QUIZ புராணப் பத்து QUIZ (Post No.12,368)

 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,368

Date uploaded in London – –  4 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

QUIZ புராணப் பத்து QUIZ

1.புராணங்கள் 18 என்பர்உப புராணங்கள் மேலும் 18 என்பர். அவை யாவை?

Xxxx

2.புராணங்கள் பழையதாவேதங்கள் பழையதா?

Xxxx

3.புராணம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு என்ன பொருள்?

Xxxx

4.புராணங்கள் எவ்வளவு பெரியவைபடிக்க முடியுமா?

Xxxx

5.புராணங்களில் பெரியது எது சிறியது எது பழையது எது?

xxxx

6.புராணத்துக்கு என்று ஒரு இலக்கணம் உண்டு என்று சொல்லுவார்கள். எல்லா புராணங்களும் சொல்லும் 5 விஷயங்கள் என்ன ?

xxxx

7.புராணங்கள் என்ற பெயரில் தமிழ் மொழியில் தோன்றிய புகழ்பெற்ற நூல்கள் எவை?

xxxx

8.புராணங்களில் இன்று அதிகம் பயிலப்படுவது எது ?

Xxxx

9.எந்த புராணத்தை இறந்தோர் வீட்டில் வாசிப்பதும் கேட்பதும் ஒரு சம்பிரதாயமாக பின்பற்றப்படுகிறது ?

xxxxx

10.அறப்பளிச்சுர சதகம்  என்னும் நூலில் 18 புராணங்களையும் ஒரே பாடலில் அம்பலவாண கவிராயர் சொல்கிறாராமே . அது என்ன பாடல்?

xxxx

விடைகள்

1.பதினெட்டு புராணங்கள்

வேத வியாசர் தொகுத்த புராணங்கள்:- அக்னி, பாகவத, பிரம்ம, பிரம்மாண்ட, பிரம்மவைவர்த்த, கருட, ஹரிவம்ச, கூர்ம, லிங்க, மார்க்கண்டேய, மத்ஸ்ய, நாரத, பத்ம, சிவ, ஸ்கந்த, வாமன, வராஹ, விஷ்ணு (வாயு=சிவ புராணம்) ஆகிய 18 புராணங்கள்.

உபபுராணங்கள் 18

சிறிய புராணங்களை 18 ஆகத் தொகுத்தனர்:-சநத்குமார, நரசிம்ம, பிருஹந்நாரதீய,சிவரஹஸ்ய, துர்வாச, கபில, வருண, காலிக, சம்பா, நந்தி, சௌர, பராசர, மஹேச்வர, பார்கவ, வசிட்ட, தேவிபாகவத, முத்கள, கணேச என்பன 18 உப புராணங்கள். சிலர் இதில் வேறு சில பெயர்களைச் சேர்த்து சிலவற்றை விடுப்பர்.

xxx

2.புராணங்களும் வேதங்களும் பழமையானவையே;

அதர்வண வேதத்தில் புராணங்கள் பற்றிப் பேசப்படுகிறது. வெளிநாட்டினரும் கூட கி.மு.850 என்று தேதி குறிக்கும் சதபத பிராமணத்தில் புராண இதிஹாசம் என்ற தொடர் வருகிறது. இதற்குப் பின்னர் ஏரளமான குறிப்புகள் உள. ஆயினும் அவைகளை எழுத்து வடிவில் கொண்டு வந்தது குப்தர்  காலத்தில்தான். அப்போதுள்ள விவரங்ககளையும் சேர்த்து அவர்கள் அவைகளை புதுக்க்கினர் ; அதாவது அப்டேட் செய்தனர். எல்லாவாற்றையும் எதிர்காலத்தில் நடப்பது போலச் சொல்லுவது பெளராணிகர்களின் ஸ்டைல்.இதே போல் பிற்கால வரலாற்றைச் சேர்த்ததனால் அவைகளை பிற்கால நூல்கள் என்று சொல்லிவிட்டனர் .Atharva Veda (25-6-4); (11-7-24), Satapata Brahmana (11-5-6-8)

