
Post No. 12,362
Date uploaded in London – – 3 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பிஸினஸ் மேன் Business Man பற்றி குட்டிக்கதை
வங்காளத்தில் பிறந்து டேராடூனில் சமாதி எய்திய மா ஆனந்த மயீ சொன்ன கதை :-
ஒரு பணக்கார வியாபாரி பிஸினஸ் Business (வியாபாரம்) தொடர்பாக ஒரு பயணத்தை மேற்கொண்டார். அவரிடமுள்ள பணத்தைப் பறிப்பதற்காக ஒரு திருடனும் பிஸினஸ் மேன் போல டிப் டாப்பாக உடை அணிந்து கொண்டு அவருடன் பயணம் செய்தான். அவர்கள் இருவரும் ஒரே அறையில் தங்கினார்கள் . பணக்கார வியாபாரி தினமும் தனக்கு வரும் பணத்தை, திருட்டு வியாபாரிக்குத் தெரியும்படி பகிரங்கமாக எண்ணி, பையில் போடுவார். திருட்டு வியாபாரிக்கு அந்த பணத்தை எப்படியாவது பறிக்க வேண்டும் என்று ஆசை எழுந்தது. உண்மை வியாபாரி நனறாக குறட்டை விட்டுத் தூங்கும் நேரத்தில், வியாபாரி போல வேடம் அணிந்து வந்த திருடன் எல்லா இடங்களையும் தேடிப்பார்ப்பான். அவனால் கண்டுபிடிக்க முடியவே இல்லை. இனி ஒளித்து வைக்க எந்த இடமும் இல்லை என்ற அளவுக்கு அவன் அத்தனை இடங்களையும் பார்த்துவிட்டான் . அவனுக்கு பணத்தை எப்படி மறைத்து வைப்பது என்பதையாவது இந்த உண்மை வியாபாரியிடம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை பிறந்தது . தன் ஆர்வத்தை அடக்க முடியாமல் மறுநாள் உண்மையைக் கக்கினான் .
அன்பரே, நான் பிசினஸ்மேன் அல்ல. உன் பணத்தை அபகரிக்க ஒரு பிசினஸ்மேன் போல வேஷம் போட்டு வந்தேன். உன்னிடம் ஒன்றையாவது கற்றுக்கொள்ள ஆசை. பகிரங்கமாக பணத்தை எண்ணி அதைப் பையில் போடுகிறீர்கள் . அந்தப் பையை நானும் ஒவ்வொரு நாளும் தேடிப் பார்த்தேன் ; கிடைக்கவில்லை. அதை எங்கே ஒளித்து வைக்கிறீர்கள்? பக்காத் திருடனான என்னால் கூட கண்டுபிடிக்க முடியவில்லையே – என்றான்.
உண்மை வியாபாரி சிரித்துக் கொண்டே சொன்னார்: உன் நடை உடை பாவனைகளைப் பார்த்தபோதே நீ திருடன் என்பது எனக்குத் தெரியும். அந்தப் பணப் பையை நீ எங்கெல்லாம் தேடுவாய் என்பதும் எனக்குத் தெரியும். ஒவ்வொரு நாள் இரவிலும் அதை உன்னுடைய தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு நான் நிம்மதியாகத் தூங்கினேன். நீ எல்லா இடங்களையும் சந்தேகப்படுவாய்.; ஆனால் உன் தலையணை பற்றி சந்தேகம் வராது ; அங்கே தேட மாட்டாய் என்பது எனக்குத் தெரியும் என்றான். திருடனுக்கு வெட்கமும் ஏமாற்றமும் ஏற்பட்டது
கடவுளும் இப்படித்தான். நமக்குளேயே ஒளிந்து கொண்டு அவரது லீலைகளால் நம்மை வெளியே தேட வைக்கிறார் .. உங்களுக்குளேயே ஒளிந்து கண்டிருக்கும் கடவுளை வெளியே தேட அவசியமில்லை !
—subham—
Tags- பணக்கார வியாபாரி, பிஸினஸ் ,பிஸினஸ்மேன் , குட்டிக்கதை , மா ஆனந்த மயீ