கை, லை, ரி, ம்,  குறுக்கெழுத்துப் போட்டி (Post No.12,211)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,211

Date uploaded in London – –  1 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்தக் கட்டத்தில்  26 சொற்கள்  உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்.

கீழ்கண்ட குறுக்கெழுத்துக்  கட்டத்தில் சில சொற்கள் இடம் வலம் , மேல் , கீழ் என்று குறைந்தது மூன்று பக்கம் பாயும். .உதவிக்காக அம்புக்குறிகள் போடப்பட்டுள்ளன

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1.அந்தக்காலத்தில் ரயிலின் பெயர்; இப்போது மின்சாரத்தில் ஓடுவதால் பெயர் மங்கிவிட்டது

5.பிளிறும் பிராணி; அடுப்பு எரிக்கவும் அதே சொல் ,

6.ஊளையிடும் பிராணி ,

7.பூபாளம், காம்போதி, கல்யாணி எல்லாவற்றுக்கும் பொதுப்பெயர் ,

9.உலகிலேயே புனிதமான நதி ,

10.கசக்கும்; ஆனால் பல்துலக்க உதவும் ,

11.பொருத்தம், காரணம் FACTOR என்ற பொருளில் வரும்

13. அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோவில் உள்ள திருவண்ணாமலை வட்ட ஊர்  ,

15.இதை அடித்தால் பெரிய ஒளி கிளம்பும்; முரசு என்பதன் இன்னொரு பெயர்  ,

17.நுணல் , தன்  வாயால் கெடும் பிராணி

18.கராம் , தண்ணீருக்குள் வந்தால் யானையையும் வெல்லும் பிராணி

18.மயிலின் எடுப்பான பகுதி ,

 16.சிறியது , பையன் என்ற பொருள்; ஆனால் உடனே மாமரத்தை நினைவு படுத்தும் 2 எழுத்துச்  சொல்

XXXXXX

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

2.அக்பர், பாபர் முதலிய மன்னர்களின் பெயர்; நம் நாட்டின் தலைநகர் உள்ள சொல்  ,

3.நாரதர் தொழில் ,

4.எல்லோரும் எழுத உதவும்; உட்கார உதவும் ,

4.தாவித் தாவி ஓடும் ,

8.பட்ஜெட் அன்று எல்லோரும் பயப்படும் சொல் , ,

8.தாகூர், போஸ் , விவேகானந்தாவை நினைவுபடுத்தும் மாநிலம் , 

10.விரும்புதல் ஆசைப்படுதல் ,

 10.திருப்பதி மலை ,

14.இது இல்லாத மனிதன் இல்லை ,

 17.எண் ஜான் உடம்புக்கு இதுவே பிரதானம் ,

 13.இயற்கையின் எதிர்ப்பதம் ,

18. கை நொண்டி ,

12.கல்யாணத்தில் மேளம் ஏற்படுத்தும் சப்தம்

1    2 3
       
 4       
5 6 7  
  8     
9      
         10
11      
   12   
13 14   15
  16    
    17  
 18       19

 விடைகள்

பு 1கைண்டி 2 க3
   ல் 
 ப4    லி 
க5ரிந6 ரா7ம்
 வ 8  ஜா கை
க9ங்கை   ட்
   பும்வே    10
அ11ம்ம்  ங்
   டு12  
செ13ங்க14ம்மாட15
 வ16டு  ம்
ற் லைத17 
கைதோ18  லை   மு19

ACROSS

1.புகைவண்டி 5.கரி, 6.நரி, 7.ராகம், 9.கங்கை, 10.வேம்பு, 11.அம்சம்,13. செங்கம் ,15.டமாரம் ,17.தவலை, 19.முதலை , 18.தோகை, 16.வடு.

XXXXXX

DOWN

2.டில்லி ராஜா, 3.கலகம் , 4.பலகை, 4.பரி, 8.வரி, , 8.வங்கம்,  10.வேட்கை, 10.வேங்கடம், 14.கவலை, 17.தலை, 13.செயற்கை, 19.முடம், 12.டும் டும்

—subham—

Tags- கை, லை, ரி, ம்,  குறுக்கெழுத்துப் போட்டி

பழைய கேள்வி தான்; ஆனால் புதிய பதில்கள் (Post No.12,210)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,210

Date uploaded in London –  July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

பழைய கேள்வி தான்ஆனால் புதிய பதில்கள்!

ச.நாகராஜன்

இண்டர்நெட்டில் படித்து ரசித்த ஜோக் இது.

பழைய கேள்வி ஒன்று – ஆனால் பதில்களோ புதிது!

சுயமுன்னேற்றம் பற்றி பயிற்சி தரும் ஒரு பயிற்சியாளர் அனைவரையும் பார்த்துத் தான் கேட்கும் வழக்கமான கேள்வியைக் கேட்டார்.

“நல்ல நம்பிக்கை உடையவருக்கும் தோல்வி மனப்பான்மை உடையவருக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா? எதிலுமே நாம் பிரகாசமான பக்கத்தைப் பார்த்து நம்பிக்கை கொள்ள வேண்டும்.

