QUIZ திருச்சிப் பத்து QUIZ (Post No.12,312)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,312

Date uploaded in London – –  23 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

QUIZ No.48

1.திருச்சியில் மிக உயரமான இடத்தில் இருக்கும் கடவுள் யார் ?

XXXXX

2.திருச்சியின் ஒரு பகுதியான ஸ்ரீரங்கத்தில் பெருமாள்  கோபுர உயரம் என்ன?

XXXXX

3.பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்று திருச்சியில் இருக்கிறது . அது எது?

XXXXX

4.திருச்சி வட்டாரத்தில் பழங்கால சோழர் தலை நகரம் இருக்கிறது. அதன் பெயர் என்ன?

XXXXX

5.மலை மீது ஏறி உச்சிபிள்ளையாரைக் காண்பதற்கு முன்னர் வேறு இரண்டு கோவில்கள் வழியாகச் செல்லவேண்டும். அவை யாவை ?

XXXXX

6. திருச்சியில் மூன்று பெரிய மத்திய அரசு ஆலைகள் உள்ளன. அவை யாவை ?

XXXX

7.திருச்சி என்ற பெயர் எப்படி என்று ஏற்பட்டது?

XXXXXX

8.திருச்சியில் உள்ள பல்கலைக்கழகத்தின் பெயர் என்ன ?

XXXXX

9.திருச்சி மலைக்கோட்டையில் உள்ள குகை யாருடையது ?

XXXXX

10.திருச்சி பகுதியில் காளியம்மன் பக்கதர்களுக்கு  இரண்டு முக்கியக்கோவில்கள் உள . அவை யாவை ?

XXXXXXX

விடைகள்

1.உச்சிப்  பிள்ளையார் கோவில்.

மலைக்கோட்டையின் உச்சியில் 273 அடி உயரத்தில் உள்ளது. பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 437 படிகளை ஏற வேண்டும்.

மலையிலிருந்து காவிரி ஆற்றையும் கோவில்களையும் காணலாம்

XXXX

2.ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயிலின்  ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது ; மொத்தம் 21 கோபுரங்கள் இருக்கின்றன .

XXXXX

3.திருவானைக்கா என்னும் ஜம்புகேஸ்வரம் திருக்கோவில். அங்கு சிவ பெருமான் அப்பு என்ற நீர் வடிவத்தில் இருக்கிறார் ; ஆப : என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம் அப்பு.. அம்மன் பெயர் அகிலாண்டேஸ்வரி

XXXXX

4.கரிகால் சோழன் ஆண்ட உறையூர்

XXXXX

5.மாணிக்க விநாயகர் மலை அடிவாரத்தில் உள்ளார். அவரை தரிசித்து மேலே சென்றால் தாயுயுமானவர் சிவன் கோவில் இருக்கிறது. இரண்டு தரிசனத்துக்குப்  பின்னர் மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையாரை தரிசிக்கலாம்.

XXXXX

6.பாரத் கனரக மின்சாதன தொழிற்சாலை (BHEL- BHARAT HEAVY ELECTRICALS LIMITED)

துப்பாக்கித் தொழிற்சாலை (Ordnance Factory Tiruchirappalli (OFT)

பொன்மலையில் உள்ள ரயில்வண்டி பணிமனை The Golden Rock Railway Workshop,  Ponmalai,.)

XXXXX

7.திருச்சி என்ற பெயர் ஏற்பட மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன

1.திரி சிரன் என்ற மூன்று தன்மையுள்ள அரக்கன் வழிபட்ட தலம்

2.சிரா என்ற சமண முனிவர் தவம் செய்த குகை உள்ள இடம்

3. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால கல்வெட்டு ஒன்றில் திருச்சிராப்பள்ளி, திரு-சிலா-பள்ளி (பொருள்: “புனித-பாறை-ஊர்)” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அதிலிருந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.

XXXXX

8.பாரதிதாசன் பல்கலைக்கழகம் Bharathidasan University

XXXXX

9.திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு போகும் வழியில் இடது புறமாக குகை உள்ளது மலையை குடைந்து உண்டாக்கிய இந்த குகை கோயில்.

பல்லவர், பாண்டியர், சோழர் என முப்பெரும் அரச மரபுகளின் கல்வெட்டுக்களையும் குடைவரை அமைப்புக்கு உள்ளேயே பெற்றிருக்கும் ஒரே தமிழ்நாட்டுக்கு குடைவரை கோயில் இது. பல்லவர் கால கிரந்த எழுத்துக் கல்வெட்டுகளும் உள்ளன ; இது மகேந்திர பல்லவன் காலத்தில் குடையப்பட்டது

XXXXX

10.வெக்காளி அம்மன் கோவில் ,உறையூர் (5. கி.மீ  தொலைவு)

சமயபுரம் மாரி  அம்மன் கோவில் (15. கி.மீ  தொலைவு)

—SUBHAM—-

TAGS- திருச்சி, மலைக்கோட்டை, பிள்ளையார், தாயுமானவர், ஸ்ரீ ரங்கம் , திருவானைக்கா

Leave a comment

Leave a comment