QUIZ கும்பகோணம் பத்து QUIZ (Post No.12,286)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,286

Date uploaded in London – –  17 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz No.42

1.கும்பகோணத்துக்கும் எண் 12-க்கும் என்ன தொடர்பு?

XXXX

2.இந்த ஊருக்கே பெயர் கொடுத்த உயிர் கொடுத்தகும்பேஸ்வரர்  கோவில் சிறப்புகள் என்ன ?

XXXXX

3.கும்பகோணம் என்ற பெயர் ஏற்படக் காரணம் என்ன ?

XXXX

4.கும்பகோணத்தில் உள்ள புகழ்பெற்ற வேதபாடசாலை எது?

XXXX

5.கும்பகோணத்தில் 108 வைணவத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் கோவில் எதுஅதன் தனிச் சிறப்பு என்ன?

XXXXX

6. கும்பகோணத்தில் எந்தக்கோவில் சுவரில் ராமாயண ஓவியங்களும்கல் தூண்களில் சிற்பங்களும் இருக்கின்றன?

XXXX

7.கும்பகோணம் என்ற பெயரைச் சொன்னால் சாப்பிடக்கூடிய எந்த இரண்டு பொருட்கள் நினைவுக்கு வரும் ?

8.தமிழ் தாத்தா உ.வே.சாவுக்கும் இந்த ஊருக்கும் என்ன தொடர்பு?

XXXXX

9.காஞ்சி காமகோடி மடம்ஏன் தற்காலிகமாக கும்பகோணத்துக்கு மாற்றப்பட்டது?

XXXX 

10.கல்வித் துறையில் கும்பகோணத்துக்கான சிறப்பு அடைமொழி என்ன?

XXXXXXXXXXXXX

விடைகள்

1.அங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மஹா மககுளத்தில்  குளிப்பது கும்பமேளாவில் கங்கையில் குளிப்பதற்கு சமம். மாமாங்கத்துக்கு ஒரு முறை என்பது மரபுச் சொற்றொடராகவே (IDIOM) ஆகிவிட்டது .

XXXXX

2.குறைந்தது 1600 ஆண்டுகள் பழமையான ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு ராஜகோபுரம் உயரம் 128 அடி. ஆலயத்தில் மூலவரான ஆதி கும்பேஸ்வரர் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கம் ஆகும்

ஆலயத்தில் வீற்றிருக்கும் மங்களாம்பிகை மந்திரங்களுக்கு எல்லாம் அதிபதியாக விளங்குவதால் அம்மனுக்கு மந்திரபீடேஸ்வரி என்ற பெயரும் உண்டு. வெளிப்பிரகாரக் கிழக்கு மூலையில் அகத்தியருக்கு என்று தனி சன்னதி அமையப்பெற்றுள்ளது

ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் மாசிமக உற்சவம் 13 நாட்கள் நடைபெறும்.. விழாவின் ஒன்பதாம் நாளில் தேரோட்டமும், பத்தாம் நாள் திருவிழாவாக மகாமக குளத்தில் புனித நீராடலும் நடைபெறுகின்றன. பாடல்பெற்ற தலம்

XXXXXX

3.எல்லா உயிரினங்களின் உயிரனுக்களையும் பிரம்மா ஒரு குடத்தில் சேர்த்து வைத்திருந்தார் . பிரளய காலத்தில் அந்தப் பானை மிதந்தது   அப்பானை சேர்ந்த இடம் கும்பகோணம், அதனால் குடமூக்கு என்ற பெயரும் உண்டு. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள கல்லினாலான நாதஸ்வரம் மிகவும் பிரசித்தபெற்றதாகும். . சாதாரண மர நாதஸ்வரம் 600 கிராம் எடை கொண்டது. இது அதைவிட 6 மடங்கு (3600 கிலோ கிராம்) எடை கொண்டதாகவும், சுமார் இரண்டு அடி நீளத்துடனும் இருக்கிறது..

XXXX

4.சுமார் 500 ஆண்டுகளாக இயங்கி வரும் ராஜவேத பாட சாலை .

XXXX

5.இங்குள்ள சாரங்கபாணி சுவாமி கோயில்  108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்  இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது இது ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் .. இக்கோவிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பை கொண்டுள்ளது. இதன் குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும், கல்லினால் ஆனவை.

XXXX

6.சுமார் 500 ஆண்டுகள் வரலாறு உள்ள ராமசாமி கோவிலில்.

XXXXX

7.கும்பகோணம் வெற்றிலை, கும்பகோணம் டிகிரி காப்பி

XXXX

8.கும்பகோணம் கல்லூரியில் அவர் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்

XXXXX

9.ஹைதர் அலி படை எடுப்பு காரணமாக மாற்றப்பட்ட  மடம், 1960 க்குப் பின் காஞ்சிபுரத்துக்கு மீண்டும் சென்றது

XXXX

10.இந்த ஊரை தென் இந்தியாவின் கேம்பிரிட்ஜ் Cambridge of South India” என்று அழைத்தனர். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னரே கல்லூரிகள் துவங்கப்பட்டன . ராஜ வேத பாட சாலை  500 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. உ.வே.சா. மற்றும் சில்வர் டங் SILVER TONGUED சீனிவாச சாஸ்திரியார், கணித மேதை ராமானுஜம் ஆகியோர் தொடர்பினாலும் புகழ் ஏறியது . —- SUBHAM—-

tags– கும்பகோணம் , Quiz, டிகிரி காப்பி, வெற்றிலை

Leave a comment

Leave a comment