
Post No. 12,360
Date uploaded in London – – 2 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

LONDON HARE KRISHNA RATH YATRA HIGHLIGHTS
As usual thousands of people participated in the Annual Hare Krishna Rath Yatra in London on 29-7-2023.
Only one Ratham/ Chariot with Jagannatha, Balabhadra and Subadra was pulled by the devotees.
Scores of Devotees prostrated before the Ratha on roads.
Since it began at Hyde Park corner and finished at Trafalgar square, several thousands watched the procession with wonder. It is the tourist area in London.
At the Hinduja Foundation fed all the people with tasty vegetarian food.
The devotees, particularly women devotees, sang and danced all along the route.
Two youngsters in Radha Krishna disguise attracted the attention of everyone. (See the attached pictures)
I have been covering Ratha Yatra for over 30 years.

முப்பது அல்லது 33 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் உள்ள மார்பிள் ஆர்ச்MARBLE ARCH பகுதிகளை போட்டோ எடுக்கப்போனபோது எனக்கு ஒரு சர் ப்ரைஸ் SURPRISE காத்திருந்தது . அங்கே இரண்டு அல்லது மூ ன்று தேர்கள் நின்று கொண்டிருந்தன. அதைச் சுற்றி குடுமி வைத்த வெள்ளைக்காரர்கள் நின்று கொண்டிருந்தனர். நான் கொண்டுபோன ‘டப்பா’ காமெரா மூலம் சில புகைப்படங்கள் எடுத்தேன் அவை என்னிடம் இன்றும் உள்ளன . அவர்கள் Battersea Park பாட்டர் ஸீ பார்க் வரை ஊர்வலமாகச் செல்வார்கள் என்று கேள்விப்பட்டேன் . எனக்கு அப்போது லண்டன் புதிது என்பதால், படம் மட்டும் எடுத்துவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டேன். அதற்குப் பின்னர் ஆண்டுதோறும் ரத யாத்திரை அன்று போய்க்கொண்டிருக்கிறேன். கோவிட் காலத்தில் 2 ஆண்டுகள் நடக்கவில்லை.
இந்த ஆண்டு 30-7-2023 ஆண்டு ஹரே கிருஷ்ணா ரதம் லண்டனின் HYDEPARK CORNER ஹை ட் பார்க் கார்னரிலிருந்து புறப்பட்டு டிரபால்கர் ஸ்கொயர் TRAFALGAR SQUARE வரை வந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். வெள்ளைக்கார கிருஷ்ண பக்தைகள் தெருவில் நடன ம் ஆடி வந்தனர் . ராதா, கிருஷ்ண வேடம் தரித்த இரண்டு குழந்தைகளை எல்லோரும் புகைப்படம் எடுத்தனர்.
ஊர்வலம் செல்லும் வழி, TOURIST AREA டூரிஸ்டுகள் குவியும் இடம் என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ரதத்தைக் கண்டு வியந்தனர் இந்த ஆண்டு ஒரே ரதம் மட்டுமே ஜகந்நாதரையும் பலபத்ராவையும் சுபத்ராவையும் தாங்கி பவனி வந்தது .தெருவெல்லாம் பக்தர்கள் சாலையில் விழுந்து நமஸ்காரம் செய்தது எல்லோரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. ; பல நாடுகளிலிருந்தும், பல ஊர்களிலிருந்தும் ஆண்டுக்கு ஒரு முறை சந்திக்கும் நிகழ்சசி ஆதலால் எல்லோரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி அன்பைப் பரிமாறிக்கொண்டனர். வழக்கம்போல பெண்கள் குழந்தைகள் சகிதம் , பிராம் PRAM சகிதம் வந்திருந்தனர். குழந்தைகள் விளையாடும் ஹரே கிருஷ்ணா பொம்மையைத் தலையில் வைத்துக்கொண்டு ஒருவர் பவனி வந்தார் . பல பஜனைக்குழுக்கள் தமுக்கு அடித்துக்கொண்டு ஆடியும் பாடியும் வந்தனர், தெருவெங்கும் ஹரே கிருஷ்ண கோஷம்தான் ;

இறுதியில் டிரபால்கர் ஸ்கொயரில் பல்லாயிரக் கணக்கானோருக்கு ஹிந்துஜா பவுண்டேஷன் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பல கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. இத்துடன் உள்ள படங்களில் பக்தர்களின் உற்சாகத்தை காணலாம்.

.jpg)
–subham—
Tags–London, Rath Yatra , லண்டன், ஹரே கிருஷ்ண ரத யாத்ரா