
Kukke Subrahmanya Temple
Post No. 12,335
Date uploaded in London – – 28 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 13
63.சோமநாத கோவில், உல்லால் Someshwara Somanatha Temple
மங்களூரு நகரிலிருந்து 13 கி.மீ. உல்லால் என்னும் இடத்திலிருந்து 3 கி.மீ ; இந்த இடத்தின் பெயர் கோடேகர் .
அப்பக்கா தேவி மஹாராணி கட்டிய கோவில் பகுதி உள்பட பழங்காலக் கோவில் . சிறிது தூரம் நடந்து சென்றால் பாறைகள் நிறைந்த கடற்கரையைக் காணலாம். அங்குள்ள பாறைகளை ருத்ர சிலை என்பார்கள் .மகாராணியின் பாழடைந்த கோட்டைகளும் ஊரைச் சுற்றியுள்ளன .அருமையான அரபிக் கடல் அருகில் அமைந்த இக்கோவில் சிவன் கோவில் ஆகும் ருத்ர பாத க்ஷேத்ரம் என்றும் அழைப்பார்கள் பித்ரு காரியங்கள் செய்வோரும் இங்கு வருகின்றனர் ஆளுவ வம்சத்தினர் பத்தாம் நூற்றா ண்டில் எழுப்பிய கோவிலை படிப்படியாக வனவாசி கடம்பர்கள் , சோழ வம்சத்தினர், விஜய நகர இம்மடி தேவராஜா என்று பலரும் வளர்த்தனர் .கோவிலில் இருக்கும் இரண்டு கல்வெட்டுகள் 15ஆம் நூற்றாண்டில் நடந்த திருப்பணிகள் பற்றிப் பேசுகின்றன .
அபக்கா சௌதா (Abbakka Chowta), என்பவர், 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போர்த்துகீசியர்களுடன் போராடிய உல்லாலின் முதல் துளுவ ராணி ஆவார். இந்தியாவின் கடலோர கர்நாடகாவின் ( துலுநாடு ) சில பகுதிகளை ஆண்ட சவுதா வம்சத்தைச் சேர்ந்தவர் இவர், .
Xxxx
பவஞ்சே ஞான சக்தி சுப்ரமண்யர் கோவில் மங்களூரு நகரிலிருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கிறது . மஹாலிங்கேஸ்வர் சுவாமி கோவில் குன்றின் மீது இருக்கிறது. அடிவாரத்தில் முருகன் கோவில் இருக்கிறது .
சமணர்களின் காசி The Jain Varanasi at Moodabidri
மங்களூரு நகரிலிருந்து 34 கி.மீ தொலைவில் மூட பித்ரி என்னும் இடத்தில் 18 சமணர் கோவில்கள் இருப்பதால் சமணர் வாரணாசி என்று சொல்லுவார்கள். ஆயிரம் கால் மண்டபம் உடைய சந்திரநாத பஸதி புகழ்பெற்ற சமணர் கோவில் ஆகும் .
Xxxx
மங்களூரு நகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் நந்தினி நதிக்கரையில் துர்கா பரமேஸ்வரி கோவில் இருக்கிறது .
xxxxxx
64.பொலாலி ராஜராஜேஸ்வரி கோவில், Polali Rajarajeshwari Temple is a temple located in Polali, Dakshina Kannada
மங்களூரு நகரிலிருந்து 34 கி.மீ தொலைவில் ராஜராஜேஸ்வரி கோவில் இருக்கிறது . 12 அடி உயர அம்மன், பத்ர காளி , முருகன், பிள்ளையார் புடைசூழ காட்சி தருகிறாள் .
எட்டாம் நூற்றா ண்டில் சுரதா என்ற மன்னர் கட்டியது ;அம்மன் சிலை மருத்துவ குணங்கள் வாய்ந்த மண்ணால் செய்யப்பட்டது. கோவிலின் கூரையில் மரச் சிற்பங்கள் செப்புத தகடு அடிக்கப்பட்டு காட்சி தருகின்றன
கோவிலில் கால்பந்து !

