QUIZ காவிரி நதி பத்து QUIZ (Post No.12,373)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,373

Date uploaded in London – –  5 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz குவிஸ் வரிசை எண் –  60

QUIZ காவிரி நதி பத்து QUIZ

1.காவிரி நதியில் உள்ள பழைய அணை எது அதை யார் கட்டியது ?

XXXXXX

2.காவிரி நதியின் நீளம் என்ன அதன் மறு பெயர் என்ன ?

XXXX

3.காவிரி நாதியின் பெயருக்கு கரணங்கள் என்ன?

XXXX

4.காவேரி நதியை உருவாக்கிய ரிஷியும் அதற்குக் காரணமான பறவையும் எவர் எது?

XXXX

5.காவேரி திருவையாற்றில் ஐந்து நதிகளாகப் பிரிவதால் அந்த  ஊருக்கு  திருவையாறு என்று பெயர்அந்த 5 கிளை நதிகளின் பெயர்கள் என்ன?

XXXX

6.துலா காவேரி ஸ்னானம் என்பது என்னகாவேரியின் பெருமையைக் கூறும் சம்ஸ்க்ருத நூலின் பெயர் என்னகாவிரி தோன்றும் இடத்திலிருந்து கடலில் சங்கமம் ஆகும் இடம் வரை விவரிக்கும் தமிழ் புஸ்தத்தின் பெயர் என்ன?

XXXX

7.இந்த நதி உற்பத்தி ஆகும் இடத்தின் பெயர் என்னஅங்குள்ள தலங்கள் யாவைகாவேரி நதி எந்தக் கடலில் கலக்கிறது ?

XXXX

8.காவிரி நதிமலையிலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகள் யாவை?

XXXX

9.காவிரி நதியின் புகழ் பாடும் நூல்கள் எவை?

XXXX

10.தமிழ் நாட்டில் மேட்டூர் அணை உள்ளது. கர்நாடகத்தில் காவேரி மற்றும் அதன் உபநதிகள் மீதுள்ள அணைகள் யாவை ?

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

Picture shows Dams across River Kaveri

ANSWERS

1.திருச்சிக்கு அருகில் உள்ள கல்லணை ; இதை கரிகால் சோழன் கட்டினான். உலகிலேயே பழைய அணை இதுதான் OLDEST DAM IN THE WORLD . ஆங்கிலத்தில் கிராண்ட் அணைக்கட் GRAND ANICUT என்று சொல்லுவார்கள்

XXXXX

2. காவிரி நதியின் நீளம் 800 கி.மீ ; மைல் கணக்கில் சுமார் 500 மைல் ; மறு பெயர் பொன்னி .

XXXXX

3.காவிரி நதியின் பெயருக்கு காரணங்கள்:

ஆறு பாயும் இடம் எல்லாம் பூங்காக்களை உண்டாக்கி செல்லுவது முதல் காரணம்.

காகம் விரித்த நதி என்பதால் – காக + விரி என்பது இரண்டாவது காரணம்;

பொன் போல் விளையும் நெற்பயிருக்கு காரணமாவதால் பொன்னி;

இந்தியாவின் ஒரே தங்கச் சுரங்கமான கோலார் தங்கச் சுரங்கம் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆவதால் பொன்னி .

XXXX

4.அகஸ்திய மகரிஷி ; அவருடைய கமண்டலத்தைத் தட்டிவிட்டு நதியைத் திருப்பிவிடும் பாதையைக் காட்டிய பறவை காகம். அகஸ்தியர் மாபெரும் சிவில் மற்றும் மரைன் என்ஜினீயர் CIVIL AND MARINE ENGINEER. ராமன் ,அர்ஜுனன் போன்றோர் பெரிய நதிகளைக் கடக்க முடியாமல் கடலோரமாகவும் படகுகளில் பயணம் செய் தும்  தென்னாட்டிற்கு வந்தனர். அகஸ்தியர்CIVIL ENGINEER சிவில் என்ஜினீயர் என்பதால் விந்திய மலையை உடைத்து, காடுகளை அழித்து தமிழ் நாட்டிற்கு சாலைப்பாதை LAND ROUTE/ ROAD ROUTE அமைத்தார். பகீரதன் என்ற என்ஜினீயர் CIVIL ENGINEER  கங்கையைத் திரும்பிவிட்டது போல காவிரியையும் தமிழ் நாட்டிற்குப் TO DIVERT THE RIVER FROM KERALA  SIDE பயன்படும் வகையை எண்ணி தவம் இயற்றுககையில்  காகம் வந்து கமண்டல ததைத் தட்டவே அதிலுள்ள நீர் வழிந்தோடிய பாதையில் காவிரியைத்திருப்பிவிட்டார். இதை கல்லணையில் சிலைகளாகக் காணலாம்STATUES DEPICTING THIS ANECDOTE ARE IN GRAND ANICUT NEAR TRICHY.