இப்போது நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்கிறீர்களா?”

அனைவரும் ‘சொல்கிறோம்’ என்று கூவினர்.

பாவம் அந்தப் பயிற்சியாளருக்குத் தெரியாது விவகாரமான ஒரு கூட்டத்தினரிடையே தான் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்று.

பயிற்சியாளர் தன் கையிலிருந்த ஒரு கிளாஸை எடுத்தார். அதில் பாதி அளவு தண்ணீரை விட்டார்.

“இப்போது நீங்கள் என்ன பார்க்கிறீர்கள், இதில்?” என்று கேட்டார்.

முதலில் இருந்த ஒருவர் – நல்ல நம்பிக்கை உடையவர் – ‘கிளாஸில் பாதி அளவு தண்ணீர் நிரம்பி இருக்கிறது’ என்றார்.

“பிரமாதம்” என்றார் பயிற்சியாளர்.

இன்னொருவர் – தோல்வி மனப்பான்மை உடையவர் – ‘கிளாஸ் பாதி காலியாக இருக்கிறது’ என்றார்.

இதை எதிர்பார்த்திருந்த பயிற்சியாளர் இது தான் தோல்வி மனப்பான்மைக்கு அடையாளம் என்று விவரிக்க ஆரம்பிக்கும் முன்னர் இன்னொருவர் எழுந்தார்.

நான் ஒரு எஞ்சினியர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் , “இந்த கிளாஸ் எவ்வளவு தண்ணீருக்காக வடிவமைப்பு செய்யப்பட வேண்டுமோ அப்படி செய்யப்படாமல் ஓவர் டிஸைனாக – கூடுதல் வடிவமைப்பு கொண்டதாக இருக்கிறது” என்றார்.

பயிற்சியாளர் விழித்தார்.

அடுத்தவர் எழுந்தார்.

நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், ‘கிளாஸில் தண்ணீர் நிரப்பப்பட்ட விதமே தப்பு. இதை எல்லோருக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுக்கும் விதத்தில் சிறிய கிளாஸ்களில் தண்ணீரைச் சமமாக ஊற்றி பங்கீடு செய்ய வேண்டும்’ என்றார்.

அடுத்தவர் எழுந்தார்.

தன்னை ஒரு உளவியலாளர் – சைக்காலஜிஸ்ட் – என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர்,, “இந்த கிளாஸில் உள்ள தண்ணீர் உங்களை எப்படி உணர வைக்கிறது என்று கூறுங்கள்’ என்று கேட்கிறது” என்றார்.

அடுத்தவர் எழுந்தார்.

தன்னை க்வாண்டம் பிஸிக்ஸில் வல்லுநர் என்று கூறிக் கொண்டவர், “கிளாஸில் நீர் உள்ளே இருக்கலாம், அல்லது வெளியேயும் இருக்கலாம், அல்லது ஒரே சமயத்தில் இரண்டு இடத்திலும் இருக்கலாம்” என்றார்.

அடுத்தவர் எழுந்தார். அவர் ஒரு முதலாளி.

‘இதில் பயனாளரின் பயன்பாட்டிற்கு முழு அளவு முக்கியத்துவம் தரப்படாமல் தவறான விநியோக முறையைக் காண்பிக்கிறது’ என்றார் அவர்.

அடுத்த ஒரு வியாபாரி எழுந்தார். ‘கொள்ள வேண்டிய கொள்முதல் அளவு இல்லாமல் பாதி தண்ணீர் கொண்டிருப்பதால் இதன் மதிப்பு பாதியாக அல்லவா குறையும்’ என்று குறைப்பட்டுக் கொண்டார்.

ப்ராஜெக்ட் மானேஜர் எழுந்தார். ‘எவ்வள்வு இருக்க வேண்டுமோ அந்த அளவைக் கொண்டிராமல் இந்த கிளாஸ் இரு மடங்கு பெரிதாக இருக்கிறதே’ என்றார்.

 சந்தை விற்பனையாளர் அடுத்து எழுந்தார். “உங்களது கிளாஸை திருப்பி வடிவமைப்பு செய்ய வேண்டும்” என்றார்.

அடுத்து இயற்பியல் வல்லுநர் எழுந்தார். கி’ளாஸ் பாதி காலியாக இருக்கிறது என்று சொல்வது தவறு. பாதி அளவு தண்ணீரும் பாதி அளவு காற்றும் அதில் நிரம்பி இருக்கிறது’ என்றார்.

 ஆரோக்கிய மேம்பாட்டு பயிற்சியாளர் கேட்டார் :”இப்படி அனாவசியமாகக் கேள்வி கேட்காமல் இன்னும் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி அதை முழுவதுமாக நிரப்பலாமே” என்றார்.

பயிற்சி கொடுக்க வந்தவர் பயிற்சி முடிந்தது என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினார்!

காலம் ரொம்ப மாறிப் போச்சுங்க!

—– subham——