இந்தக் கோவிலின் செண்டு உற்சவம் ஒப்பற்றது . நன்மைக்கும் தீமைக்கும் நடைபெறும் போட்டியை கால்பந்து விளையாடிக் காட்டுகினறனர் . அதுவும் அந்தக் கால்பந்தை சக்கிலியர் குடும்பத்தினர் செய்து, தக்க மரியாதைகளுடன் கொண்டு வந்து, கோவிலில் விடுவார்கள் கோவில் வட்டாரத்தில் உள்ள கல்வெட்டு எட்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு.
1448ம் ஆண்டு அப்துல் ரஜாக் (Records written by Abdul Razzak in 1448) என்பவர் எழுதிய படைப்பிலிருந்து சில விஷயங்கள் தெரிய வருகின்றன . அப்போது மாணிக்கக் (Ruby Stones) கண்களுடன் ஆறு அடி உயர தேவி சிலை இருந்தது ; கோவில் பித்தளைத் தகடுகளால் கட்டப்பட்டது. இப்போது 10 அடிக்கும் மேலான உயரம் உடைய களிமண் சிலை உளது. எட்டு மருத்துவ மூலிகைகளால் செய்யப்பட பசை 12 ஆண்டுக்கு ஒரு முறை சிலை மீது பூசப்படுகிறது . மேலும் இந்த மூலிகைக் கலவை முன்காலத்தில் செய்யப்பட்ட கலவை. ஆண்டுதோறும் புதிதாகச் செய்யப்படுவதில்லை . இப்போது செப்புத் தகடுகள் உடைய சிற்பங்கள் நம்மை வரவேற்கின்றன .
Xxxxx
65. மல்கி ஸ்ரீ வேங்கட ரமணர் கோவில் S.V. Temple, Mulki
மல்கி என்னும் இட்டத்திலுள்ள வேங்கட ரமணர் கோவில் 1277 ஆம் ஆண்டு முதல் வரலாறு உடைய பழைய கோவில். இக்கோவிலில் உக்ர நரசிம்மர், பிந்து மாதவர், விட்டல் , வேங்கட ரமணர் மூர்த்திகளுக்கு வழிபாடு நடக்கிறது . மூலிகைபுரம் என்பதே திரிந்து மல்கி ஆனது என்பது நம்பிக்கை. அனுமன் மருந்து மலையான சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கிச் செல்லுகையில், இதை இலங்கை என்று நினைத்து இறங்க எண்ணினாராம் . அதனால் இதற்கு ஓல லங்கை என்ற பெயரும் உண்டு . பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உக்ர நரசிம்மருக்கு எட்டு கைகள்; மூன்று கண்கள்; ஒரு காலில் நின்று ஹிரண்ய கசிபு என்ற அரக்கனை நகத்தால் கிழிக்கிறார் . மங்களூரிலிருந்து 28 கி.மீ தொலைவு . இது சாம்பவி நதிக்கரையில் இருக்கிறது.
நரகிரி பர்வத சதாசிவர் கோவிலும் மங்களூர் வட்டாரத்தில் இருக்கிறது.
Xxxxx
67. தர்மஸ்தலம் Dharmasthala Temple (Kṣētra Dharmasthala)
மங்களூரு நகரிலிருந்து 74 கி.மீ தொலைவில் மிகவும் புகழ்பெற்ற தர்மஸ்தல கோவிலில் சிவன் வழிபடப்படுகிறார். மஞ்சுநாதர் என்ற பெயரில் வணங்குகின்றனர் ; பூஜை செய்யும் பட்டர்கள் மாத்வ வைஷ்ணவர்கள் !கோவிலை நிர்வகிப்பவர்கள் சமண மதத்தினர்.
கோவிலுக்கு குறைந்தது 800 ஆண்டு வரலாறு உண்டு.
கோவிலில் சிவ பெருமானுடன் அம்மனவாரு தேவி, சந் திரபிரபா தீர்த்தங்கர (சமணர்) மற்றும் சமண மத காவல் தெய்வங்களின் மூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன 16ம் நூற்றா ண்டில் கோவிலின் நிர்வாகி தேவராஜ ஹெக்கடே வேண்டுகோளின்படி த்வைத சாது வடிராஜ தீர்த்தர் கும்பாபிஷேகம் செய்தார்.
சற்று தொலைவில் சமணர்களின் கோமடேச்வர் / பாஹுபலி 39 அடி உயரத்தில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது
Xxxxx
68.குக்கே சுப்ரமண்யர் கோவில் Kukke Subrahmanya Temple

குக்கே சுப்ரமணியசுவாமி கோயில் கர்நாடக மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த காட்டில் குமாரமலையில் அமைந்துள்ளது.
