மூகாம்பிகை, சாரதாம்பிகை, முருதேஸ்வர்- கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற……Part 15 (Post No.12,354)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,354

Date uploaded in London – –  1 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மூகாம்பிகை, சாரதாம்பிகை , முருதேஸ்வர் கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 15  

உடுப்பியிலிருந்து முக்கியமான  கோவில்கள் எவ்வளவு தூரத்தில் உள்ளன என்பதை (Distance From Udupi) முதலில் காண்போம். ஓரிரு நாட்களில் உடுப்பியில் ஹோட்டல் அறை எடுத்து தங்கினால் நால் திசைகளிலும் பயணம் செய்து பல முக்கிய இடங்களைக் காணலாம் (கிலோமீட்டரில்)

Sri Manjunatha Swamy Temple, Dharmasthala  தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோவில்       110 kms.

Sri Subramanya Kshetra, Subramanya, Kukke  ஸ்ரீ  சுப்ராஹ்மண்ய கோவில் ,குக்கே  164 kms.

Sri Sahasralingeshwara Temple, Uppinangadi உப்பினகடி ஸஹஸ்ர லிங்கேஸ்வர கோவில்108 kms.

Sri Karinjeshwar Temple, Bantwal    பந்த்வால் கரிஞ்சேஸ்வர் கோவில்100 kms.

Sri Durgaparameshwari Temple, Kateel        கதீல் துர்கா பரமேஸ்வரி கோவில் 60 kms.

Sri Ananthapadmanabha Temple, Kudupu  குதுப்பு அந்த பத்மநாப சுவாமிகோவில் 69 kms.

Sri Mangaladevi Temple, Mangalore மங்களூரு மங்களாதேவி கோவில் 63 kms.

Sri Rajarajeshwari Temple, Polali      போலாலி  ராஜ ராஜேஸ்வரி கோவில் 84 kms.

Sri Kadri Manjunatha Temple, Mangalore   கத்ரி மஞ்சு நாத கோவில் 63 kms.

Sri Durgaparameshwari Temple, Bappanadu           பப்பநாடு துர்கா பரமேஸ்வரி கோவில் 35 kms.

Sri Gokarnanatha Temple, Kudroli, Mangalore        குத்ரோலி கோகர்ண நாத கோவில் 60 kms.

Sri Mookambika Devi Temple, Kollur            ஸ்ரீ மூகாம்பிகை கோவில்  70 kms.

Sri Sharadamba Temple, Sringeri      சிருங்கேரி சாரதாம்பா 90 kms.

Thousand Pillars Basadi, Moodabidri           55 kms.சமணர் கோவில்

Gomateshwara, Karkala         40 kms.சமணர் கோவில்

Chaturmukha Basadi, Karkala           40 kms.சமணர் கோவில்

The distance between Mangalore and Murudeshwar is 86 miles. The road distance is 97.5 miles.

மைல் கணக்கில் மங்களூரு- முருதேஷ்வர் கோவில் ரயில் நிலையம் 86 மைல் சாலை வழியாக 97.5 மைல்

Xxxxx

Sringeri Sharadamba Temple

நிலாவர்

சீதா நதியின் கரையில் அமைந்த இடம் ஒரு புனித ஸ்நான கட்டம் ஆகும் .விருச்சிக மாத பஞ்சமியன்று , பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நதியில் புனித ஸ்நானம் செய்ய வருகின்றனர். உடுப்பியிலிருந்து 18 கி.மீ தொலைவில் இருக்கிறது இங்கு மஹிஷமர்தினி என்னும் துர்கா கோவில் இருக்கிறது

Xxxx

72.கொல்லூர் மூகாம்பிகை கோவில் Sri Mookambika Devi Temple, Kollur

இது முக்கியமான சக்தி/ தேவி வழிபாட்டுத் தலம் .

