Post No. 12,353
Date uploaded in London – – 1 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

QUIZ தமிழ் சங்கம் பத்து QUIZ
1.மூன்று தமிழ் சங்கங்களும் எவ்வளவு காலம் இருந்தன ?
XXXX
2.மதுரையில் நாலாவது தமிழ் சங்கத்தைத் துவக்கியது யார்?
XXXX
3.இரண்டாம் தமிழ் சங்கத்தின் நூல்கள் யாவை ?
XXXX
4.முதல் தமிழ் சங்க மன்னரின் ஸம்ஸ்க்ருதப் பெயர் என்ன?
XXXXX
5.இரண்டாம் தமிழ் சங்க மன்னரின் தலை நகரின் ஸம்ஸ்க்ருதப் பெயர் என்ன?
XXXXX
6.மூன்று தமிழ் சங்கங்கள் கால புலவர்கள் எண்ணிக்கை என்ன ?
XXXX
7.முதல் இரண்டு தமிழ் சங்க நகர்களுக்கு என்ன நேர்ந்தது ?
XXXX
8.கடைச் சங்கம் என்னும் மூன்றாம் தமிழ்ச் சங்கம் இருந்தது உண்மைதான் என்பதைக் காட்டும் நூல்கள் எவை ?
XXX
9.தமிழ் சங்க ஆண்டுகள் பொய் என்று சொல்லுவோர் என்ன காரணங்களைக் காட்டுகின்றனர் ?
XXXX
10.மொழியியல், மானுடவியல், அறிவியல், புவியியல் ஆகிய விஞ்ஞான அடிப்படையில் சங்கதாதை அணுகுவோர் CONCLUSION முடிபு என்ன?
XXXX

ANSWERS
1.தலை, இடை, கடை என்று மூன்று தமிழ் சங்கங்கள் இருந்த ஆண்டுகள் 4440+3700+1850 = 10,020 ஆண்டுகள்
XXXXX
2.மதுரைத் தமிழ்ச் சங்கம் 1901-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. 1902 முதல் ‘செந்தமிழ்’ என்னும் மாத இதழை வெளியிட்டுவருகிறது. பாண்டித்துரைத் தேவர் இதனைத் தோற்றுவித்தார். இது நான்காம் தமிழ்ச்சங்கம் எனப் போற்றப்படுகிறது.
XXXXX
3.இரண்டாம் தமிழ் சங்கத்தின் நூல்கள்கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் இத்தொடக்கத்தன; அவர்கள் கால இலக்கணம் :அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், இசைநுணுக்கம், பூதபுராணம்
XXXX
4.ஜெயமா கீர்த்தி ; ஜெயா மஹா கீர்த்தி; அவருடன் தமிழ் வளர்த்த அகஸ்தியரின் பெயரும் தமிழ் அல்ல. ரிக்வேதத்தில் உள்ள பெயர்
XXXX
5.கபாடபுரம்
XXXXX
6.மூன்று தமிழ் சங்கங்கள் கால புலவர்கள் எண்ணிக்கை4449 +3700+ 4449 புலவர்கள். உலகில் எந்த நாட்டு வரலாற்றிலும் இப்படிப் புலவர்கள் இருந் தாக வரலாறே இல்லை .
XXXXX
7.அவை சுனாமி பேரலைகள் தோன்றியபோது கடலில் மூழ்கின
XXXXX
8.சங்க கால நூல்கள், பிற்கால உரையாசிரியர்கள் , திருப்பாவை, அப்பர் தேவாரம், வால்மீகி ராமாயணம் அர்த்த சாஸ்திரம்
XXXXX
9.சங்கம் என்ற சொல்லே தமிழ் அல்ல ; தொல்காப்பிய இலக்கணப்படி தமிழ் மொழியில் ச என்னும் சொல்லே இருக்கக்கூடாது. நம்மிடமுள்ள சங்க கால நூல்களிலும் சங்கம் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல் இல்லை.
மேலும் இங்கே கூறிய 4440+3700+1850 என்பன எல்லாம் 37 என்னும் எண்ணால் வகுப்படக்கூடியது என்று பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை காட்டியுள்ளார் ; ஆகையால் இவை இயங்கிய காலம் 120+100+50 ஆண்டுகள் தான் .
மொழியியல் அறிஞர்கள் உலகில் எந்த மொழியும் மாறாமல் இருந்தது இல்லை என்று காட்டியுள்ளனர். நாம் தலைச் சங்க புலவர், இடைச் சங்க புலவர் என்று காட்டிய பாடல்கள் நாம் அறிந்த தமிழில் இருப்பதால் இவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை .
நமக்குத் தெரிந்த எந்த மொழிக்கும் 10,000 ஆண்டு வரலாறு இல்லை
இவை எல்லாம் பிற்கால ஆசிரியர்கள் எழுதிய குறிப்புகள்
மூன்று தமிழ் சங்கங்களிலும் நிறைய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் காட்டப்பட்டுள்ளன
அரசர்கள் புலவர்கள் எண்ணிக்கையும் மிகைப்படுத்தப்பட்டுள்ளன. 10,000 +ஆண்டுகளில் 197 மன்னர்கள் மட்டுமே ஆண்டனர் என்பது உலகில் எந்த நாட்டு வரலாற்றிலும் இல்லை. ஒரு மன்னருக்கு 20 அல்லது 25 ஆண்டு என்பதே உலகில் காணப்படும் AVERAGEஆவரேஜ்/ சராசரி. தமிழர்கள் ஒரு மன்னருக்கு 50 ஆண்டுகள் கொடுப்பது வியப்புக்குரிய கற்பனை!
XXXX
10.தலை, இடை, கடை என்று மூன்று தமிழ் சங்கங்கள் இருந்தது உண்மையே ; பொய் இல்லை.
தென் மதுரையும், கபாடபுரமும் கடலில் மூழ்கியது உண்மையே; நமக்கு குஜராத்தில் துவாரகா, தமிழ் நாட்டில் புகார் ஆகியன கடலில் மூழ்கியமைக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன . புலவர்கள் எண்ணிக்கையும் அரசர்கள் எண்ணிக்கையும் , சங்கங்கள் இருந்த கால எண்ணிக்கையும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள்.

–SUBHAM—
TAGS- QUIZ , தமிழ் சங்கம் பத்து, தலை, இடை, கடை ,மூன்று தமிழ் சங்கங்கள்