முக்கிய உபநிஷதங்கள் அனைத்தும் புத்தர் காலத்துக்கு முந்தையவை; அவைகளில் புத்தமத வாடையே கிடையாது; அப்படிப்பட்ட சாந்தோக்ய உபநிஷதத்தில், நாரத முனிவர் தான் கற்ற விஷயங்களைப் பட்டியலிடுகையில் நான்கு வேதங்களுடன் புராணத்தையும் சொல்கிறார். ஆக நாரதருக்கும், உபநிஷதத்துக்கும் முந்தையவை புராணங்கள்.

உபநிஷத்துக்களில் பழையது பிருஹத் ஆரண்யக உபநிஷத். அதில் கூட இதிஹாச புராணக் குறிப்புகள் இருக்கிறது:

அஸ்ய மஹதோ பூதஸ்ய நிச்வசித்

மேதத் ருக்வேதோ யஜூர்வேதஸ்ஸாம

வேத சுதர்வாங்கிரச இதிஹாச

புராணம் வித்யா உபநிஷத் —என்று

பிருஹதாரண்யம் கூறுகிறது. இதை 2800 ஆண்டுகளுக்கு முந்தையது என்று எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர்.

பொருள்: இருக்கு, யஜூர், சாமம், அதர்வணம், இதிஹாசம், புராணம், வித்தை, உபநிடதம் முதலியவை பரம்பொருளின் சுவாசம்.

XXXXX

3.‘புரா’ என்றால் ‘முன்பு’ ‘முன் காலம்’ Once upon a time, Long long ago என்று பொருள். வேத காலத்திலேயே நாம் முன்னொரு காலத்தில் என்று கதை சொல்லி இருப்போமானால், நாம் தான் உலகிலேயே பழமையான இனம் என்பதற்கு வேறு சான்றே தேவை இல்லை.

‘புரா அபி நவம்’ என்ற விளக்கமும் உண்டு. பழைய கதைதான்; ஆயினும் என்றும் புதுக்கருக்கு அழி யாத தங்கம் போல ஜ்வலிக்கிறது என்பதால் ‘புரா அபி நவம்’  — அதாவது முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் இலங்குவது– என்று பொருள் சொல்லுவர். புரா – முந்திய /பழைய ; நவம் – புதுமையானது. ஆங்கிலச் சொல் நியூ NEW என்பது இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து பிறந்ததே.

XXXX 

4.முக்கிய புராணங்கள் 18 ; அவைகளில் உள்ள ஸ்லோகக்ங்கள் நாலு லட்சம்; அதாவது சம்ஸ்க்ருத மொழியில் எட்டு லட்சம் வரிகள் ! ஒரு வாழ்நாளில் பிடித்துவிடலாம்; ஆயினும் அவைகளின் பொருளை உணர்வது எளிதல்ல. குறைந்தது 40 லட்சம் சொற்கள் .

XXXX

5.மிகப் பெரிய புராணம் : கந்த புராணம்  Skanda Purana.

மிகச் சிறிய புராணம் : மார்க்கண்டேய புராணம் Makandya Purana.

மிகவும் பழைய புராணம் : விஷ்ணு புராணம்  Vishnu Purana ( இப்போது கிடைக்கும் வடிவத்தின் காலம் பொ .ஆ 300 CE ).

XXXX

6.புராணங்களில் ஐந்து பகுதிகள் இருக்கவேண்டும் என்பது மரபு:

1.சர்கம்: பிரபஞ்சத்தின் தோற்றம்;

2.பிரதி சர்கம்: மற்ற உயிர்களின் தோற்றமும் மறைவும்;

3.வம்சம்: ரிஷிகள், தேவர்களின் சரிதம்;

4.மன்வந்தரம்: 14 மனுக்களின் காலம்;

5.வம்சானுசரிதம்: சூரிய, சந்திர குல அரசர்களின் வரலாறு

XXXX

7.பெரிய புராணம், திருவிளையாடல் புராணம்; புலவர் புராணம் ; ஏனைய கந்த புராணம் போன்றவை சம்ஸ்க்ருத மொழியில் உள்ளவரின் மொழிபெயர்ப்பே.

