QUIZ ஒளவையார் பத்து QUIZ (Post No.12,331)

QUIZ ஒளவையார் பத்து QUIZ (Post No.12,331)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,331

Date uploaded in London – –  26 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxx 

Quiz Series No.52

சங்க கால அவ்வையாரைப் பற்றிய கேள்விகள் இதோ !

1.சங்க கால ஒளவையார் எத்தனை பாடல்களைப் பாடினார் ?

XXXXX

2.அதிசயமாக  ஒரு யாகத்தில் மூன்று தமிழ் மன்னர்களும் ஒரே மேடையில் அமர்ந்ததைப் பார்த்து கிழவி என்ன சொன்னாள் ?

xxxxx

3.பிராமணர்களை கிழவி எப்படிப் புகழ்ந்தாள் ?

XXXXX

4.ராமர் தோன்றிய வம்சம் இக்ஷ்வாகு / கரும்பு வம்சம். அதே வம்சத்தில் வந்தவன் அதியமான் என்ற அதிசயச் செய்தியை எந்தப்பாட்டில் சொன்னார்?

XXXXXX

5.குருவிகளைப் பழக்கி நெல் மணிகளைக் கொண்டுவந்த செய்தியை அவ்வைக் கிழவி எங்கே பாடினாள் ?

XXXXX

6.ஒளவையார்க்கு அதிகம் பிடித்த ஸம்ஸ்க்ருதச் சொல் என்ன ?

Xxxxxx

7.போரில் அடிபட்டு விழுப்புண் ஏற்படாமல் மன்னர்கள் இறந்தால் , பிராமணர்கள் தர்ப்பைப் புல்லைப்ப் பரப்பி, மந்திரங்கள் சொல்லி மன்னரை வாளால் வெட்டி, அடக்கம் செய்வதை  அவ்வை எப்படிப் பாடுகிறார் ?

Xxxx

8.நீ நீலகண்டன்/ சிவபெருமான் போல வாழ்க என்று யாரை ஏன் அவ்வை பாடினார் ?

Xxxxx

9.முதல் நாள் தலை வாழை இல/லை; இரண்டாம் நாள் கையில/ல்  ; மூன்றாம் நாள் தரையில /ல்  என்று மாப்பிள்ளைக்கு Treatment ட்ரீட்மெண்ட் கிடைத்தது என்று கிண்டல் செய்வார்கள்; இந்த வழக்கத்தை கிழவி, மறைமுகமாகக் குறிப்பிடும் பாடல் எது ?

Xxxxxx

10.கார்த்திகை நாளன்று விளக்குளை வரிசையாக வைத்து வழிபடும் செய்தியை அவ்வை எங்கே பாடுகிறார் ?

xxxxxxxxxxxxxx

விடைகள்

1.எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59 உள்ளன. அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள்

xxxxxx

2.சேரமான் மாரி வெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவரும் நண்பர்களாகக் கூடி மகிழ்ந்திருக்கக் கண்டு, வானத்து மீன்கள் போலவும், மழையின் திவலைகள் போலவும் உயர்ந்தோங்கிப் பொலிக என வாழ்த்தினார்

XXXXX

3.அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் (அந்தணர்)- புறம் 63

xxxxxx

4.அதியர் குடியினர் முதன்முதலில் கரும்பை இறக்குமதி செய்து பயிரிட்டனர்; புறம் 99, 392,

அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்

அரும்பெறல் மரபின் கரும்புஇவண் தந்தும்

நீர்அக இருக்கை ஆழி சூட்டிய

தொன்னிலை மரபின்நின் முன்னோர் போல– புறம் 99,

Xxxxxx

5.மூவேந்தர் பறம்புமலையை முற்றுகை இட்ட போது பாரியின் பறம்பு மலையிலுள்ள மக்கள், குருவிகளைப் பழக்கி உள்நாட்டுக்கு உணவு கொண்டுவந்தனர் இது அக நானூறு (303) தரும் செய்தி. அதியமான் என்பது சத்தியவான் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் திரிபு. அவர்கள் வடக்கிலிருந்து தென்னாட்டுக்குக் குடியேறினர் அசோகர் கல்வெட்டிலுட்டிலும் சத்யபுத்ரர்கள் உள்ளனர்  .

xxxxx

6.புறநானூற்றில் கருமம், காலம், பண்டம், சகடம் போன்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். ஆயினும் தச்சன்  என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லைத்தான் பல பாடல்களில் பயன்படுத்துகிறார் . Techt, Technology, Techician என்ற சொற்கள் तक्षकः தக்ஷ என்ற சம்ஸ்க்ருத மொழிச் சொல்லிலிருந்து பிறந்த சொற்களே.

அது மட்டுமல்ல ; தேர்ப்படைக்கு ஒரே நாளில் ஒரே தச்சன் எட்டு தேர்களைக் கட்டும் நாடு அதியமான் நெடுமான் அஞ் சி  நாடு என்றும் பாடுகிறார்.

வைகல் (everyday)

எண் தேர் (Eight Chariots)  செய்யும் தச்சன் –புறம் 87

xxxxxxx

7.அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் (Vedic Brahmins)

திறம் புரி பசும் புல் (Dharba, Kusha Grass) பரப்பினர் கிடப்பி,

‘மறம் கந்தாக நல் அமர் வீழ்ந்த

நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க!’ (go to heaven)  என  10

வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ

புறம் 93 பாடல்

போரில் இறந்தால் சொர்க்கம் கிடைக்கும் என்று கீதையில் கிருஷ்ணனு ம் , சங்க இலக்கிய பழைய உரை காரர் களும் செப்புகின்றனர்.

மணிமேகலையிலும் இவ்வழக்கம் பேசப்படுகிறது

xxxxx

8.ஒரு சமயம், அதியமான் வேட்டைக்குச் சென்றான். சென்றவிடத்து, ஒரு மலை உச்சியில் இருந்த நெல்லிமரத்தில் ஒரு அருங்கனி இருந்தது. அந் நெல்லிக்கனியை உண்பவர் நெடிது வாழ்வர் என்ற நம்பிக்கை நிலவி இருந்தது. அதியமான் அந்த அரிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாமல் அவ்வையாருக்கு அளித்தான் .தான் உண்ணாமல் தனக்கு அளித்ததைப் பாராட்டி,  அதியமானை வாழ்த்தினார் .

போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி

பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி

நீல மணிமிடற்று (Neelakantan) ஒருவன் போல

மன்னுக, பெரும! நீயே –புறம் 91 பாடல்

xxxxx

9.ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;

பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்

தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ.– புறம் 101

xxxxx

10.அகநாநூறு பாடல் 11

வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்

நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு,

இலை இல மலர்ந்த முகை இல் இலவம்

கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த

அம் சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றி,  

கயம் துகள் ஆகிய பயம் தபு கானம்

எம்மொடு கழிந்தனர் ஆயின், கம்மென,

—subham—

Tags- அவ்வை, அவ்வையார், ஒளவையார், புறம், அகம், அதியமான் , நெல்லிக்கனி, குருவி, QUIZ

Leave a comment

Leave a comment