மஹாத்மா காந்திஜியை சிலர் வெறுப்பது ஏன்? (Post No.12,361)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,361

Date uploaded in London –  3 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

மஹாத்மா காந்திஜியை சிலர் வெறுப்பது ஏன்?

ச.நாகராஜன்

மகாத்மா காந்திஜியை சிலர் வெறுப்பது ஏன்?

இந்தக் கேள்விக்கு விரிவான விடைகளைப் பலர் தந்து கொண்டே இருக்கின்றனர்.

அவர் முஸ்லீம்களிடம் காட்டிய பரிவும் அதில் ஹிந்துக்களின் நியாயமான உணர்வுகள் பலியானதும் ஒரு காரணம் என்பது ஒரு விடை.

இதை விளக்கும் முகமாக குருதத் என்பவர் விஸ்வாஸ்கட்டில் பதிவு செய்துள்ள ஒரு பதிவு இது. (Viswhwashghat by Guru Dutt)

ஆங்கிலத்தில் உள்ள கட்டுரையின் தமிழாக்கம் இது:

காந்திஜி ஒரு முறை டெல்லியில் வால்மீகி பாஸ்தி கோவிலில் (Valmiki Basti Temple) குர் ஆனை ஓதினார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு பெண் எழுந்திருந்து காந்திஜியிடம் அப்படிச் செய்ய வேண்டாம் என்று கூறினார்.

காந்திஜி ‘ஏன்’ என்று கேட்டார்.

உடனே அந்தப் பெண்மணி ‘அது நமது மதத்திற்கு எதிரானது’ என்று பதிலளித்தார்.

காந்திஜி, “அப்படி என்று நான் நம்பவில்லை” என்று கூறினார்.

உடனே அந்தப் பெண்மணி, “நாங்கள் உங்களை எங்கள் மதத்தில் கட்டளையிடத் தகுதி உடையவர் என்று எண்ணவில்லை” என்றார்.

காந்திஜி அங்கிருந்தவர்களிடம் இது பற்றி ஓட் எடுக்கச் சொன்னார்.

“மதமானது ஓட்டின் அடிப்படையில் முடிவு செய்யக்கூடிய விஷயமா?” என்று அந்தப் பெண்மணி கேட்டார்.

காந்திஜி, “நீங்கள் எனது மதத்திற்கு இடையூறு செய்கிறீர்கள்” என்றார்.

அந்தப் பெண்மணி அவர் கோடிக்கணக்கான ஹிந்துக்களின் மதத்தில் சட்ட விரோதமாகக் குறுக்கிடுகிறார்” என்றார்.

காந்திஜி, “நான் குர் ஆனைக் கேட்கிறேன்” என்றார்.

அந்தப் பெண்மணி தான் அதை எதிர்ப்பதாகக் கூறினார்.

வால்மீகி இளைஞர்கள் நூற்றுக் கணக்கானோர் அந்தப் பெண்மணிக்கு ஆதரவாக எழுந்தனர்.

அவர்கள் அனைவரும், “இந்த கோவிலில் குர் ஆனை ஓதுவதற்கு முன்பாக கீதை அல்லது இராமாயணத்தை மசூதியில் ஓதுங்கள்’ என்றனர்.

எதிர்ப்பு அதிகமாக வலுப்பதை உணர்ந்த காந்திஜி உடனே போலீஸை வரவழைத்தார். அவர்கள் உடனே எதிர்த்தவர்களைப் பிடித்தனர். 107 கேஸ்கள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டன.

போலீஸ் பாதுகாப்பில் அதே கோவிலில் காந்திஜி குர் ஆனை ஓதினார்.

இந்த இரட்டை வேடப் பித்தலாட்டத்தினால் தான் காந்திஜியை சிலர் விரும்பவில்லை.

நன்றி, ஆதாரம் : கல்கத்தாவிலிருந்து வெளி வரும் வார இதழ் ட்ரூத்

தொகுதி 91 இதழ் 15 28-7-2023 இதழ்

**

Gandhi drawing

Leave a comment

Leave a comment