.jpg)
Post No. 12,321
Date uploaded in London – – 25 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Quiz Series No.50

1.இந்துக்களின் நவக்கிரக வரலாற்றுப்படி சனிக் கிரகம் யாருடைய புத்திரன் ?
XXXX
2.நவக்கிரக துதிகள் படி செவ்வாய் யார்?
xxxxx
3.சந்திரன் தோன்றியது எப்படி?
xxxx
4.கீழ்கண்ட கிரகங்களுக்கு தமிழில் என்ன பெயர் ?
4.சோமன் -; பெளமன் -; செளம்யன்-;
அசுரர் குரு -; தேவ குரு –
xxxxxx
5.எந்த எந்த கிரகத்துக்கு காகம் வாகனம்? குதிரை வாகனம் ?
xxx
6.நவக்கிரகங்களில் ராகுவை எப்படி அடையாளம் காணலாம் ?
xxxxx
7.நவக்கிரகங்களில் நொண்டி, மெதுவாக செல்லுபவன் என்று பெயர் எடுத்தவன் யார் ?
xxxxxxx
8.சனி பகவானை வணங்க திருநள்ளாறுக்குப் போகிறோம். கீழ்கண்ட தலங்களுக்கு எந்த கிரகத்தை வணங்க நாம் செல்கிறோம்?
சூரியனார் கோவில், திருப்பதி, புள்ளிருக்கு வேளூர் , திருவெண்காடு , திருச்செந்தூர் ஸ்ரீரங்கம், காளஹஸ்தி
XXXXX
9.சிவனடியார்களுக்கு நவ கிரகங்களும் ஒரு தீங்கும் செய்யாமலிருக்க, 1400 ஆண்டுகளுக்கு முன்னர் திருஞான சம்பந்தர் அளித்த பதிகம் எது ?
Xxxxx
10.ஸம்ஸ்க்ருத மொழியில் எல்லோரும் சொல்லும் நவக்கிரக துதி எது ?
xxxxx

விடைகள்
1.சூரியனுடைய புத்திரன்
xxxx
2.பூமியிலிருந்து உதித்தவன்
xxxx
3.பாற்கடலிலிருந்து உதித்தான்.
xxxx
4.சோமன் – நிலவு; பெளமன் – செவ்வாய்; செளம்யன்- புதன்;
அசுரர் குரு – வெள்ளி; தேவ குரு – வியாழன்
Xxx
5.சனிக்கு காகம்; சூரியனுக்கு குதிரை
xxxxx
6.பெரிய நகங்கள் இருக்கும் ; பாம்பு போல வால் இருக்கும்
Xxxx
7.சனை + சரன் = ஸம்ஸ்க்ருத்த்தில் அர்த்தம் மெதுவாக நடப்பவன் ; சூரியனைச் சுற்றிவருவதற்கு 30 ஆண்டுகள் ஆகும் .
xxxxxx
8.சூரியனார் கோவில்– சூரியன் , திருப்பதி– சந்திரன் , புள்ளிருக்கு வேளூர்– செவ்வாய் , திருவெண்காடு– புதன் , திருச்செந்தூர்– வியாழன் , ஸ்ரீரங்கம்– வெள்ளி , காளஹஸ்தி — ராஹு , கேது
xxxx
9.வேயுறு தோளி பங்கன் என்று துவங்கும் கோளறு திருப்பதிகம்
கோளறு பதிகம்
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தே னுளமே புகுந்தவதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே ஆசறு (ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே
இரண்டாம் பாடல்
எண்பொடு கொம்பொடாமை யிவை மார்பி லங்க எருதேறி யேழையுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தே னுளமே புகுந்த வதனால் ஒன்பதொ டொன்றோ டேழுபதி னெட்டோடாறு முடனா யநாள்க ளவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
மூன்றாம் பாடல்
உருவளர் பவளதெடின யளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்தெ னுளமே புகுந்த வதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும் அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
நான்காம் பாடல்
மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோ துமெங்கள் பரமன் நதியோடு கொன்றை மாலைமுடி மேலணிந்தே னுளமே புகுந்த வதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய் களான பலவும் அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே
ஐந்தாவது பாடல்
நஞ்சணி கண்டெனந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேலணிந்தே னுளமே புகுந்த வதனால் வெஞ்சின வவுணரோடு முருமிடியுமின்னு மிகையான பூத மவையும் அஞ்சிடு (ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
ஆறாம் பாடல்
வாள்வரி யதள தாடைவரி கோவணத்தர் மடவா டனோடு முடனாய் நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடிவந்தெ னுளமே புகுந்த வதனால் கோளரியுழு வையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே
XXXXX
ஏழாம் பாடல்
செப்பிள முலைநன் மங்கை யருபாகமாக விடையேறு செல்வனடைவார் ஒப்பிள மதியு மப்பு முடிமேலணிந்தே னுளமே புகுந்த வதனால் வெப்போடு குளிரும் வாதம் மிகையானபித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
எட்டாம் பாடல்
வேள்படி விழிசெய் தன்று விடைமெலிருந்து மடவாள் தனோடு முடனாய் வாண்மதி வன்னி கொன்றைமலர் சூடிவந்தெ னுளமே புகுந்த வதனால் ஏழ்கடல் சூழிலங்கை யரையன் றனோடு மிடரான வந்து நலியா ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
ஒன்பதாம் பாடல்
பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறு மெங்கள் பரமன் சலமகளோ டெருக்கு முடிமேலணிந்தெ னுளமே புகுந்த வதனால் மலர் மிசையோனுமாலு மறையோடு தேவர் வரு காலமான பலவும் அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல் அடியாரவர்க்கு மிகவே.