இக் கோயிலின் பிரதான தெய்வமாக சுயம்பு மூர்த்தமான ஜோதிர்லிங்கம் ஆகும். இதன் நடுவில் தங்கத்தினாலான வரிகளையுடய ஒரு பிளவு காணப்படுகிறது. லிங்கத்தின் இடப்புறம் முப்பெரும் தேவியர்களையும் வலப்புறம் மும்மூர்த்திகளையும் குறிக்கிறது. இதனுடன் நான்கு கைகளையுடய பஞ்சலோகத்தாலான மூகாம்பிகை திரு உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இது உடுப்பியிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலும் மங்களூரிலிருந்து சுமார் 135 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இங்குள்ள மூகாம்பிகை தேவிக்கு மூன்று கண்களும் நான்கு கரங்களும் உள்ளன. இரு கரங்களில் சக்கரமும் சங்கும் ஏந்தி இருக்கும் அன்னை, மற்ற இரு கரங்களில் ஒரு கை அபயகரமாகவும் இன்னொரு கை தன் பாதத்தைச் சுட்டிக்காட்டும் படியாகவும் பத்மாசனத்தில் அமர்ந்தபடி இருக்கிறாள்.

கேரள பாணியில் ஆண்கள் சட்டை அணியாமல் மேல் துண்டுடன் தான் செல்ல வேண்டும்.

அன்னை மூகாம்பிகை தேவிக்கு MGR எம்.ஜி.ஆர். தங்க வாள் காணிக்கை செலுத்தினார். இதைத் தொடர்ந்து 2004ல் அங்கே சென்ற ஜெயலலிதாஅந்தக் கோவிலுக்கு 30,000 ரூபாயும் ஒரு டன் நெய்யும் காணிக்கையாகக் கொடுத்தார்.

ஆதிசங்கரர் நிறுவிய மந்திர தந்திர ஸ்ரீ சக்ரமே மூகாம்பிகை கோவிலின் புகழுக்கும் காரணம். ‘மூக’ என்றால் தமிழில் ஊமை என்று பொருள். மூகனாக இருந்த, ஒரு அசுரனை அன்னை பார்வதி அழித்ததால் இந்த தேவிக்கு மூகாம்பிகை என்று பெயர்; சிலையைப் பார்த்தால் கொள்ளை அழகு!

அனைவரும் உடனே தரிசிக்க வேண்டிய அன்னை மூகாம்பிகை.

நான் அங்கு  வாங்கிய படத்தை தினசரி டைரியில் வைத்து அனுதினமும்  வழிபடுகிறேன். பூஜை அறையில் தனி படம்.

xxxx

மனைவிக்கு போட்ட கட்டளையை நானே மீறிய இடம்.

எங்கே சாமி படத்தைப் பார்த்தாலும் வாங்குவது; அதை பூஜை அறைக்குள் வைத்து பூ வைப்பது என் மனைவியின் வாடிக்கை. இது எனக்கு எரிச்சலைத் தந்தது ஆகையால்  இனி சாமி படமே வாங்ககூடாது . பழைய படங்களை, டிஸ்போஸ் பண்ண முடியாமல் தவிக்க நேரிடுகிறது. சுவாமிகள் சொல்லும்படி பழைய படங்ககளை நதிகளில் தூக்கி எறிந்தால் லண்டனில் தண்டனை அபராதம் வேறு  என்று எச்சரித்து இருந்தேன் .

என் கட்டளை மீறப்பட்ட முதல் இடம் எங்கள் குல தெய்வம் குடிகொண்ட வைத்தீஸ்வரன் கோவில் . அங்கு நிறைய படங்கள் வாங்கி ஒன்று பூஜை அறையில் இருக்கிறது. ஆகையால் இந்த முறை எந்தப் படமும் வாங்கக்கூடாது என்று சொல்லியிருந்தேன். அர்ச்சனை எல்லாம் முடிந்தது கணவன் மனைவி குழந்தைகள் சகிதம் நமஸ்காரம் செய்தவுடன் ஆசீர்வாத மந்திரம் சொல்லித் பட்டர் ஒரு  பூஜைத் தட்டைக் கொடுத்தார் . பின்னர் ஒரு விபூதி பாக்கெட்டுடன் படத்தையும் கொடுத்து இதை வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றார் . இதைவிட வேறு அசரீரி வேறு தேவையா? பயபக்தியுடன் வாங்கி பூஜை அறையில் வைத்தோம் . நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினை க்கிறது .

மனைவிக்கு போட்ட கட்டளையை நானே மீறிய இடம் மூகாம்பிகை கோவில்.

