
Mongol Invader
Post No. 12,378
Date uploaded in London – – 6 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பர்மா வரலாற்றில் சுவையான சம்பவங்கள் வெற்றிலை எச்சிலால் ராஜா பதவி போச்சு !- 1 (Post No.12,378)
பர்மா நாட்டின் தற்போதைய பெயர் மியன்மார்.;லட்சக் கணக்கான தமிழர்கள் வசித்த, வசிக்கும் நாடு.தமிழர்களின் பழைய கல்வெட்டும் வணிகர் தொடர்பைக் காட்டுகிறது. அங்கிருந்து கொண்டு வந்த தேக்கு மரம் இன்று செட்டி நாட்டில் வீடுகளை அலங்கரிக்கிறது. பர்மாவிலிருந்து வெளியேறி தமிழ்நாட்டில் காலனிகள் அமைத்த இடங்களில் அங்கிருந்து கொண்டுவந்த கைப்பிடி மண்ணை வைத்து எழுப்பிய தமிழ்நாட்டுக் கோவில்களில் இன்றும் பர்மாவில் கொண்டாடியது போலவே விழாக்களை மக்கள் நடத்துகின்றனர். மணிப்பூரில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மோரே என்னும் இடத்திலும் கோயில் கட்டி இன்றும் வழிபடுகின்றனர்..
பர்மாவில் ஆங்கிலக் கதைகளிலும் கூட தமிழ்ச் சொற்களான பந்தல் ,கோயில், செட்டியார் என்பன அப்படியே மொழி பெயர்க்காமல் பயன்படுத்தப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக பர்மா என்பதே பிரம்ம தேசத்தின் திரிபுச் சொல் என்பதும் இந்து மத தாக்கத்தைக் காட்டி நிற்கிறது . பாமர் என்ற இன மக்களால் அந்தப் பெயர் உண்டாகியது என்று வாதிடும் மக்களுக்கும் அந்தச் சொல்லின் தோற்றம் தெரியவில்லை. பர்மாவைப் பற்றிய ஆங்கிலப் புஸ்தகங்கள் இந்துமதத்தை பிராஹ்மிணிகல் Brahmanical Religion மதம் என்றே குறிப்பிடுகின்றன. இதற்கு மூ ன்றே பொருள் தான் உண்டு. பிரம்மன் என்பவரை வழிபடும் மதம் ; பிரம்மன் என்பது உபநிஷத்துகளில் கடவுள் என்று பொருள்படும் ; இரண்டாவது பொருள், மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மா என்னும் கடவுளை வழிபடுவோர் நிறைந்த இடம்; மூன்றாவது அர்த்தம், பிராமண குருக்கள், பட்டர்கள் வந்து பூஜைகளைத் துவக்கிய நாடு. இந்த மூன்றுக்கும் அங்கே சான்றுகள் உள
பிரம்மாவுக்கு பல வண்ணங்களில் தபால் தலைகளை 100 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியிட்ட லாவோஸ் Laos என்னும் நாடும் இதை ஒட்டி இருக்கிறது. அதன் பெயரே லவன் என்ற ராம பிரானின் மகன் பெயர். பர்மா கல்வெட்டுகள் தங்கம் , வெள்ளிக் குடங்களில் புனித நீர் நிரப்பி மன்னருக்கு பிராமணர்கள் பட்டாபிஷேகம் செய்த செய்தி ஒரு கல்வெட்டிலும், அந்த மன்னர்கள் ராமனின் சூரிய குலத்தில் வந்தவர்கள் என்று பெருமை பேசும் கல்வெட்டுகளும் பர்மாவில் கிடைத்துள்ளன. எல்லா வற்றிற்கும் மேலாக பக்கத்து நாடான தாய்லாந்தின் பழைய தலைநகர் பெயரே அயோத்யா தான். அதை அயுத்தியா என்று எழுதுவார்கள் .

பர்மாவில் ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. வேலுவதி மற்றும் பல தமிழ் மன்னர்கள் பெயர்கள் உள்ளன ; வர்மன் என்று முடியும் பல்லவர் போன்ற மூன்று மன்னர்கள் உள்ளனர். இவர்கள் யார் என்பது பர்மியர்களுக்கே தெரியாது பொது ஆண்டு (கி.பி. 439 முதல் 200 ஆண்டுகளுக்கு அங்கு மொக்கன், திட்டம்/தித்தன் முதலிய 5 தமிழ் மன்னர்கள் ஆண்டு வந்தனர். அசோகர் காலத்தில் சோனா, உத்தரா என்ற இருவர் புத்த மதத்தைப் பரப்ப பர்மா சென்றதை இலங்கை வரலாற்று நூல்களிலிருந்து அறிகிறோம். சம்ஸ்க்ருத நூல்களில் பர்மாவை சொர்ண பூமி / தங்க நாடு என்றே அழைக்கின்றனர் ;அவைகளை தனி வரலாற்றுக் கட்டுரைகளில் காண்போம். இப்போது வெற்றிலை துப்பிய எச்சில், பன்றிக் காலின் கரி முதலிய சுவையான வரலாறுகளை மட்டும் காண்போம் .
xxxx
தூ— என்று துப்பியதால் மன்னர் பதவி போச்சு !
