
Post No. 12,363
Date uploaded in London – – 3 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 16
75. க்ரோத க்ஷேத்ரா சங்கர நாராயணர் கோவில் Krodha Kshetra Shankara Narayana Temple

குந்தாப்பூரிலிருந்து 3 கி.மீ தூரத்தில் , இயற்கை வனப்புமிக்க மேற்குத் தொடர்ச்சி மலைக்கிடையே அமைந்தது க்ரோத க்ஷேத்ரா என்று அழைக்கப்படும் சங்கர நாராயணர் கோவில் ஆகும் .
கரா சுரன், ரக்தாசுரன் என்ற இருவர் அட்டூழியம் செய்தபோது க்ரோத மஹரிஷி , சங்கரனையும் நாராயணனையும் வழிபட்டு இரு அரக்கர்களையும் அழித்தார் என்பது புராண செய்தி. அருகிலுள்ள மலைக்கு க்ரோத கிரி என்று பெயர். அதன் உச்சியில் சங்கர நாராயணர், கெளரி, லட்சுமி ஆகியோருள்ள கோவில் இருக்கிறது .முக்கிய கருவறையில் வலது புறத்தில் சங்கரலிங்கமும் இடது புறத்தில் நாராயண லிங்கமும் காணப்படுகின்றன நாராயண லிங்கத்தின் மீது காமதேனுவின் காலடிச் சுவடுகளைக் காணலாம் . கோவிலுக்கு எதிரே அழகான கோடி தீர்த்தம் உளது.. லிங்கங்களைச் சுற்றி எப்போதும் நீர் இருக்கும்.
கோவிலில் அழகான ஹரிஹரர் விக்கிரகமும் உண்டு பரிக்ரமத்தில் வெள்ளி சங்கரநாராயண விக்கிரகத்தைத் தரிசிக்கலாம். போர்ச்சுகீசிசிய மணியும் அங்கே தொங்குகிறது . பல கல்வெட்டுகளும் உள . ஒரு கல்வெட்டு 1563 ஆம் ஆண் டு கல்வெட்டு என்பதால் குறைந்தது 500 ஆண்டுப் பழமையான கோவில்.
Xxxx
குந்தாப்பூரிலிருந்து 39 கிலோமீட்டர் தொலைவில் பைந்தூர் என்னும் இடத்தில் ஒரு சனீச்வர கோவில் இருக்கிறது
76.ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோவில் The Annapoorneshwari Temple , Horanadu

சிக்மகளூரிலிருந்து 100 கி.மீ தொலைவில் காடுகளுக்கு இடையே அன்ன பூர்ணேஸ்வரி கோவில் அமைந்துள்ளது அகஸ்தியர் ஸ்தாபித்த விக்ரகம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குறைந்தது 400 ஆண்டு வரலாறு உடைய கோவில். பத்ரா நதிக்கரையில் கோவில் இருக்கிறது .அக்ஷ்ய திருதியை முக்கிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது .அன்னபூர்ணேச்வரி சங்க சக்ரத்தை ஏந்தி நிற்கிறாள்.வேறு இரு கைகள் அபய முத்திரை வரத முத்திரை காட்டும் வகையில் உள்ளது.. அவற்றில் ஸ்ரீ சக்ரம், காயத்ரீ வரையப்பட்டுள்ளது . தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட அன்ன பூரணியைத் தரிசி ப்போருக்கு உணவுப் பஞ்சமே இராது என்பது பக்தர்களின் நம்பிக்கை .
கோவிலின் சிறப்பு என்னவென்றால் கூரையில் செதுக்கப்பட்ட கூர்ம, ஆதி சேஷ சிற்பங்கள் ஆகும் இங்கு பிராசதாமாக மூன்று வேளைகளிலும் உணவு, காப்பி, தே நீர் வழங்கப்படுகிறது . இந்த ஊரை ஸ்ரீக்ஷேத்ர ஹொரநாடு என்று சொல்லுவார்கள்.
Xxxxx
77.அம்ருதபுர அம்ருதேஸ்வரர் கோவில் The Amruteshvara temple
சிக்மகளூ ரிலிருந்து 67 கி.மீ.; ஷிமோகாவிலிருந்து 50 கி.மீ.அம்ருதபுரம் இருக்கிறது
இது தாரிகரே அருகில் இருக்கிறது. ஸ்படிக லிங்கத்தினால் ஆன சிவலிங்கம் இருக்கிறது
இங்குள்ள அம்ருதேஸ்வரர் கோவில்1196 C.E யில் கட்டப்பட்டுள்ளதால் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையுடையது . ஹொய்சாள மன்னன் வல்லாளனின் படைத்தளபதி கட்டியது
இதன் சிறப்பு ஆளுயர சரஸ்வதி சிலை, அமர்ந்த நிலையில் இருந்து அருள் சுரப்பதாகும். இதனால் கல்வியில் குறையுள்ளவர்கள் முறையிட இவளிடம் வருகின்றனர் .
எல்லா ஹொய்சாள கோவில்களிலும் உள்ளது போல புராணக் காட்சிகள் கற்களில் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் 70 ராமாயணக் காட்சிகள் தென்புறச் சுவரில் யுத்த காண்டத்திலிருந்து பால காண்டம் செல்லுவது போல தலை கீழ் வரிசையில் செதுக்கப்பட்டுள்ளன வட புறச்ச சுவரில் கிருஷ்ணர் பற்றிய 25 காட்சிகளையும் மஹாபாரதப் போர் பற்றிய 45 காட்சிகளையும் காணலாம் .கல்வெட்டுகள் நிறைந்த கோவில்.மத்திய கால கன்னடக் கவிஞ்சரான கவிச்சக்கரவர்த்தி ஜன்னாவின் கவிதைகள் அடங்கிய க ல் வெட்டு சிறப்புடையது

XXXXX
78.இந்து முஸ்லீம் வழிபடும் பாபா- புதன் தத்த கிரி Baba Budangiri / Chandradrona Hill ( Dargah and Dattapeeta)
பாபா புதன் கிரி, தத்தாத்ரேயரை வழிபடும் ஒரு தத்த பீடமாகக் கருதப்படுகிறது. முஸ்லீம்கள் இதை சூபி பிரிவு மகானின் நினைவிடமாக வழிபடுகின்றனர். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாபா புதன் , முதல் முதலில் காப்பி பயிரை வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்தார் என்று சொல்லப்படுகிறது . இது 1895 மீட்டர் உயர பாபா புதன் கிரி சிகரம், 1926 மீட்டர் உயர பாபா முல்லைன கிரி சிகரம்,உடைய பிறைச்சந்திர வடிவ குன்றுத்தொடர். இதனால் சந்திர த்ரோண பர்வதம் என்றும் அழைக்கப்படுகிறது. அருகிலேயே இதிஹாஸக் கதைகளுடன் இணைத்துப் பேசப்படும் 3 நீர்வீழ்ச்சிகளும் இருக்கின்றன. ஆகையால் இந்துக்களும் முஸ்லிம்களும் அதிகம் வரும் இடம் இது.. தத்தாத்ரேயர் என்பவர் பிரம்மா, விஷ்ணு, சிவனின் ஒன்றிணைந்த அவதாரமாகக் கருதப்படுகிறது
—to be continued…………………………..
Tags- கர்நாடகம், முக்கிய 108 கோவில்,அன்னபூரணி