
Post No. 12,298
Date uploaded in London – – 19 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Quiz No. 45
1.காலை, மதியம், மாலை இரவுக்கு என்று பொதுவாக ஒதுக்கப்பட்ட ராகங்கள் எவை ?
Xxxxx
2.பாம்பு படம் பிடித்து ஆடப் பாடும் ராகம் என்ன ?
xxxx
3.சங்கீதம் கற்கத்துவங்கும் எல்லோருக்கும் முதலில் சொல்லித் தரப்படும் வாதாபி கணபதிம் எந்த ராகத்தில் அமைந்தது ?
xxxxx
4.எட்டயபுரத்தில் வறட்சியைப் போக்குவதற்காக மழை வேண்டி முத்துசாமி தீட்சிதர் பாடிய ராகம் எது ?
xxxx
5.கீழ்க்கண்ட தமிழ் ராகங்களுக்கு நிகரானவை என்று இசைமேதைகள் கூறும் ராகங்கள் எவை?
5.செவ்வழி –
வியாழக் குறிஞ்சி –
செந்துருத்தி –
மேகராகக் குறிஞ்சி –
திருத்தாண்டகம் –
Xxxx
6.தான்சேன் பாடிய எந்த ராகம் தீயை உண்டாக்கி அவரை எரித்தது ?
xxxxx
7.தோடி ராகத்தைப் பாடமாட்டேன் என்று அடகு வைத்து கடன் வாங்கிய பாடகர் யார் ?
xxxx
8.அக்பருடன் மோதல் ஏற்பட்டு, தீக்குளித்த குஜராத்தி பிராமணப் பெண்கள் இருவர் பெயரில் தான்சேன் பாடிய ராகம் என்ன?
xxxx
9.தியாகராஜ ஆராதனையில் பாடப்படும் பஞ்ச ரத்ன கிருதிகள் , ராகங்கள் என்னென்ன ?
Xxxx
10.பாரதியார் பாடல்களுக்கு அவரே ராகமும் போட்டு கவிதைகளை வெளியிட்டார். உங்களுக்கு ஏதேனும் சில பாடல்களின் ராகங்கள் தெரியுமா ?
10.வந்தேமாதரம் –
வந்தேமாதரம் என்போம் –
எந்தையும் தாயும் –
தொன்று நிகழ்ந்ததனைத்தும் —
பேயவள் காண் எங்கள் அன்னை —
ஞானத்திலே பர மோனத்திலே –
கனவென்ன கனவே
Xxxxxxxx

விடைகள்
1.காலை — பூபாளம், மதியம் – சாவேரி , தன்யாசி; மாலை – பூர்வ கல்யாணி, இரவு – நீலாம்பரி , காம்போஜி
xxxxx
2.புன்னாக வராளி (Nagin)
xxxxx
3.ஹம்சத்வனி
Xxxxx
4.அமிர்தவர்ஷினி
xxxxx
5.செவ்வழி – யதுகுல காம்போதி
வியாழக் குறிஞ்சி – செளராஷ்டிரம்
செந்துருத்தி – மத்யமாவதி
மேகராகக் குறிஞ்சி – நீலாம்பரி
திருத்தாண்டகம் – ஹரி காம்போதி
xxxxx
6.தீபக் ராகம்
xxxxx
7.தோடி சீதாராமையா என்ற பிரபல பாடகர் இப்படிச் செய்தார் . தஞ்சை மன்னர் அதை அறிந்தவுடன் கடனை அடைத்து அவருக்கு தோடி ராகம் பாடும் உரிமையை மீட்டுக்கொடுத்தார் .
xxxxx
8.தானா, ரீரி என்ற இரண்டு பிராமணப் பெண் பாடகிகள் இருவரையும் தனது அரசவைக்கு அக்பர் அழைத்தார் குஜராத்தி வட்நாகர் பிராமணர்கள் அதை எதிர்க்க பெரிய யுத்தம் மூண்டு ஏராளமானோர் இறந்தனர். தானா ரீரி என்ற இரண்டு பெண்களும் தீக்குளித்து மாண்டனர் அவர்கள் பெயரில் உலகப் புகழ்பெற்ற இசை மேதை தான்சேன், தானரிரி என்ற ராகத்தை உருவாக்கிப் பாடினார். இரு பெண்களுக்கும் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் இன்றும் உள்ளது.
xxxx
9.ஜகதாநந்த — நாட்டை ராகம்
துடுகு கள – கெளல ராகம்
சாதிஞ்சன — ஆரபி ராகம்
கன கன ருசிரா – வராளி ராகம்
எந்தரோ மஹானு பாவ – ஸ்ரீ ராகம்
xxxxx
10.வந்தேமாதரம் -ஹிந்துஸ்தானி பியாக்
வந்தேமாதரம் என்போம் – நாதனாமக் கிரியை
எந்தையும் தாயும் – காம்போதி
தொன்று நிகழ் ந்ததனைத்தும் — காவடிச் சிந்து மெட்டு
பேயவள் காண் எங்கள் அன்னை — ஆபோஹி
ஞானத்திலே பர மனத்திலே – ஹிந்துஸ்தானி தோடி
கனவென்ன கனவே – ஸ்ரீ ராகம்
—- subham —-

Tags – ராகம், க்விஸ், தீட்சிதர், மழை ராகம் , நெருப்பு ராகம், தான்சேன், பிராமணப் பெண்கள் , பஞ்ச ரத்னக் கிருதிகள், பாரதியார், தமிழ் இசை