
LONDON TEMPLE PRIEST IS WELOMING PROF. S S M
Post No. 12,288
Date uploaded in London – – 17 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பொற்கிழிக் கவிஞர் , மதுரை பேராசிரியர் சொ சொ மீ. சுந்தரம் அவர்கள் லண்டனில் உள்ள ஈலிங் கனக துர்க்கை அம்மன் கோவிலில் 18-7-23 முடிய தொடர் சொற் பொழிவு ஆற்றி வருகிறார் . ஒவ்வொரு நாளு ம் ஏதேனும் புதிய செய்திகள் கிடைக்கின்றன
இன்று 17-7-23 அன்று காலையில் நடத்திய உரையில் கேட்ட செய்திகள் :
குளிச்சி எழுந்த நாயனார்
அப்பருக்கு தாய் தந்தையர் வைத்த பெயர் – மருள் நீக்கியார்
சமண மதத்தலைவர் ஆனவுடன் கிடைத்த பெயர் – தருமசேனர்
சம்பந்தர் அவரை அழைத்த பெயர் – அப்பர்
சிவன் தந்த பெயர் — நாவுக்கரசர்; சம்ஸ்க்ருதத்தில் வாகீசர் என்பர்
அவர் முதல் முதலில் தேவாரம் பாடிய அதிகையில் உள்ள கல்வெட்டில் அவரை குளிச்சி எழுந்த நாயனார் என்றே குறிப்பிட்டுள்ளனர்
Xxxx
அப்பர் ஏன் சமணராக மாறினார் ?
தந்தையை இழந்து, தாயை இழந்து. சிவபக்தையான திலகவதியால் அன்போடு வளர்க்கப்பட்ட அப்பர் ஏன் சமணராக மாறினார் என்று பலரும் எண்ணுவோம்.
சேக்கிழார் சொல்லும் காரணம் — விதி.
ஆராய்ச்சி செய்வோர் சொல்லும் காரணம் — அவரைத் திருமணம் செய்துகொள்ள, சகோதரி திலகவதியார் வற்புறுத்திவந்தார் . அது அவருக்குப் பிடிக்கவில்லை. காரணம் குடும்பத்தில் தாய், தந்தை, மற்றும் சகோதரி திலகவாதியாருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த மாப்பிள்ளை கலிப்பகையார் மரணம் அடைந்தனர் . சமணத்துக்குத் தாவினால் கல்யாணத்தைத் தவிர்க்கலாம் என்பது ஒரு காரணமாக இருக்கலாம் .
Xxx
சொ சொ மீ . சொன்ன கதை
பலரும் தன்னை முன்வைத்து பெருமை பாராட்டுவர். பல அரசியல் வாதிகள் இப்படிச் செய்கிறார்கள் .
ஒரு அரசியல்வாதி மேடையில் தோன்றினார். பொன்னாடைக்கு மேல் பொன்னாடை போர்த்தி அவரைப் பலரும் கெளரவித்தனர் . இரவில் அவர் வீட்டுக்கு வந்து பொன்னாடைகளை எண்ணிப் பார்த்தார் 96 பொன்னாடைகள்தான் இருந்தன.
ஏய் என்னடா, 4 பொன்னாடை குறைகிறது ? என்று விரட்டினார் தொண்டர்களை.
புரிகிறதா?
அவரே ‘செட்டப்’ செய்து 100 பொன்னாடைகளை போர்த்த ஏற்பாடு செய்து வாங்கிக் கொடுத்திருந்தார். அதில் 4 பொன்னைடைகளை தொண்டர்களே ‘ஆட்டை’ போட்டுவிட்டனர் (திருடிக்கொண்டனர்).!!
Xxx
ஒரே மாமரத்தில் உள்ள கனிகள் ஒரே இனிப்புச் சுவையுடன் இருக்கின்றன. ஒரே அம்மா, அப்பாவுக்குப் பிறந்த 5 குழந்தைகள் ஒரே மாதிரி இல்லையே ! ஏன்?
அதுதான் பூர்வ ஜென்ம வினைப் பயன் .
அவரவர் வினைப்படி வாழ்க்கை அமைகிறது .
xxx
அப்பர் பார்த்தது பத்து ஜோடி !
அப்பர் கயிலை மலையில் சிவனைத் தரிசிக்கச் சென்றபோது, வயதும் உடலும் உதவாததால் ஒரு ஏரியில் மூழ்கி சிவனைக் காணச் சொன்னபோது, அவர் இமயமலை மானசரோவர் ஏரியில் மூழ்கி, திருவையாற்றில் எழுந்து கயிலைக் காட்சியைக் கண்ட கதையைப் பலரும் கேட்டிருப்பீர்கள். அது நடந்தது ஆடி அமாவாசை அன்றுதான். இப்போதும் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று திருவையாற்றில் கயிலை தரிசன விழா நடக்கிறது இன்று ஆடி அமாவாசையன்று அப்பர் என்ற தலைப்பு அமைந்தது பொருத்தமே. (இந்த ஆண்டு ஆடி மாதமே இரண்டு அமாவாசைகள் வருவதால் எந்த அமாவாசையன்று அது கொண்டாடப்படுகிறதோ தெரியவில்லை) .