பத்தாம் பாடல்
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமும் மதியுநாக முடிமேலணிந்தெ னுளமே புகுந்த வதனால் புத்தரோ டமணைவா திலழிவிக்கு மண்ணல் திருநீரு செம்மை திடமே அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
பதினோறாம் பாடல்
தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் – துன்னி வளர் செம்பொன் னெங்கு (ம்) திகழ நான்முக னாதியாய பிரமாபுரத்து மறை ஞான ஞான முனிவன் தானறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் ஆனசெல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள் வராணை நமதே.
XXXXX
10.ஜபாகுஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம் |
தமோரிம் ஸர்வபாபபக்நம் ப்ரணதோऽஸ்மி திவாகரம் ||
ததிசங்கதுஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம் |
நமாமி சசிநம் ஸோமம் சம்போர்முகுட பூஷணம் ||
தரணீகர்ப்ப ஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரமம் |
குமாரம் சக்திஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்||
ப்ரியங்கு கலிகாச்யாமம் ரூபேணऽப்ரதிமம் புதம் |
ஸௌம்யம் ஸௌம்யகுணோபேதம்-
-தம்புதம் ப்ரணமாம்யஹம் ||
தேவாநாம் ச ரிஷீணாம் ச குரும் காஞ்சநஸந்நிபம் |
புத்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம் ||
ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யாநாம் பரமம் குரும் |
ஸர்வசாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாம்யஹம்||
நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் |
சாயாமார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம் ||
அர்த்த காயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்த்தநம் |
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம்-
– ராஹும்ப்ரணமாம்யஹம் ||
பலாசபுஷ்ப ஸங்காசம் தாரகாக்ரஹ மஸ்தகம் |
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம்-
– கேதும் ப்ரணமாம்யஹம் ||
जपाकुसुमसंकाशं काश्यपेयं महद्युतिम् ।
तमोरिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम् || 1 ||
दधिशङ्खतुषाराभं क्षीरोदार्णवसम्भवम् ।
नमामि शशिनं सोमं शम्भोर्मुकुटभूषणम् || 2 ||
धरणीगर्भसंभूतं विद्युत्कान्तिसमप्रभम् ।
कुमारं शक्तिहस्तं तं मङ्गलं प्रणमाम्यहम् || 3 ||
प्रियङ्कु कलिकाश्यामं रूपेणऽप्रतिमं बुधम् ।
सौम्यं सौम्यगुणोपेतं तं बुधं प्रणमाम्यहम् || 4 ||
देवानां च ऋषीणां च गुरुं काञ्चनसन्निभम् ।
बुद्धिभूतं त्रिलोकेशं तं नमामि बृहस्पतिम् || 5 ||
हिमकुन्दमृणालाभं दैत्यानां परमं गुरुम् ।
सर्वशस्त्रप्रवक्तारं भार्गवं प्रणमाम्यहम् || 6 ||
नीलाञ्जनसमाभासं रविपुत्रं यमाग्रजम् ।
छायामार्तण्डसंभूतं तं नमामि शनैश्चरम् || 7 ||
अर्धकायं महावीर्यं चन्द्रादित्यविमर्दनम् ।
सिंहिकागर्भसंभूतं तं राहुं प्रणमाम्यहम् || 8 ||
फलाशपुष्पसंकाशं तारकाग्रहमस्तकम् ।
रौद्रं रौद्रात्मकं घोरं तं केतुं प्रणमाम्यहम् || 9 ||
Xxxxx
—SUBHAM—
TAGS– நவக்கிரகம் , QUIZ , கேள்வி பதில், கோளறு திருப்பதிகம் , வேயுறு தோளி பங்கன், ஜபாகுஸும , நவக்ரஹ துதி