மங்களூரிலிருந்து சுமார் 103 கிலோமீட்டர் தூரம்
குமார பர்வதம் மேற்குத் தொடர்ச்சி மலையில் 4000 அடி உயரமுள்ள மலையாகும்.. இந்த மலையே ஆதி சேஷன் வடிவத்தில் அமைந்திருப்பது வியப்பூட்டும் ஒரு அதிசயமாகும்! இங்கு சேஷ பர்வதம், சித்த பர்வதம், குமார பர்வதம் ஆகிய மூன்று மலைகள் உள்ளன. குமார பர்வதத்தில் குமார ஸ்வாமியின் இரு பாதச் சுவடுகள் கல்லிலே அமைந்துள்ளன.
இந்தப் பாதச் சுவடுகளிலிருந்து இரு வேறு திசைகளில் நீர் பெருகுவதைக் காணலாம். ‘உபய குமார தாரா’ என்று அழைக்கப்படும் இரு நதிகள் சுமார் 8 மைல் தூரம் தனித்தனியே பாய்ந்து பின்னர் ஒன்று சேர்வது ஒரு அற்புதமான காட்சியாகும்.
குக்கே சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில், கோயிலின் முன் மண்டபத்திற்கும் கர்ப்ப கிரஹத்திற்கும் நடுவே வெள்ளித்தூண் ஒன்று உள்ளது. இதை வலம் வந்து வெள்ளித் தூணில் அமைந்துள்ள கருடனை வழிபடுதல் மரபு, இதனால் சர்ப்பங்கள் கக்கும் விஷம் ஒன்றும் செய்யாது என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நம்பிக்கை. இங்குள்ள முருகன் ஸ்வயம்பு மூர்த்தி. மூர்த்தியின் தலை மீது ஐந்து தலை நாகர் உள்ளது.
நாகங்களின் தலைவியான வாசுகிக்கு முருகன் அருள் பாலித்த தலம் இது.
ஆகவே சர்ப்பஹத்தி தோஷம், கால சர்ப்ப தோஷம் உள்ளிட்ட நாக தோஷம் உள்ளவர்கள் அதைப் போக்க இங்கு வந்து வழிபடுதல் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாக உள்ளது.
(நாங்கள் குக்கே சென்றபோது ஏராளமான நாகர் சிலைகளைக் கண்டோம். குறிப்பிட்ட நேரத்தில் வந்து நாகர் சிலையை பிரதிஷ்டை செய்ய பெரிய கூட்டம் குழுமியிருந்தது)
முன்னர் வெளியான கட்டுரையிலிருந்து ஒரு சிறிய பகுதியைக் கொடுத்தேன். அதற்கு நமது வாசகர் (காலசென்ற) நஞ்சப்பா எழுதிய விமர்சனம் இதோ
R Nanjappa / October 20, 2020
இந்த குக்கே சுப்ரமண்யாதான் அசல் சுவாமிமலை என்பது சிலர் கொள்கை! குன்றுதோராடும் குமரனுக்கு கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் இருப்பது ஒரு செயற்கைக் குன்றுதானே! குக்கே சுப்ரமண்யாவில் இருக்கும் மலை நதி எல்லாம் குமார சம்பந்த முடையது!
அருணகிரி நாதர் வாக்கில் காவிரிவடகரை ஸ்தலமே -இன்றைய சுவாமி மலையே- சுவாமிமலை என திருப்புகழில் பாடியிருக்கிறார். இருந்தாலும் இந்தச் சந்தேகம் இருக்கிறது. நச்சினார்க்கினியரின் திருமுருகாற்றுப்படை உரையில் ‘திருவேரகம் மலை நாட்டில் உள்ள தலம்’ என்று எழுதியிருக்கிறார்!
கும்பகோணத்திலேயே இருக்கும் சில குடும்பத்தினருக்கு குலதெய்வம் குக்கே சுப்ரமண்யாதான் என்பது ஒரு முக்கியச் செய்தி.
இதைப்பற்றி கி.வா.ஜ அவர்கள் தன் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.[ புத்தகம்: வழிகாட்டி, முதல் பதிப்பு:1947].
To be continued………………………………………………