கயிலைக் காட்சி கதை பற்றிச் செல்லுகையில் எல்லோரும்
மாதர் பிறைக் கண்ணியானை பாடலைச் சொல்லி களிறு (ஆண் யானை ), பிடி (பெண் யானை) ஆகிய இரண்டையும் கண்டதைச் சொல்லி நிறுத்தி விடுவர் . ஆனால் அப்பர் பாடிய பதிகத்தில் பத்து ஜோடிகளைக் கண்டதாகப் பாடுகிறார் ; ஆண் கிளி ,பெண் கிளி ,ஆண் மயில் ,பெண் மயில் , பசு, காளை என்று பாடிக்கொண்டே போகிறார்.
கருத்தொருமித்த கணவன் மனைவி வாழ்க்கையே கயிலை போலத்தான்
xxxxxx
கணவன் என்று பெயர் ஏன் வந்தது ?
பெண் என்பவள் கண். பெண்ணே, கண்ணே, என்றுதானே கொஞ்சுகிறார்கள்
அந்தக் கண்ணுக்குள் எப்போதும் அவன் இருப்பதால் கண் +அவன் = கணவன் என்றாயிற்று
xxxxx
ராவணனுக்கு ஏன் பெயர் வந்தது?
ராவணன் என்றால் அழுகை; அழுபவன் .
கயிலையைத் தூக்கப்போய் கை சிக்கியதால் அழுதான் . பின்னர் சிவன் கருணையால் மீண்டான் . அதுவும் அங்கு தோன்றிய முனிவர் வீணா கானம் செய் என்றார். வீணை, அங்கே இல்லாததால் தன் இரண்டு தலைகளை வெட்டி தனது நரம்பையே வீணை நரம்பாக்கி சாம கானம் இசைத்தான் .
இருவருக்குத்தான் ஈஸ்வரன் பெயர்
ஒருவர் பரமேஸ்வரன்; இன்னும் ஒருவன் ராவணேஸ்வரன் (சனீஸ்வரன் என்பது தவறு ; அது சனைச் +சரன் = மெதுவாக நகரும் கிரகம்).
இராவணன் என்றால் அழுகை என்பதை கம்பனே சொல்கிறான்.
கும்ப கர்ணன் இறந்த போது இராவணன் அழுகிறான். அவன் பெயருக்குப் பொருத்தமான செய்கையை அவன் செய்தான் என்று கம்பன் , ராமாயணத்தில் பாடுகிறான்.
xxxx
அப்பர் சாதனைகள்
தேவார மூவரில் அதிகம் பாடியவர் அப்பர். அதிக காலம் வந்தவரும் அப்பர்.
அவர் பாடிய பாடலை மட்டுமே தேவாரம் என்று அழைத்தனர். இப்போது மூவர் பாடிய தேவாரம் என்று சொல்லுவது பிழை.
xxx
அவன் இப்போது உதவான்
பெரியபுராணத்தை அனைவரும்படிக்கவேண்டும் 42286 பாடல்கள்தான் .
அப்பூதி அடிகளார் என்ற அந்தணர் தண்ணீர் பந்தல் முதல் மகன்கள் வரை எல்லோருக்கும் திருநாவுக்கரசர் என்ற பெயர் வைத்திருந்தார். அப்பூதி அடிகளாரின் வீட்டில் அப்பர் சாப்பிட உட்கார்ந்தபோது மூத்த மகனான பெரிய /மூத்த திரு நாவுக்கரசை கூப்பிடுங்கள் என்கிறார். அவனோ , அதற்கு சற்று முன்னர் தோட்டத்தில் வாழை இலை பறிக்கச் சென்றபோது பாம்பு கடித்து இறந்துவிட்டான் . அவன் சடலத்தை பாயில் சுருட்டி, வைத்து விட்டு உணவு பரிமாற வருகின்றனர் அடிகளும் அவர்தம் மனைவியாரும் .
அப்போது அப்பருக்கு அப்பூதி அடிகள் சொன்னது:
இப்போது அவன் உதவான் — இது சேக்கிழார் வாக்கு. ஒருவன் இறந்த அமங்கலச் சொல்லை விருந்தினர் சாப்பிடும்போது சொல்லக்கூடாது ஆகையால் அப்பூதி மகன் இறந்த செய்தியை அழகாக ‘இப்போது அவன் உதவான்’ என்கிறார் .
பின்னர் ஒன்று கொலாம் முதல் …. என்று துவங்கும் விடம் தீர்த்த பதிகத்தை எண் பத்து வரை பாடி , பாம்பின் விஷத்தை நீக்கி, இறந்த மகனை உயிர்ப்பிக்கிறார் அப்பர்.
–சுபம்—-
TAGS– சொ சொ மீ. சுந்தரம், அப்பூதி அடிகள், சேக்கிழார் ,திருநாவுக்கரசர்