சிவபெருமான் நேரில் வந்தபோது நடந்தது என்ன? (Post N.12,269)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,269

Date uploaded in London – –  13 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

சிவபெருமான் கோவிலுக்குள் நேரில் வந்து தரிசனம் கொடுத்தபோது மக்கள் என்ன செய்தார்கள் என்பது வியப்பான செய்தியாகும்.

லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில் 18-7-2023 வரை தொடர் சொற்பொழிவாற்றிவரும் மதுரைத் தமிழ் அறிஞர், பேராசிரியர் சொ .சொ  மீ. சுந்தரம் அவர்கள் சொன்ன கதை :

ஒரு கோவிலுக்குள் பட்டர் மட்டும் தனித்திருந்த பொழுது சிவபெருமானே நேரில் வந்துவிட்டார்.தலையில் ஜடாமுடி; நெற்றியில் பட்டை; இடுப்பில் பாம்பு. ஆனால் பட்டருக்கோ  சிவ பெருமான் நேரில் வரமாட்டார் என்ற நம்பிக்கை.

எந்த டிராமா கம்பெனியிலிருந்து  வேஷத்தைக் கலைக்காமல் அப்படியே வந்து விட்டீர்கள்? என்று பட்டர் வினவினார்.

இல்லை, இல்லை; நான் வேஷம் போடவில்லை ; சிவ பெருமானே நான்தான் என்றார் ; அப்படியா நான் நம்ப வேண்டுமானால் இதோ இந்த பித்தளை மணியைத் தங்க மணி ஆக்கிக் காட்டுங்கள் என்றார் . சிவன் அதைக் கையில் வாங்கிவிட்டு பட்டரிடம் திருப்பிக் கொடுத்தார். அது தங்க மணி ஆனது..

சந்தேகமே இல்லை. அது தங்க மணிதான்.; மணி பள பளத்தது . உடனே  சிவனை அங்கே  இருக்கச் சொல்லிவிட்டு, வெளியே சென்றார் .

எல்லோரும் வாருங்கள் கோவிலுக்குள் சிவ பெருமானே வந்துவிட்டார்; சீக்கிரம் வாருங்கள், .சீக்கிரம் வாருங்கள், என்று கூவி அழைத்தார் .

எல்லோரும் கிசு கிசுத்தனர் ; என்னடா இது; பட்டர் சற்று முன்னர் கூட நன்றாகத்தானே இருந்தார்.எப்படிக் கிறுக்குப் பிடித்தது? என்றனர் . பட்டர் தங்க மணியை எல்லோருக்கும் காட்டி நீங்கள் தினசரி பார்த்த பித்தளை மணியைப் பாருங்கள். இது தங்கம் ஆகிவிட்டது என்று அடித்துக் கூறவே அனைவரும் ஓடிவிட்டனர்..

பட்டருக்கு ஒன்றும் விலங்காவில்லை; சற்று நேரத்தில் காட்சி மாறியது. கோவில் வாசலில் பெரிய கூட்டம்; எல்லோரும் வீட்டில் இருந்த மிகப்பெரிய சட்டி , பானை , அண்டா, குண்டாக்களுடன் வந்திருந்தனர் . இவ்வளவும் எளிதில் தங்கம் ஆகும் என்றால் சும்மாவா இருப்பார்கள்.

எல்லோருக்கும் சிவனிடம் என்ன கேட்க வேண்டுமோ அதைக் கேட்கத் தெரியவில்லை. அருட் செல்வத்துக்குப் பதில் பொருட் செல்வமே எல்லோர் மனதிலும் இருந்தது .

காரைக்கால் அம்மையோர் போன்றோர் பிறவாமை வேண்டும். பிறப்பு உண்டேல் உன்னை மறவாமை வேண்டும் என்று வேண்டினர் .

–சுபம்—-

tags — கோவில், நேரில், சிவ பெருமான் , தங்க ,மணி

Leave a comment

Leave a comment