
DIAMOND CROWN – VAIRA MUDI FESTIVAL
Post No. 12,295
Date uploaded in London – – 19 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
PART EIGHT
44.. Mukthanatheshwara Swami Temple, Nelamangala நீலமங்கல முக்தனாதேஸ்வர கோவில்
பெங்களூரிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சோழர் கால கோ வில்.. ராஜேந்திர சோழனின் சிலை உள்ளது மிகவும் பாழடைந்த நிலையில் இருந்த இந்தக் கோவிலை தொல்பொருட் துறை செப்பனிட்டுள்ளது .
கோவிலுக்கு முன்னால் தமிழில் எழுதப்பட்ட பலகை இருக்கிறது கோவிலுக்குள் சிவலிங்கமும், வெளிச் சுவர்களில் பார்வதி-பரமேஸ்வரன் , நடராஜர் சிற்பங்களும், கூரையில் அஷ்ட திக் பாலகர்களும் பார்க்க வேண்டியவை.
Sri Lakshmi Venkateshwara Swamy Temple, Nelamangala, லெட்சுமி வெங்கடேஸ்வரர் கோவில், பசவேஸ்வரர் கோவில், ஆஞ்சனேயர் கோவில்களும் இந்த வட்டாரத்தில் உள்ளன
XXXX
45.பசராலு மல்லிகார்ஜுனர் கோவில் Mallikarjuna temple, Basaralu

இதை ஒரு கலைக்கூடம் என்று சொல்லலாம். சோம்நாத்பூர், ஹலபேடு , பேலூர் போல சுவர் முழுதும் சிற்பங்கள். பார்த்தவுடனேயே ஹொய்சாளர் பாணி கோவில் என்று சொல்லிவிடலாம். சிவ பெருமான் உறையும் கோவில் இந்த மல்லிகார்ஜுனர் கோவில் ஹரிஹர தன நாயக்க என்பவர் 1234 ஆம் ஆண்டு கட்டிய கோவில் . தொல்பொருட் துறையின் பாதுகாப்பில் இருக்கிறது மூன்று சன்னதிகள் இருக்கும் திரிகூட அமைப்பு ள்ளது. ஜகதி என்று அழைக்கப்படும் மேடை மீதுள்ள கோவில். ஹொய்சாளர் பாணியில் ஆமலக சிகரமும் காணப்படும். ஜகதி, ஆமலக என்பனவெல்லாம் ஹொய்சாளரின் கட்டிடக்கலை முத்திரைகள் .
நுழை வாயிலில் கல் யானைகள் நிற்கின்றன. சுவர் முழுதும் புராண இதிஹாஸக் கதைகளை விளக்கும் சிற்பங்கள். நூற்றுக் கணக்கில் என்பதைவிட ஆயிரக்கணக்கான சிற்பங்கள் என்றே சொல்ல வேண்டும் ( யூ ட்யூப்பில் YOU TUBE காணலாம் )அந்தகாசுரன் தலையில் ஆடும் 16 கைகள் கொண்ட சிவ பெருமான் , ராவணன் தூக்க முயற்சிக்கும் கயிலை மலை, ,கஜாசுர சம்ஹாரம், அர்ஜுனன் தன வில்லால் சுழலும் மீன் உருவத்தை அடிக்க, மாலை போட திரவுபதி விரைந்து வரும் காட்சிகள் பார்த்து ரசிக்க வேண்டியவை. பசராலு மாண்ட்யா மாவட்டத்தில் இருக்கிறது
xxxx
46.மேலுகோட்டை செலுவ நாராயணர் கோவில்
Melukote Cheluva Narayana Temple

மாண்டயாவிலிருந்து 30 கி.மீ . தொலைவிலுள்ள செலுவ நாராயணர் கோவிலில் நடக்கும் வைரமுடி உற்சவம் மிகவும் புகழ் படைத்தது வைஷ்ணவ ஆசார்யார் ஸ்ரீ ராமானுஜர் 12 ஆண்டுகள் வசித்த ஊர் இது..
Sri Cheluvanarayana Swamy Temple, Pandavapura, Taluk, Melukote, Karnataka 571431
மைசூரிலிருந்து 50 கி.மீ தூரத்திலுள்ள இந்த ஊருக்கு திருநாராயணபுரம் என்ற பெயரும் உண்டு .
உற்சவ மூர்த்தி விக்ரகம் செல்வப்பிள்ளை. இதற்கு ராமப்ரியா என்ற பெயரும் உண்டு . ராமரால் கிருஷ்ணராலும் வணங்கப்பட்ட விக்ரகம் என்பது ஐதீகம் .
காவிரி நதியையும் யதுகிரியையும் நோக்கி அமைந்த கோவில்.
டில்லியிலுள்ள முஸ்லீம் மன்னர் முகமது ஷாவிடம் பறிபோன விக்ரகத்தை ராமானுஜர் மீட்டு வந்தார். விக்கிரகத்தின் மீது அன்பு பூண்ட அவரது மகள் கோவிலுக்கு வந்தபோது இறந்ததாகவும் ஆகையால் அவரும் இங்கு வணங்கப்படுவதாகவும் சொல்லுவர். பீபி நாச்சியார் என்ற அந்த முஸ்லீம் பெண்ணின் உருவமும் கோவிலில் உளது.
கோவிலின் கோபுரம் மிகவும் அழகானது. ஆழ்வார்கள், ராமானுஜர் யதுகிரியம்மா சந்நிதிகள், சிலைகளும் இருக்கின்றன. தங்க கருட வாகனத்தில் பெருமாள் திரு வீதி உலா வரும் நாள் மிகவும் பக்தர் கூட்டத்தைக் கொண்டுவருகிற்து .மாலையில் துவங்கும் விழா இரவு முழுதும் நீடிக்கும்

