எது கொடியது? எது இனியது? (Post No.12,276)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,276

Date uploaded in London –  15 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எது கொடியதுஎது இனியது?

ச.நாகராஜன்

எது கொடியதுஎது இனியது?

எது கொடியது?

ஒரு பெண்ணின் இதயம்.

ஒரு இல்லறத்தானுக்கு எது இன்பமும் லாபமும் தரத்தக்கது?

மனைவியின் நல்ல குணங்கள்.

எது காதல்?

மனதில் சுழலும் எண்ணம்.

எது கிடைப்பதற்குக் கடினமானது?

ஞானம்.

இதைச் சொல்லும் சுபாஷிதம் இது:

கிம் க்ரூரம்  ஸ்த்ரீ ஹ்ருதயம்

    கிம் க்ருஹிண: ப்ரியஹிதாய தாரகுணா: |

க: காம: சங்கல்ப:

     கிம் துஷ்கரசாதனம் ப்ரக்ஞா ||

சேவை செய்யா வாழ்வு அர்த்தமில்லா வாழ்வு!

நன்கு சத்துணவு ஊட்டப்பட்டு வலிமை கொண்டு நீண்ட ஆயுளுடன் இருக்கும் உடலால் என்ன பயன்?

மற்றவருக்கு சேவை செய்யாது வாழும் ஒருவன் பயனற்றவனே!

கிம் காயேன சுப்ருஷ்டேன வலினா சிரஜீவிதா |

யோ ந சர்வோபகாரி ஸ்யாஜ் ஜீவன்னபி நிரர்தக: ||

ஒரு பைசாவை ஏளனம் செய்பவன் பணக்காரனாக மாட்டான்!

ஒரு கௌரியை (கௌரி என்பது ஒரு மிகச் சிறிய மதிப்புள்ள நாணயம்) வெறுத்து ஏளனம் செய்பவன் ஆயிரம் காசைச் சேர்க்க மாட்டான்.
(அதாவது அவன் ஒருபோதும் பணக்காரனாக மாட்டான்)

அதே போல, ஒரு வினாடியை வீணாக்குபவன் வித்தையின் அடுத்த கரையை ஒரு போதும் அடைய  மாட்டான்.

அதாவது கல்விக் கடலை நீந்திக் கடக்கவே மாட்டான்.

கிம்காகிணீக: புருஷ: சஹஸ்ரம் நாஹிகச்சதி |

ததைவ கிம்முஹூர்தோபி வித்யாபாரம் ந கச்சதி ||

கல்வியும் காசும் சேரும் விதம்!

சிறு நொடிகளை வீணாக்குபவனுக்கு கல்வி எப்படி வரும்?

சிறு பைசாக்களை அலட்சியப்படுத்துபவனுக்கு பணம் எப்படி சேரும்?

கல்வியையும் பணத்தையும் ஒருவன் சிறு சிறு நொடிகளிலும் சிறு சிறு காசுகளினாலும் சேர்க்க வேண்டும்.

கிம் க்ஷணஸ்ய க்ருதோ வித்யா கிம்கணஸ்ய க்ருதோ தனம்|

க்ஷணஷ: கணஷச்சைவ வித்யாமர்த்தம் ச சாதயேத் ||

விதியே வெல்லும்!

எதற்காக அதிகம் சிந்தனை செய்கிறாய்?

ஏன் கவலையினால் சோகம் அடைகிறாய்?

தலையில் என்ன எழுதி இருக்கிறதோ

அதன் படி தான் அனைத்தும் நடக்கும்!

கிம் சிந்ததேன பஹுனா

   கிம் பா ஷோகேன மனஸி நிஹிதேன |

தன்னிச்சிதே பவிஷ்யதி

   விதினா லிகிதம் லலாடே யத் ||

வாழ்க்கை என்பது தான் என்ன?

வாழ்க்கை என்பது தான் என்ன”

குற்றமில்லாமல் இருப்பது.

சோர்வாக (மந்த்மாக) இருப்பது எதனால்?

கூரிய புத்தி என்றாலும் கூட பயிற்சி இல்லாமல் இருப்பதால்!

உலகியலில் எவன் எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பவனாவான்?

பகுத்தறிந்து ஆராயும் ஒருவனே எச்சரிக்கையுடன் இருப்பான்.

தூக்கம் என்பது என்ன?

உயிர் வாழ்வனவற்றின் அறியாமையே!

கிம் ஜீவிதமனவத்யம்

  கிம் ஜாடுத்யம் பாடவேப்யநம்யாஸ: |

கோ ஜாயந்தி விவேகீ

   கா நித்ரா மூடதா ஜந்தோ: ||

இப்படி சுபாஷிதங்கள் தரும் வாழ்க்கை உண்மைகளை அறிந்து கொண்டால் வாழ்க்கை வளமாக விளங்குமல்லவா? 

***

Leave a comment

Leave a comment