
Saumya Keava Temple, Karnataka
Post No. 12,282
Date uploaded in London – – 16 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Part Seven
39.Nimishamba Temple, Sri Rangapatnam
39. நிமிஷாம்பா கோவில் காவேரிக்கரையில் ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. மற்றும் மைசூரில் இருந்து சுமார் 17 கி.மீ-. தொலைவில் உள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயம். மைசூர் மும்மடி கிருஷ்ணராஜ உடையார் மகாராஜாவால் நிறுவப்பட்டுள்ளது. பக்தர்களின் பிரார்த்தனைகள் சொன்ன அடுத்த நிமிடமே நிறைவேறுவதால் இங்குள்ள அம்பிகைக்கு ‘நிமிஷாம்பாள்’ என்ற சிறப்பு பெயர் நிலவி வருகிறது. இங்கு கல்லால் அமைக்கப்பட்ட ஸ்ரீசக்கரத்தைக் காணலாம்.
சென்னை உள்பட ஏராளமான இடங்களிலும் நிமிஷாம்பா கோவில்கள் இருக்கின்றன. பார்வதி தேவி இவ்வாறு வணங்கப்படுகிறாள்
Xxxx
40. Pancha Lingeshwara Temple, Govindanahally பஞ்ச லிங்கேஸ்வரர் கோவில்
கோவிந்தனஹல்லி என்னும் இடத்தில் அமைந்த பஞ்ச லிங்கேஸ்வரர் கோவிலும் , ஹொய்சாள பாணியில் இருக்கிறது. ஐந்து முக லிங்கம் உள்ள கடவுளை இப்படி அழைப்பர். ஆனால் இந்தக் கோவிலில் சிவபிரானுக்கு ஐந்து தனி கர்ப்பக்கிரகங்கள் இருக்கின்றன மைசூரு தலக்காடில் 5 தனிக் கோவில்கள் இருக்கின்றன இங்கோ ஒரே கோவிலில் ஐந்து சிவாம்சங்களை தனித்தனி சந்நிதிகளில் காண்கிறோம்.
இங்குள்ள கணேசர் , மகிஷாசுர மர்தனி , பைரவர், சரஸ்வதி,வீரபத்ரர் உமாமஹேஸ்வரர், சப் த மாதா சிலைகள் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன 5 கர்ப்பக்கிரகங்களில்/ சந்நிதிகளில் சிவ லிங்கங்கள் சத்யஜோ தீஸ்வர, வாமதேவ, அகோர, தத்பருஷ ஈசான அமசங்களைக் குறிக்கின்றன.
விஷ்ணுவின் பல அவதாரங்களும் கல் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ளன ; கிளியுடன் பேசும் பெண் , பூப்பறிக்கும் காட்சி, கண்ணாடியில் முகம் பார்க்கும் பெண் ஆகியன குறிப்பிடத்தத்தக்க சிற்பங்கள் 1236-ம் ஆண்டு மன்னர் சோமேஸ்வர் கல்வெட்டு , புகழ்பெற்ற சிற்பி ருவரி மல்லிதாமா ஆகியோர் கல்வெட்டுகளையும் கோவில் சுவர்களில் காணமுடிகிறது
Xxxx
41. Narasimhaswamy temple, Holenarasipur நரசிம்ம சுவாமி கோவில்
ஹாசன் ஜில்லாவில் ஹேமாவதி நதிக்கரையில் இருக்கும், ஹோல நரசிப்பூரில் நரசிம்ம சுவாமி கோவில் இருக்கிறது.மைசூரிலிருந்து 80 கி.மீ .
சோழர் பாணியில் கட்டப்பட்டாலும் சுமார் 600 ஆண்டு வரலாறு உடையதுதான் ; வசிஷ்ட மகரிஷி வந்து பிரார்த்தித்த இடம் என்பது நம்பிக்கை த்ரி கூடாசல என்றும் இக்கோவிலை அழைப்பர். ஏனெனில் லட்சுமி நாராயணர், லெட்சுமி நரசிம்மர் , கோபால கிருஷ்ணர் மூர்த்திகள் இருக்கின்றன.
கோவிலில் ஸ்ரீ பிரசன்ன கமல மகாலெட்சுமி சந்நிதியும் உளது.
Xxxx
42. Bhoo Varaha Swamy Temple, Kallahalli பூ வராக சுவாமி கோவில்
மைசூரிலிருந்து 45 கி.மீ .தொலைவில் கல்லஹல்லியில் பூவராக சுவாமி கோவில் இருக்கிறது. 18 அடி உயரத்தில் வராக அவதாரத்தில் விஷ்ணு கா ட்சி தருகிறார்.மூன்றரை அடி உயர பூதேவியுடன் அமர்ந்த நிலையில் உள்ள சிலை இது . கோவிலுக்குள்ளேயே ஹேமாவதி நதி ஓடுகிறது . பரு வமழைக் காலங்களில் கோவில் சுவர் வரை தண்ணீர் வந்துவிடும் . மன்னர் வீர வல்லாளன் காலத்தில் கட்டப்பட்ட கோவில் ; 25 வகையான பூக்கள், பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்வது கோவிலின் சிறப்பு அம்சம்.
xxxx
43. Soumyakeshava Swamy Temple, Nagamangala நாக மங்கல ஸெளம்ய கேசவ கோவில்
மைசூரிலிருந்து 60 கி.மீ . தொலைவில் உள்ளது நாகமங்கலம்..
மாண்ட்யா மாவத்த த்தில் உள்ள இந்தக் கோவில் 12 ஆம் நூற்றாண்டை ச் சேர்ந்த ஹொய்சாள பாணி கோவில் ஆகும் . இந்த விஷ்ணு கோவில், ராகு-கேது பரிகார தலம் . மன்னர் விஷ்ணுவர்தன் காலத்தில் வைஷ்ணவம் பரவியது . மங்கலம் என்றால் பிராமணர் ஊர்.. வீர வல்லாள சதுர்வேதி பட்டார நகர என்ற பெயரும் உண்டு .
நிறைய கலைவேலைப்பாடமைந்த இந்தக் கோவில் தொல்பொருட் துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது ஏழு நிலைக் கோபுரத்துடன் கட்டப்பட்டது .
மண் டபத்தில் செதுக்கப்பட்ட ஆதி சேஷ னைச் சுற்றி 108 சங்குகள் காணப்படுகின்றன. தலைப்பகுதி ராஹு என்றும் அடிப்பகுதி கேது என்றும் சொல்லப்படுகிறது பரிகாரம் செய்ய விரும்பு வோர் சிலைக்கு கீழே நிற்க அர்ச்சகர் பரிகார பூஜைகளைச் செய்கிறார். கோவிலில் 3 சந்நிதிகள் முக்கியமானவை நரசிம்ம சுவாமி, ருக்மிணி சத்யபாமாவுடன் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் ஸெளம்ய கேசவரை அடுத்தடுத்து உள்ளனர் . கேசவர் சிலை ஆறு அடி உயரம் . கலை வேலைப்பாடு அமைந்த தூண்களை எங்கும் காணலாம்.

Temple in Melkote, Karnataka
To be continued………………………..
Tags– கர்நாடகம், மாநிலம், கோவில்கள், பாகுதி 7