கியாசுவா 1234-1250 King Kyaswaa
கியாஸ்வா ஒரு திறமையான அரசர். 1249ல் அவர் வெளியிட்ட கல்வெட்டு நீண்ட வாசகமுள்ள கல்வெட்டு. அதில் என்னன்ன குற்றங்களுக்கு என்னன்ன தண்டனைகள் என்று எழுதப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு தர்மராஜா என்ற பட்டப்பெயர் ஏற்பட்டது.அவர் புத்த மத நூல்களான த்ரி பிடகா (மூன்று பெட்டி) வை ஒன்பது முறை படித்தவர். 57ஆவது வயதில் கத்திச் சண்டை போட்டு விளையாடுகையில் காயம் ஏற்பட்டு செத்துப் போனார் .
xxxx
உசனா 1250-1256 Uzanaa
இவர் கியாஸ் வா வின் மகன் ; வேட்டை ஆடுவதிலும் குடித்துவிட்டு கும்மாளம் அடிப்பதிலும் பொழுதைச் செலவிட்டார் ; 38 வயதில் யானையால் மிதிபட்டு உயிரைவிட்டார்.
Xxxxx
நராதிபதி 1256- 1287 Narathihapati
உசனாவுக்கு இரண்டு மகன்கள் ; முறையான மஹாராணி மூலம் பிறந்தவர் திங்கத்து ; காமக்கிழத்தி மூலம் பிறந்தவர் நராதிபதி .அப்போது முதன் மந்திரியாக இருந்தவர் யஜாதிங்கியான் Yazaathinkyaan. ஒரு முறை அவர் நடந்து செல்லுகையில் பின்னால் திங்கத்து வந்துகொண்டிருந்தார். அவருக்கு மந்திரி முறையான மரியாதை செலுத்தவில்லை என்று கோபம் பொங்கியது. பர்மா மக்கள், நம்மூர் தஞ்சாவூர்க்காரர்கள் போல வெற்றிலை போடும் பழக்கம் உடையவர்கள் வாயில் இருந்த வெற்றிலை எச்சிலை தூ என்று முதமந்திரி மீது துப்பினார். மன்னர் மகன் ஆயிற்றே ; ஆகையால் முதல் மந்திரி வாய் திறக்காமல் வீட்டுக்குச் சென்றார். ஆனால் அவர் போட்டுக்கொண்ட துணி மணிகளை துவைத்து அலசாமல் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாத்தார் . யானையைப் போல நினைவு வைத்துக்கொண்டு பழிவாங்கக் காத்திருந்தார் . மன்னர் உசனா இறந்த செய்தி வந்தது இதுதான் தருணம் என்று கருதிய முதலமைச்சர் பெரியோர்கள், ஊர் மக்களின் பிரதிநிதிகள், புத்த பிட்சுக்கள் கூட்டத்தைக் கூட்டி, பெட்டிக்குள் வைத்திருந்த எச்சில் கறை பட்ட சட்டையைக் காட்டி அதைச் செய்த திங்கத்து மன்னர் பதவிக்கு அருகதையற்றவர் என்று அறிவித்தார். அனவைவரும் அதை ஆமோதித்தனர் .காமக்கிழத்தியின் மகனான நராதிபதி மன்னன் பதவியில் அமர்த்தப்பட்டார் . அவரோ சரியான சாப்பாட்டு ராமன்; பெருந்தீனி;தினமும் 300 வகை கறிகளை சாப்பிடுகிறேன்; எனக்கு 3000 அந்தப்புர அழகிகள் இருக்கிறார்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டார் . அவருக்கு மக்கள் வைத்த பெயர் வேறு ; அவர்கள் சூட்டிய பெயர் தரூப் யி. அதாவது துருக்கர்களைக் கண்டு பயந்தோடியவன் . அவர்கள் துருக்கர் என்பது சீனாவிலிருந்து படை எடுத்த மங்கோலியர்கள் ஆவர் .
அந்தக் கதையைத் தனியாகக் காண்போம் .
—–to be continued
Tags- பர்மா வரலாறு , மியன்மார் சுவையான சம்பவங்கள், வெற்றிலை எச்சில், ராஜா பதவி , போச்சு