XXXX

8.அவதாரங்கள் பற்றி, குறிப்பாக கிருஷ்ணரின் வாழக்கையைக் கூறும் பாகவத புராணம்தான் பெரிதும் பேசப்படுகிறது. இதை ஏழே நாட்களில் பாராயணம் செய்யும் — முற்றோதல்– மிகவும் புண்ணியமானது என்பதால் பல குடும்பங்களும் சங்கங்களும் இதை ஏற்பாடு செய்கின்றன . அதற்கு பாகவத சப்தாஹம் என்று பெயர்.சுகர் ஏழுநாட்களில் பரீக்ஷித்துக்கு இந்த ஸ்ரீமத் பாகவதத்தை எடுத்துரைத்தார். அதிலிருந்து இது ஒரு புண்ணிய செயலாகக் கருதப்பட்டது .இப்போதும் கார்த்திகை, மார்கழி  மாதங்களில் பாலக்காடு, குருவாயூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பல கோயில்களிலும் மண்டபங்களிலும் பாகவத சப்தாஹம் ஆண்டுதோறும் சிறப்பாக நடந்து வருகிறது .

Xxxxx

9.கருட புராணம் வாசிப்பது சம்பிரதாயம் ; கருடபுராணத்தை 13-ம் நாளில்  வாசிக்க வேண்டும் காரணம் என்னவென்றால் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி இதன் இரண்டாம் பகுதி விளக்குகிறது.

xxxxx

10.தலைமை சேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்

          சாரும் வாமனம், மச்சமே,

     சைவம், பெருங் கூர்மம், வருவராகம், கந்த

          சரிதமே, பிரமாண்டமும்,

தலைமை சேர் இப்பத்தும் உயர் சிவபுராணம் ஆம்;

          நெடிய மால் கதை; வைணவம்

     நீதி சேர் காருடம், நாரதம், பாகவதம்,

          நீடிய புராணம் நான்காம்;

கலை வளர் சொல் பதுமமொடு, கிரம கைவர்த்தமே,

          கமலாலயன் காதை ஆம்;

     கதிரவன் காதையே சூரிய புராணமாம்;

          கனல் காதை ஆக்கினேயம்;

அலை கொண்ட நதியும் வெண் மதியும் அறுகும் புனையும்

          அத்தனே! அருமை மதவேள்

     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்

          அறப்பளீசுர தேவனே!

பொருள்:: முதலில் உள்ளது பௌடிகம் , லிங்கம், மார்க்கண்டேயம், வாமனம் ,

சைவம், மச்சம், கூர்மம், வராஹம், ஸ்கா ந்தம் ,பிரம்மாண்டம்  ஆகிய இவை பத்தும் சிவன் தொடர்புடைய புராணங்கள்;

வைணவம், கருடம், நாரதம் பாகவதம் ஆகிய நான்கு புராணங்கள்  திருமாலின் புகழ் பாடும் புராணங்களாம் .

பத்ம புராணமும், பிரம்ம கைவர்த்தமும் பிரம்மதேவன் தொடர்பான புராணங்கள். இவை தவிர சூரியன் புகழ் படும் சூரிய புராணமும் அக்கினியைப் போற்றும் அக்கினி புராணமும் ஆக மொத்தம் 18 புராணங்கள் .

18 புராணங்கள் எவை என்ற பட்டியலில் கருத்து வேறுபாடு உண்டு

XXXXX

Tags- பதினெட்டு புராணங்கள், பெயர், பாகவத சப்தாஹம், கருட புராணம் , உப புராணங்கள், அர்த்தம், என்ன

Leave a comment

Leave a comment