தரிசனத்தை முடித்துக் கொண்டு அரை மணி நேரத்துக்குள் வெளியே வந்து விட்டோம். பக்கத்திலேயே சாலையில் கடை வைத்து ஒருவர் பல சைஸ்களில் மூகாம்பிகை படங்களை விற்றுக் கொண்டிருந்தார். என்னை அறியாமலேயே ஒரு படத்தை விலைக்கு வாங்கினேன் . காரணம் அவ்வளவு அழகு; அவ்வளவு லட்சணம் ; அருள் பொங்கும் முகம்!!! சாமி படமே வாங்கக்கூடாது  என்ற கட்டளையை மட்டும் மீறுபவன் அல்ல. புஸ்தகமே வாங்கக்கூடாது என்ற கட்டளையையும் அடிக்கடி மீறுகிறேன் !!!

Xxx

73.சிருங்கேரி சாரதாம்பாள் கோவில்

ஆதிசங்கரர் நிறுவிய மடமும்   ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயமும் அமைந்துள்ளது.  இந்த இடத்தில் ஒரு தவளை நாகத்திற்கு கடும் வெயிலில் குடை பிடிப்பதைக் கண்டு வியந்து , ஆதி சங்கரர் இந்த இடத்தைத்  தேர்ந்தெடுத்துள்ளார். இயற்கையின் விதிகளை மீறி பகைமை உணர்வை மிருகங்களே கைவிட்ட இடமாதலால் அன்பின், அமைதியின் இருப்பிடம் அது .

ஸ்ரீ சாரதாம்பா கோவில் கல்வி மற்றும் ஞானக் கடவுளான தேவி சாரதைக்காகக் கட்டபட்டுள்ளது. இந்த கோவில் ஆதி சங்கரர் காலத்தைச் சேர்ந்தது. 14ம் நூற்றாண்டில், வித்யாரண்யர், சந்தன விக்ரகத்தை கல் மற்றும் தங்கத்தாலான விக்ரகமாக மாற்றினார் . கேரள பாணியில் மரத்தால் அமைந்த இக்கோயிலில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின்னர் கல் கட்டிடம் எழுந்தது  . தூங்க பத்திரா ஆற்றைக் கடந்தால் அடுத்த கரையில் சிருங்கேரி சங்கராச்சார்யரையும், மடத்தையும் தரிசிக்கலாம்.

Xxxxxx

74. முருதேஸ்வர் கோவில்

“ஸ்ரீ முருதேஸ்வரர்” சிவன் கோவில் 500 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு உடைய கோவில்

அரபிக் கடல் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இக்கோவிலுக்கு 20 நிலைகள் கொண்ட அழகிய , மிக உயரமான ராஜகோபுரம் இருக்கிறது. இக்கோவிலுக்கு பின்பகுதியில் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை இருக்கிறது. இதர தெய்வங்களுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. சனிபகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது.. கந்துக குன்றின் மீது அமைந்த கோவில் இது.

சிவ பிரான் சிலையின் உயரம் 123 அடி ;

கோபுரத்தின் உயரம் 237 அடி..

இந்தியாவில் உள்ள கோபுரங்களில் மிக உயரமான கோபுரங்களில் இதுவும் ஒன்று

கோபுரத்தின் உச்சி வரை லிப்ட் LIFT அமைத்திருப்பது  மற்றொரு சிறப்பு.

அங்கிருந்து அரபிக்  கடலையும் சிவன் சிலையையும் கண்குளிர தரிசிக்கலாம்

சிலைகள் பூங்காவில் இராவணன் , கிருஷ்ணார்ஜுனா , கணேசர், சூர்ய நாராயணர்  சிலைகளையும் பெரிய அளவில் சமைத்திருக்கிறார்கள் 

சிவ பிரான் சிலைக்கு அடியிலுள்ள குகை மியூசியத்தில் ராவணனின் லீலைகளையும் காணலாம் .

சிவனிடம் ஆத்ம லிங்கத்தை ராவணன் தவம் செய்து வாங்கினார் . அந்த  லிங்கத்தை கணபதி தந்திரமாக இங்கே இறக்கிப் பிரதிஷ்டை செய்துவிட்டார்.

முருதேஸ்வரிலிருந்து 158 கிலோமீட்டர் தொலைவில் மங்களூர் நகரம் இருக்கிறது. மைல் கணக்கில் மங்களூரு- முருதேஷ்வர் கோவில் ரயில் நிலையம் 86 மைல் ; சாலை வழியாக 97.5 மைல்.

To be continued…………………………………………….

Tags- சிருங்கேரி, சாரதாம்பா கோவில், முருதேஸ்வர் , கொல்லூர், மூகாம்பிகை, மனைவிக்கு கட்டளை, நானே  மீறினேன்

Leave a comment

Leave a comment