
NAMBI NARAYANA TEMPLE
Post No. 12,300
Date uploaded in London – – 20 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Part 9
48.நம்பி நாராயணன் கோவில் (பஞ்ச நாராயண க்ஷேத்ரம்) Sri Nambinarayana Temple, Thondanur , Mandya
விசிஷ்டாத்வைத ஸ்தாபகர் ராமாநுஜாசார்யார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகத்தில் தங்கியிருந்த காலத்தில் 5 கோவில்களை பிரபலப்படுத்தினார். அவை பஞ்ச நாராயண க்ஷேத்ரங்கள் என்று அழைக்க ப்படுகின்றன . அதில் ஒன்று தொண்டனூரில் உள்ள நம்பி நாராயணன் கோவில் ஆகும்..
ராமானுஜர் கால பஞ்ச நாராயண க்ஷேத்ரங்கள்:
1.Nambi Narayana at Kere Thondanur நம்பி நாராயணன் கோவில் , தொண்டனுர்
2. Cheluva Narayana at Melukote செலுவ நாராயணன் கோவில் , மேல்கோட்டை
3. Vijaya Narayana at Belur விஜய நாராயணன் கோவில் , பேலூர்
4. Keerti Narayana at Talakadu கீர்த்தி நாராயணன் கோவில் , தலக்காடு
5. Veera Narayana at Gadag வீர நாராயணன் கோவில் , கடக்
( Vijaya Narayana at Belur is popular by name Beluru Chennakeshava) பேலூரில் உள்ள புகழ்பெற்ற கோவிலை சென்ன கேசவர் கோவில் என்றும் சொல்லுவார்கள் ).
நம்பி நாராயணன் கோவில் , தொண்டனுர் , ஏனைய பல கோவில்களிலிருந்து வேறு பட்டது. நாலரை ஏக்கர் பரப்பில் நந்த வனம் , புல்வெளிக்கு இடையில் உள்ளடங்கி இருக்கும் அமைதியான கோவில். பெரிய கோவில்; ஒரே பட்டர். அவரை அழைத்துதான் பூஜை செய்ய முடியும். .பெருமாள் நின்ற திருக்கோலம்.
ராமானுஜர் அமர்ந்த ஆசனம் இன்னும் காட்சிக்கு உள்ளது அவர் இங்கு 1000 தொண்டர்களுடன் தங்கி உபன்யாசம் செய்த இடம்
மேல்கோட்டையிலிருந்து ஆறு கி.மீ. ஹொய்சாளர் கட்டிடக்கலை அம்சங்களைக் காணலாம். அருகில் திருமலசாகர ஏரியும் உளது.
xxxxxx
சமணர் கோவில்கள்
மாண்ட்யா வட்டாரத்தில் கம்பட தள்ளியில் உள்ள சமணர் பஸதிக்கள் மிகவும் புகழ்பெற்றவை Kambadahalli is a near Nagamangala in Mandya district
இங்கு பிரம்மதேவ யக்ஷ ஸ்தம்பம் ( Manastambha )உள்ளது.இதன் உயரம் 50 அடி. அதன் உச்சியில் கட்டப்பட்டுள்ள மணி அடிப்பதை சகுனமாக கருதுகின்றனர். மேலை கங்க வம்ச ஆட்சிக்கால , 900 ஆண்டுப் பழமையான பல கல்வெட்டுகள் இருப்பதால் வரலாற்று ஆராய்ச்சிக்கு அவை துணை செய்கின்றன.
பிரம்மதேவ ஸ்தம்பத்துக்கு முன்னால் பஞ்ச கூட கோவில் உள்ளது. 5 தீர்த்தங்கரர்களின் சந்நிதிகள் பொது மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன Panchakuta Basadi. அங்கு நிறைய கலை வேலைப்பாடுகளைக் காணலாம்.
Xxxxxx

49. Adhichunchanagiri Temple, Adichunchanagiri அதி சுஞ்சன கிரி கால பைரவர் கோவில்
சுமார் 3330 அடி உயரமுள்ள குன்று
இது வொக்காலிக சமூகத்தினரின் புனித ஸ்தலம்; மஹா சமஸ்தான மட ம் இருக்கிறது. மயில்கள் சரணாலயத்தில் ஏராளமான மயில்களையும் பார்க்கலாம்
இங்குள்ள பைரவர் கோவிலும் கங்காதரேச்வரர் Gangadeshwara Temple தரிசிக்க வேண்டிய இடங்கள்; மாண்ட்யா மாவட்டத்தின் நாக மங்கல தாலுகாவில் இருக்கிறது
கங்காதரேஸ்வரர் கோவிலில் ஐந்து லிங்கங்கள் (Panchalingas — Lord Gangadhareshwara, Chandramouleshwara, Malleshwara, Siddeshwara, and Someshwara.)
ஐந்து லிங்கங்கள் – கங்காதரேஸ்வர , சந்திர மூலேஸ்வர , மல்லேஸ்வர, சித்தேஸ்வர, சோமேஸ்வர லிங்கங்கள் இருப்பதால் பஞ்ச லிங்கேஸ்வர கோவில் என்றும் கூறப்படும்.. மலையின் உச்சி ஆகாச பைரவர் என்று அழைக்கப்படுகிறது .
காலபைரவர் கோவிலில் அவருடைய 64 அவதார உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது சமீப காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம்; பாலா கங்காதரநாத சுவாமிஜி Sri Balagangadharanatha Swamiji.முயற்சியில் உருவான கோவில்


சுஞ்ச, கஞ்ச என்ற இரண்டு அரக்கர்களை சிவபெருமான் அழித்த இடம். .
Xxxxx
50.மைசூரு சாமுண்டீஸ்வரி கோவில் The Chamundeshwari Temple
மைசூரு நகரிலிருந்து 13 கி.மீ.தொலைவில் , அரச குடும்பத்தினரின் குல தெய்வமான சாமுண்டீஸ்வரி தேவியின் கோவில் இருக்கிறது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோவிலின் நந்தி தஞ்சாவூர் பெரிய கோவில் நந்தி போலவே உருவில் பெரியது 16 அடி உயரம், 25 அடி நீளம்!
குன்றின் மீது அமைந்த கோவில் இது. உயரம் 3300 அடி. இங்குதான் துர்கா தேவி மஹிஷ அசுரனை வதம் செய்தாள் என்பது ஐதீகம் மஹிஷாசுர என்பது ஆங்கிலேயர்களால் மைசூர் என திரிக்கப்பட்டது . இங்கு மிகப்பெரிய மஹிஷாசுரன் சிலையும் உள்ளது
12ஆ ம் நூற்றாண்டில் ஹொய்சாளர்களால் கட்டப்பட்டது என்றாலும் சிவனும் நந்தியும் மிகவும் பழையன

நவராத்திரி காலத்தில் தேவிக்கு 9 வித அலங்காரங்களை செய்வார்கள். ஆஷாட வெள்ளிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசனத்துக்கு வருகிறார்கள் .
To be continued………………………………………………
Tags—ராமானுஜர் ஆசனம், மைசூரு , சாமுண்டீஸ்வரி, பெரிய நந்தி , பஞ்சலிங்கம், காலபைரவர்