
Udupi Sri Krishna Temple
Post No. 12,344
Date uploaded in London – – 30 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 14
69.மஹாலிங்கேஸ்வர கோவில் The Mahalingeshwara Temple of Nandalike
சுமார் 700 ஆண்டு வரலாறுடையது நந்தலிகே மஹாலிங்கேஸ்வர கோவில். இது துளுவ நாட்டு பாணியில் அமைந்த கோவில் .சிவன், கணபதி சந்நிதிகளுடன் நிறைய தெய்வங்களுக்கு தனித்தனி கர்ப்பக்கிரகங்கள் இருக்கின்றன. அருகில் குடும்பத்தை நிர்வகிக்கும் ஹக்கடே முதலியோரின் அரண்மனை போன்ற வீடுகள் அப்படியே பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் நடைபெறும் சிறி (Siri Jhatre) யாத்திரையில் (விழாவில்) கிறிஸ்தவர்களும் கலந்து கொள்ளுகின்றனர். கன்னடக் கவிஞர் முத்தண்ணாவின் நினைவுச் சின்னமும் இங்கு உளது . பாரதியாரைப் போல இளம் வயதில் இறந்தவர், வறுமையில் வாடியவர். யக்ஷகான கவிஞர்.
Nandalike Sri Mahalingeshwara Devasthana, Naalku Sthana – Nandalike, Karkala Taluk, Udupi District, Karnataka – 576126
Nandalike Lakshminaranappa, known by his pseudonym Muddana (; 24 January 1870 – 15 February 1901)

Xxxxx
70.உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் Udupi Sri Krishna Temple

உடுப்பி எங்கே உள்ளது?
அரபிக் கடல் ஓரமாக அமைந்த கோவில் நகரம் இது. மங்களூரிலிருந்து 60 கிலோமீட்டர்; பெங்களூரிலிருந்து 381 கிலோமீட்டர்.
த்வைத மத ஸ்தாபகரான மத்வரால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் 800 ஆண்டுகளாக அருள் மழை பெய்து வருகிறது.
உடுப்பியில் ஒரு ஜன்னல் வழியாகத்தான் கண்ணபிரானைத் தரிசிக்கவேண்டும். அற்புதமான நகைகளை அணிந்த கிருஷ்ணன், ஒரு அறைக்குள் ஏன் இப்படி ஒளிந்து கொண்டு இருக்கிறார்? ஏன் என்றால், கனக தாசர் என்ற கீழ் ஜாதி பக்தர் கோவிலுக்கு வந்தபோது அக்கால வழக்கப்படி அவருக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இறைவனுக்குத்தான் ஜாதிகள் கிடையாதே? உடனே கனகதாசர் இருந்த திசையை நோக்கித் திரும்பி ஜன்னல் வழியே காட்சிதந்தார். இன்று நாம் போனாலும் கூட அதே கனகதாசர் ஜன்னல் வாயில் வழியாகத்தான் கிருஷ்ணனைத் தரிசிக்க வேண்டும்.
இரண்டாவது அதிசயச் செய்தி மத்வர் காலத்தில் நடந்தது. அவர் கடற்கரையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார் அப்போது தொலைவில் வந்துகொண்டிருந்த ஒரு கப்பல், பாறையுள்ள பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட மத்வர், பெரும் ஆபத்தைத் தடுப்பதற்காக, தன் மேல் துண்டை ஆட்டி எச்சரித்தார். கப்பலும் பிழைத்தது.மாலுமி எவ்வளவோ விலை உயர்ந்த பொருட்களை கொடுக்க முன்வந்தான். ஆயினும் கப்பலில் உள்ள மஞ்ச ள் நிற பாறைகளை மட்டும் மத்வர் எடுத்தார். அதற்குள் பலராமன் ,கிருஷ்ணன் சிலைகள் இருந்தன. அவை இரண்டு இடங்களில் தனித்தடியே பிரதிஷ்டை செய்யப்பட்டன.
மூன்றாவது முக்கியச் செய்தி என்னவென்றால் உடுப்பி கோவிலைச் சுற்றி எட்டு புனித மடங்கள் இருக்கின்றன. அவற்றின் தலைவர்கள் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கோவில் பொறுப்பை சுழற்சி முறையில் ஏற்கின்றனர்.
மத்வர் பிறந்த பஜக(Pajaka) அருகிலேயே உள்ளது . உடுப்பியிலிருந்து 12 கி.மீ.
Xxxxxx
உடுப்பியிலிருந்து ஆறு கி.மீ தொலைவில் கல்யான் பூரில் கெஞ்சம்மா, வீரபத்ரர், மகாலிங்கேஸ்வரர், கணபதி, வேங்கடரமணா கோவில்கள் இருக்கின்றன
உடுப்பியிலிருந்து 13 கி.மீ தொலைவில் பிரம்மவரம் என்னும் இடத்தில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில்கள் மஹாலிங்க கோவில், கோபிநாத் கோவில், ஜனார்த்தன கோவில்கள் உள்ளன

இவற்றில் ஹொய்சாளர் பாணியில் அமைந்த கோபிநாதர் கோவில் சிறப்புடையது பிராமணர்கள் ஊர் என்பதால் இப்பெயர். சீதா, சுனா ஆகிய இரண்டு நதிகளுக்கு இடையே ஊர் உளது.
சாலிக்ராம யோக நரசிம்மர் கோவில் Saligrama Narasimha Temple
இது சாலிக்ராம கல்லால் ஆனா நரசிம்மர். இங்கு மஹா கணபதி யந்திரத்தின் மீது நரசிம்மர் அமர்ந்துள்ளார்.
உடுப்பி நகரிலிருந்து 20 கிமீ தொலைவு. குரு நரசிம்மர் என்ற பெயரும் உண்டு
xxxx
71.ஆனகுட்ட விநாயகர் கோவில் Anegudde Vinayaka Temple
மங்களூரு நகரிலிருந்து சுமார் 100 கி.மீ.குந்தாப்பூரிலிருந்து 9 கி.மீ தொலைவில் மிகவும் பிரசித்திபெற்ற ஆன குட்டே (யானை மலை) பிள்ளையார் கோவில் இருக்கிறது
பரசுராம சிருஷ்டி என்று அழைக்கப்படும் ஏழு புனிதத் தலங்களில் இதுவும் ஒன்று. இந்த இடம் கும்பாஷி என்றும் சொல்லப்படுகிறது அகஸ்தியர் தவம் செய்தபோது கும்பாசுரன் இடையூறு செய்ததாகவும் அப்போது அவரை த்வம்சம் செய்த இடம் என்பதாலும் இந்தப்பெயர் ஏற்பட்டது.
வியாக சதுர்த்தி காலத்தில் பெரிய உற்சவம் நடக்கும் ‘; முக்கி அக்கி கடுபு சேவை யில் வேகவைத்த அரிசிச் சோறு (உண்டைக் கட்டி ) படைக்கப்படுகிறது Mudi Akki Kadubu’ seva
Xxxx
To be continued………………………………….
Tags- சாலிக்ராம யோக நரசிம்மர் , உடுப்பி, கிருஷ்ணர், ஆனகுட்டே , விநாயகர் , கோவில்