
Post No. 12,349
Date uploaded in London – – 31 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Quiz Series No.55
QUIZ பகவத் கீதை பத்து QUIZ
1.எந்த பகவத் கீதை வாசகத்தை இந்திய அரசு தபால் தலையில் வெளியிட்டது ?
xxxxx
2.உடலுக்கு அழிவு உண்டு; ஆனால் ஆத்துமாவுக்கு அழிவில்லை என்பதை கிருஷ்ணர் எங்கே சொல்கிறார் ?
xxxx
3.சுவாமி விவேகானந்தருக்கு மிகவும் பிடித்த பகவத் கீதை வரி எது?
xxx
4.நல்லோரைக் காப்பேன்; தீயோரை அழிப்பேன் என்று எந்த அத்தியாயத்தில் சொல்கிறார்?
xxxx
5.பகவத் கீதையில் எத்தனை அத்தியாயங்கள் உள்ளன? எத்தனை ஸ்லோகங்கள் இருக்கின்றன ?
xxxx
6.உன்னையே நீ அறிவாய் KNOW THYSELF என்று கிரேக்கர்கள் சொன்னதாக கலைக் களஞ்சியங்கள் சொல்லும். ஆனால் அதற்கு முன்னரே கிருஷ்ணர் எங்கு சொன்னார் ?
Xxxx
7.கடவுளை நாடி வருவோர் 4 வகையாம். அவர்கள் யார்?
xxx
8.நரகத்துக்கு எத்தனை வாசல்கள் இருப்பதாக கிருஷ்ணர் கூறுகிறார் ?
xxx
9.”ஓடும் இருநிதியு மொன்றாகக் கண்டவர்கள்
நாடும் பொருளான நட்பே பராபரமே” என்ற தாயுமானவர் “
கூற்று பகவத் கீதையில் எப்படி உள்ளது ?
xxxx
10.முருகன், அரச மரம் பற்றி கிருஷ்ணர் சொல்வது என்ன ?
XXXX


விடைகள்
1.நீ செய்யும் செயல்களை பற்றில்லாமல் செய்
கர்மன் ஏவ அதிகாரஸ்தே மா பலேஷூ கதாசன (2-47): கருமத்திலேயே உனக்கு அதிகாரம், ஒருபோதும் பலனில் இல்லை
xxx
2.இரண்டாம் அத்தியாயத்தில்;
ந ஜாயதே ம்ரியதே வா கதா சிந் நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
(2-20) ஆத்மா ஒருபோதும் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. இல்லாமல் இருந்து மறுபடியும் உண்டாவதும் இல்லை. என்றும் உள்ளது, அழியாதது.
xxxx
3.க்லைப்யம் மாஸ்ம கம: ந ஏதத் த்வயீ உபபத்யதே( 2-3) :
பேடித்தனத்தை அடையாதே.இது உன்னிடத்தில் சிறிதும் பொருந்தாது.
இதுதான் கீதையின் முக்கிய மெஸேஜ்MESSAGE என்று அவர் பேசியுள்ளார்.
xxxx
4.நாலாவது அத்தியாயத்தில்
பரித்ராணாய சாதூணாம், விநாசாய துஷ்க்ருதாம் (4-8) :
சாதுக்களைக் காத்தற்கும், துஷ்டர்களை அழிப்பதற்கும் யுகம் தோறும் அவதரிப்பேன்.- கிருஷ்ணர்
xxx
5.பதினெட்டு அத்தியாயங்கள்; 700 ஸ்லோகங்கள்
XXXXX
6.ஆத்மவான் பவ: (2-45) : உன்னையே நீ அறிவாய்
xxx
7.நாலு பேர் என்னைத் தேடி வருகிறார்கள் (7-16) -சதுர்விதா ஜனாஹா பஜந்தே மாம் – 1.துயரம் உள்ளவன், 2.ஞானத்தை நாடுபவன், 3.பணம் வேண்டியவன், 4.ஞானி
xxx
8.நரகத்தின் மூன்று வாசல்கள் -(16-21) – காமம், கோபம், லோபம்/ (பேராசை)
XXX
9.சம லோஷ்ட்டாச்ம காஞ்சனஹ
ஓடு , பொன் ஆகிய இரண்டையும் ஒன்றாகப் பார்ப்பவன் குணக் குன்று/ யோகி ஆவான் 14-24; 6-8
XXXXXX
10.சேனாதிபதிகளில் நான் முருகன் – 10-24
மரங்களுள் நான் அரச மரம் என்று அழைக்கப்படும் அஸ்வத்த மரம் ஆவேன் 10-28
—-SUBHAM—-
TAGS- பகவத் கீதை, க்விஸ், கேள்வி பதில்