வைர முடி விழா
வீதி உலா வருகையில் பெருமாள் அணிவது வைர முடி. ஏனைய காலங்களில் அவர் அணிவது ராஜ முடி. அதிலும் ரத்தினைக் கற்கள் இருக்கும்.
வைரமுடி பற்றி சுவையான கதைகளும் பு ழ க்கத்தில் உள்ளன. பெருமாள் உறங்கும்போது அது திருடு போனதாகவும் கருடன் அதை மீட்டு வருகையில் அதன் தலையிலுள்ள நீலக் கல் தமிழ்நாட்டில் நாச்சியார் கோவிலில் விழுந்ததாகவும் பின்னர் அது மணிமுத்தாறு மூலம் மீண்டும் மேலுகோட்டைக்கு வந்ததாகவும் கதை சொல்லுவார்கள் (நெல்லை ஜில்லா மணிமுத்தாறு வேறு).
Xxxx
பேய்களை விரட்டும் தடி !
47.Yoga Narasimha Temple, Melkote யோக நரசிம்ம சுவாமி கோவில்
Yoga Narasimha Temple, Melkote Main Road, District Mandya, Melukote, Karnataka 571431
மைசூரிலிருந்தது 50 கிமீ தொலைவு.
1777 மீட்டர் உயர குன்றின் மீது மேலுகோட்டை யோக நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது . யோக பட்டையுடன் நரசிம்மர் அமர்ந்த நிலை யில் இருக்கிறார் 365 படிகள் ஏறி சென்றால் கண்ணுக்கு விருந்தளிக்கும் கலை வேலைப்பாடுகளைக் காணலாம்.
இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால் நரசிம்மரின் வலப்புறத்தில் ஒரு தடி / தண் டம் வைக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பேய் பிடித்தவர்களின் தலையில் அடித்தால் பேய்கள் ஒடி விடும்.
மேலுகோட்டையில் ராமானுஜர் தங்கியிருந்த காலத்தில் அவருக்கும் சமணர்களும் மோதல் ஏற்பட்டது . பிட்டிதேவன் என்னும் சமண சார்பு மன்னன் மகளை பிரம்மராக்ஷஸி பேய் பிடித்த பொழுது 1000 சமணர்களால் பேயை விரட்ட முடியவில்லை. இறுதியில் ராமானுஜர் அந்தப் பேயை விரட்டினார். மந்திரம் சொல்லி ஒரு குச்சியால் பெண்ணின் தலையில் தட்ட பேய் பறந்தோடிப்போனது ; பொறாமை கொண்ட சமணர்கள் மதுரையில் ஞான சம்பநதரை அனல்வாதம், புனல்வாதம் போட்டிகளுக்கு அழைத்தது போலவே ராமாநுஜரையும் போட்டிக்கு அழைத்தனர். ஆயிரம் பேரும் 1000 கேள்விகள் கேட்போம். நீர் ஒரே பதிலில் திருப்திகரமான பதில் சொல்ல வேண்டும் என்று ராமானுஜருக்கு நிபந்தனை விதித்தனர். அவர் ஒரு திரை மறைவில் சென்று ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன் உருக்கொண்டு ஒரே பதிலில் விடை சொன்னார் ; சமணர்கள் திரையை விலக்கியபோது ஆயிரம் தலை கொண்ட ஆதி சேஷனைக் கண்டு மூர்ச்சித்து விழுந்தனராம் .
To be continued………………………………..
TAGS- வைர முடி, மேலுகோட்டை, பேய் விரட்டும் , தடி , குச்சி, சமணர் மோதல், ஆதிசேஷன், மல்லிகார்ஜுனர் , ராமானுஜர்