
Post No. 12,304
Date uploaded in London – – 21 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
QUIZ No.47
1.எந்த ரிஷியிடம் நிறைய நகைகள் கொண்டு வந்தால்தான் பக்கத்தில் வரலாம் என்று லோபாமுத்ரா உத்தரவு போட்டாள் ?
xxxx
2.எந்த ரிஷிக்கு கால்களில் கண்கள் இருந்தன ?
xxxx
குந்தி தேவிக்கு தேவர்களையும் அழைக்கவல்ல மந்திரத்தைக் கொடுத்த ரிஷி யார் ?
xxxx
4.கழுவில் ஏற்றப்பட்ட ரிஷி யார் ?
Xxxx
5.ரிஷி என்றால் என்ன பொருள் ?
Xxxx
6.ரிஷிகளின் 7 லட்சணங்கள் என்ன ?
Xxxx
7.பாணினி நூலில் உள்ள சப்த ரிஷிக்கள் , அதே வரிசையில் பிராமணர்களின் தினசரி சந்தியா வந்தனத்தில் வருகிறது? அவர்கள் யார் ?
Xxxxx
8.சங்க இலக்கியம் 2000 ஆண்டுகள் பழமையானது ; அங்கு சப்தரிஷிகள் பற்றிய பாடல் எங்கே வருகிறது ?
xxx
9.எந்த முனிவரின் மனைவியை சங்க இலக்கியமும் சிலப்பதிகாரமும் பல இடங்களில் குறிப்பிடுகின்றன ?
xxxx
10.க்ஷத்ரியனாகப் பிறந்து பிராமணன் ஆகத் தவம் புரிந்து கடைசியில் மூன்றாவது முறை வெற்றி பெற்ற ரிஷி யார்? அவருக்கு பட்டம் கொடுத்தவர் யார்?
10.விசுவாமித்திரர் மூன்றாவது முறை வெற்றி கண்டார். அவருக்கு வசிஷ்டர், பிரம்மரிஷி என்ற பட்டத்தைக் கொடுத்தார் .
Xxxx

விடைகள்
1.அகஸ்திய மகரிஷி ரிஷியிடம் லோபாமுத்ரா உத்தரவு போட்டாள்.
xxx
1.பிருகு முனிவருக்கு காலில் கண் இருந்தது. பின்னர் விஷ்ணுவை உதைத்தபோது அது மறைந்தது .
xxxx
3.துர்வாச மகரிஷி
xxxx
4.ஆணி மாண்டவ்யர் ; சிறு வயதில் அவர் வண்டுகளை பிடித்து முள்ளால் குத்தினார் ; அதனால் பின்னொரு காலத்தில் கழுவில் ஏற்றப்பட்டார் ; பூர்வ கதை :- அவர் கண்களை மூடி தவம் செய்து கொண்டிருந்தபோது , அரண்மனையிலிருந்து திருடிய முத்து மாலை , இரத்தின மாலைகளை எல்லாம் அவர் கழுத்தில் போட்டுவிட்டு திருடர்கள் பதுங்கி இருந்தனர். அரச சேவகர்கள் அவரைப் பிடித்து, மன்னருக்கு முன்னால் நிறுத்தியபோது அவர் சரியானபதிலைச் சொல்ல முடியவில்லை.. அரசன் அவரைக் கழுவில் ஏற்ற உத்தவிட்டான் .
Xxxx
5.ஆங்கிலத்தில் உள்ள seer என்பது சம்ஸ்க்ருத ரிஷி என்ற சொல்லின் திரிபு (mirror image in Linguistics).
உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்தில் பல இடங்களில் ரிஷி என்ற சொல் பயிலப்படுகிறது. “மந்திரத்தை வாக்கிய வடிவத்தில் சொல்பவர்” — என்று வேதத்தின் சர்வானுக்ரமணி கூறும்.
சாயனர் “ர்ஸ்: என்றால் ‘மேலே செல்’ என்பார். இதிலிருந்து பிறந்தது ரிஷி என்கிறார்; ரிக் வேத பாஷ்யத்துக்கு முன்னுரை தருகையில் ‘த்ருஸ்’ என்ற சொல்லையும் காட்டுவார். ‘பார்’ SEE என்பது இதன் மூலம் (root ). அதாவது மனிதனின் ஊனக் கண்ணால் காண முடியாததை ஞானக் கண்ணால் கண்டு SEER நமக்கு வேத மந்திரங்களை அளித்தார்கள்.
Xxxx
Answer to 6th question 6.
1.நீண்ட ஆயுள்
2.மந்திரங்களை காணும் சக்தி
3.ஈசுவரத்தன்மை
4.தெய்வீகப்பார்வை
5.குணத்தாலும், வித்தையாலும், வயதாலும் உயர்வு
6.தருமத்தைப் பிரத்யக்ஷமாக அனுஷ்டித்துக் காட்டல்
7.கோத்ரப் பிரவர்த்தகராக இருத்தல்
இவ்வேழு லக்ஷணங்களும் அமைந்தவர்கள் ரிஷிகள்.
Xxx
7.பாணினி சூத்திரம் 2-4-65-ல் அவர் சில இலக்கண விதிகளை விளக்குகிறார்.
‘அத்ரி ப்ருகு குத்ஸ வசிஷ்ட கோ த்தமாரங்கிரேப் ய ஸ் ச’–என்கிறார்.
இதே வரிசையில் தான் பிராமணர்கள் தினசரி மூன்று முறை 7 ரிஷிகளின் பெயர்களைச் சொல்கிறார்கள் —
அத்ரி, பிருகு, குத்ஸ, வசிஷ்ட, கெளதம, காஸ்யப, ஆங்கிரஸ என்பன அந்த 7 ரிஷிக்கள்.
Xxxxxx
8.சங்க இலக்கியத்தில் நற்றிணைப் பாடல் 231 புலவர் இளநாகனார் பாடியது; அதில் சப்த ரிஷிக்களை தமிழர்கள் கைகூப்பி வணங்குவதை , “கைதொழு மரபின் எழுமீன் போல ” என்றார் வரிகளில் குறிப்பிடுகிறார்.
Xxxxx
9.சங்க இலக்கியத்தில், வசிஷ்ட மஹரிஷியின் மனைவி அருந்ததியை பல புலவர்கள் பாடியுள்ளனர் . அவள் கற்பின் இலக்கணம். அருந்ததி காட்டல் என்னும் சப்த ரிஷி தரிசனம் திருமணத்தின் முதலிரவுக்கு முன்னர் நடைபெறும்.
Xxxxx
10.விசுவாமித்திரர் மூன்றாவது முறை வெற்றி கண்டார். அவருக்கு வசிஷ்டர், பிரம்மரிஷி என்ற பட்டத்தைக் கொடுத்தார் .
—- subham —–
Tags- சப்த ரிஷி, மக ரிஷி , அருந்ததி, வசிஷ்டர், பிரம்மரிஷி, துர்வாசர், பொருள், லட்சணம், ஆணி மாண்டவ்யர்