
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,280
Date uploaded in London – 16 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
சுபாஷித செல்வம்
ச.நாகராஜன்
வெற்றி தரும் விஜய யோகம்!
கிஞ்சித் சந்த்யாமதிக்ரம்ய கிஞ்சிதுன்னேதின்னாதாரகம் |
விஜயா நாம யோகோயம் சர்வகார்யாதி சித்தித: ||
மாலை நேர சந்த்யாகாலம் முடிந்த பின்னர் சற்று நேரம் கழித்து நக்ஷத்திரங்கள் வானில் சிறிது தோன்ற ஆரம்பிக்கும் போது அந்த (அற்புதமான காலச் சேர்க்கையானது) யோகம் விஜயா என்று அழைக்கப்படுகிறது. அது எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றியைத் தரும் ஒன்று.
குத்தமிதம் என்றால் என்ன?
கேஸஸ்தனாதிக்ரஹணே ஹர்ஷாதிப்ரமித்தே முகே |
துக்காதிஷ்கரணம் தன்வயா யத் தத் குத்தமிதம் மதம் ||
அழகிய மேனி கொண்ட ஒரு யுவதி அவளது தலை கேசத்தை இழுத்துப் பிடிக்கின்ற போதோ அல்லது அவளது மார்பகம் அழுத்தப்படும்போதோ வலிப்பது போலப் பாசாங்கு செய்கின்ற போது அவள் முகம் பரவசத்தை அடைகின்றதைக் காண்பிக்கும், அந்த நிலையே குத்தமிதம் என்று கூறப்படுகிறது.
புதிர்க் கவிதை
காக்கைக்கு சந்தோஷம், நரிக்கோ..?
கேசவம் பதிதம் த்ருஷ்டதா த்ரோணோ ஹர்ஷமுபாயத: |
ருதந்தி கௌரவா: சவேம் ஹா கேசவம் கதம் கத: ||
ஒரு சவம் நீரில் விழுகின்ற போது ஒரு காக்கை மிகுந்த சந்தோஷத்தை அடைகிறது (தனக்கு விருந்து கிடைத்து விட்டது என்று).
ஆனால் நரிகளோ ஏமாற்றத்தால் ஊளையிடுகின்றன – “ஓ, கடவுளே க்ருஷ்ணா! எப்படி அது போனது?” என்று!
இந்த சுபாஷிதத்தில் கேசவம் என்ற வார்த்தை இரு இடங்களில் வருகிறது. முதல் இடத்தில் கே + சவம் என்று பிரித்துக் கொள்ள வேண்டும். இது சவத்தைக் குறிக்கிறது. அடுத்த இடத்தில் கேசவம் என்பது பகவான் கிருஷ்ணனைக் குறிக்கிறது.
இது ஒரு சொல் விளையாடல்!
இது கூட ஸ்லோகம் புதிர் என்ற வகையில் சேர்ந்த ஒன்று!
கெட்ட சகுனம் காட்டும் நாய்!
கேஷாஸ்மபஸ்மோல்முகஜீர்ணவஸ்த்ராண்யு
அங்காரரஜ்ஜிவந்தனகர்பராணி |
வக்த்ரே சமாசாத்ய ச யாதி யாதுர்
த்ருக்கோசரே பூரிபயாவஹ: ஷ்வா ||
ஒரு நாயானது மனிதனின் தலை மயிர், அல்லது ஒரு கல், சாம்பல், தீச்சுள்ளி, கிழிந்த துணி, கரி, கயிறு, விறகு, ஓட்டாங்குச்சி ஓடு ஆகிய இவற்றில் எதையாவது ஒன்றை வாயில் கவ்விக் கொண்டு பயணத்திற்கு புறப்பட இருக்கும் ஒருவனின் முன்னால் வந்தால் அப்படிப்பட்ட நாய் அந்த மனிதனுக்கு தீய சகுனத்தைக் காண்பிக்கிறது.
கிம் த்வம் ந வேத்ஸி ஜகதி
ப்ரக்யாதம் லாபகாரணே மூலம் |
விதிலிகிதாக்ஷரமாலம்
பலதி கபாலம் ந பூபால: ||
இந்த உலகில் அடையும் அனைத்து லாபங்களுக்கும் அடிப்படையான காரணம் என்ன என்று உனக்குத் தெரியுமா?
தலையில் கபாலத்தில் விதியினால் வரிசையாக எழுதப்பட்ட அக்ஷரங்களே பலனைத் தருகிறது.
பூபாலனுக்கு – அரசனுக்கு- செய்த சேவைகள் அல்ல!
இந்த சுபாஷிதத்தில் லாபகாரணே மூலம், அக்ஷரமாலம், கபாலம் பூபால: என்ற வார்த்தைகள் ஒரு சொல் ஜாலத்தை அர்த்தத்தோடு தருகிறது!
***
subhasita