XXXX

5. திருவையாறு :–காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு , வடவாறு ; இங்குதான் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் சமாதி இருக்கிறது. இதனால் ஆண்டுதோறும் அங்கு ஆராதனை நடைபெறும்

XXXXX

6.ஐப்பசி மாத முதல் நாளில் மாயவரத்தில்  காவிரி துலா ஸ்நானம் துவங்கி ,மாதம் முழுதும் மக்கள் புண்ணிய நீராடுவர் . இதோ காஞ்சி பரமாசார்ய  (1894-1994)சுவாமிகளின் அருளுரை

காவேரி முழுவதிலும் இப்படி துலா மாஸத்தில் ஸகல தீர்த்த ஸாந்நித்யம் இருப்பதாகச் சொன்னாலும், இப்படிச் சொல்வதும் ஜெனரலாக இருப்பதால், இதிலும் ஸ்பெஷலாக ஒன்று வேண்டும் போலிருக்குமே, அதனால் – மாயவரத்தில் (மயிலாடுதுறையில்) மட்டும் துலா ஸ்நானம் அதி விசேஷமாகச் சொல்லப்படுகிறது. மாயூரம் என்பது அதன் சரியான பெயர். மயில் என்று அர்த்தம். மயிலாப்பூரில் எப்படி கல்பகாம்பாள் மயிலாகிப் பரமேச்வரனைப் பூஜித்தவளோ அப்படியே அபயாம்பாள் மயிலாக ஈச்வராராதனை செய்ததால் மாயூரம், கெளரீ மாயூரம் என்று அந்த க்ஷேத்திரத்துக்குப் பேர் ஏற்பட்டது.

அங்கே காவேரிப் படித்துறை ஒன்றை ‘லாகடம்’ என்பார்கள். ‘துலா கட்டம்’ என்பதுதான் இப்படி முதலெழுத்தை உதிர்த்து லாகடமாகியிருக்கிறது! ஜனங்களில் பல பேர் சில வார்த்தைகளின் முதல் எழுத்தையோ, உள்ளே வருகிற எழுத்தையோ ‘சாப்பிட்டு’ விடுவார்கள்! ‘தொள்ளாயிரம்’ என்பதை ‘த்ளாயிரம்’ என்பார்கள். ‘மாயவரம்’ என்பதை ‘மாயரம்’ என்றுதான் சொல்வார்கள். ‘வியாபாரம்’ என்பதை ‘யாபாரம்’ என்பார்கள். தொள்ளாயிரம் த்ளாயிரம் ஆகிற மாதிரி, ‘துலா’ கட்டம் ‘த்லா’ கட்டமாகி, லாகட்டமாகி, ‘மூட்டை’யில் ‘ட்’ போய் ‘மூடை’ என்கிறது போல ‘லாகட’மாகியிருக்கிறது!

XXXXX

7.கர்நாடக மாநிலத்தில்  மேற்கு தொடர்ச்சி மலையில்  குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரியில் தோன்றுகிறது.; குடகு என்பதை ஆங்கிலத்தில் கூர்க் COORG என்பர்.

பூம்புகார் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.

தலைக் காவேரி , அதன் கீழுள்ள தர்மஸ்தலா ஆகியன முக்கிய தலங்கள்.

XXXXX

8.காவிரி நதி, மலையிலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகள் :–கர்நாடக மாநிலத்தில் சிவசமுத்திர அருவியும் தமிழகத்தில் ஹொகனேகல் /ஒகேனக்கல் அருவியும் காவிரியில் உள்ள இரு நீர்வீழ்ச்சிகள் ஆகும்

XXXX

9.முன் காலத்தில் சங்க இலக்கியம் மற்றும் சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம் முதலிய நூல்களில் நிறைய குறிப்புகள் இருக்கின்றன. ஆயினும் முழுக்க, முழுக்க காவிரி நதியைப் போற்றும் நூல்கள் :–

சம்ஸ்க்ருத மொழியில் துலா காவேரி மஹாத்மியம் , தமிழ் மொழியில் நடந்தாய் வாழி காவேரி;   ‘சிட்டி’ (பெ.கோ. சுந்தரராஜன்)யும் தி. ஜானகி ராமனும் இணைந்து எழுதிய பயண நூல்.

XXXXXX

10. கர்நாடகத்தில் கிருஷ்ண ராஜ சாகர்,

Krishna Raja Sagara Dam. கிருஷ்ணராஜ சாகர்

Hemavathy Dam. ஹேமாவதி அணை

Harangi Dam.ஹாரங்கி அணை

Kabini Dam.கபினி அணை

Banasura Sagar Dam.பாணாசுர சாகர் அணை

தமிழ்நாட்டில்

Kallanai.கல்லணை

Mettur Dam (Ellis Park, Stanley)மேட்டூர் அணை

Amaravati Dam.அமராவதி அணை

இவை முக்கிய அணைகள். இவை தவிர குட்டி அணைகளும் உண்டு.

—SUBHAM—

Tags- துலா காவேரி மஹாத்மியம் , நடந்தாய் வாழி காவேரி, சிவசமுத்திரம் ,ஹொகனேகல், கல்லணை, காவிரி, குடகு , பூம்புகார், திருவையாறு

Leave a comment

Leave a comment