக்கினார்.
XXX
4.பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிற வார் உறுவது பெரும்பெரின்பம்
பிறவி எடுத்தால் துன்பம் பெருகும்
ஆசையை ஒழித்து பிறவாத நிலை அடைவதே பேரின்பம்
XXXXXX
5.சம்பாபதி
XXXXX
6.மணிபல்லவம் தீவுக்கு கொண்டுசென்றது .
xxxxx
7.இளவரசன் உதய குமரன் ; அவனைக் காஞ்சாசனன் என்பவன் வெட்டிக்கொன்றான்
XXXXX
8.தீவதிலகை என்னும் தெய்வம்
XXXXXX
9.புகார் நகரத்தைக் கடல் கொண்டதால் அவளை வஞ்சி நகருக்குச் செல்லும்படி தீவதிலகை பணித்தது..
XXXXXX
10.சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள்.. சிலப்பதிகாரம் இல்லறத்தின் சிறப்பை விளக்கும். மணிமேகலை துறவறத்தின் சிறப்பை விளக்கும். இவை இரண்டும் ஐம்பெரும் காப்பியங்களில் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிலம்பில் வரும் முக்கிய கதா பாத்திரமமான மாதவியின் மகளே மணி மேகலை.. ஓன்றின் கதை மற்றொன்றில் தொடர்கிறது . மாதவியும் மணிமேகலையும் இறுதியில் பெளத்த துறவிகள் ஆகின்றனர் . சிலம்பை எழுதிய இளங்கோவும், மணிமேகலையை எழுதிய சீத்தலைச் சாத்தனாரும் சம காலத்திய புலவர்கள். ஒருவர் இயற்றிய நூலை மற் றொருவர் கேட்டனர்
—–subham—-
Tags–Tags–இரட்டைக் காப்பியங்கள்.. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், அமுத சுரபி