
Tamil Philanthropist Athiyaman with Avvai
Post No. 12,381
Date uploaded in London – – 6 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
QUIZ வள்ளல்கள் பத்து QUIZ
QUIZ SERIES No.61

1.கடையெழு வள்ளல்களின் பெயர்கள் என்ன ?
XXXXX
2.முல்லைக்கொடிக்குத் தேர் கொடுத்தவன் பாரி; மயிலுக்குப் போர்வை கொடுத்த்தவன் யார்?
3.பேகன் ஆண்ட இடம் எங்கே இருக்கிறது? பாரி ஆண்ட பறம்பு மலை எங்கே உள்ளது ?
XXXXX
4.பாரி செய்ததை நாம் அறிவோம்; காரியும் ஓரியும் என்ன கொடுத்து வள்ளல் பட்டியலில் சேர்ந்தனர் ?
XXXXX
5.அதியமான் செய்த கொடை யாது?
xxxx
6.இவர்களை கடை எழு வள்ளல் என்று சொல்கிறோம் ; அவர்கள் வாழ்ந்த காலம் எது?
XXXXX
7.முதல் எழு வள்ளல்கள் உண்டா ? அவர்கள் யார்?
XXXX
8.சிவ பெருமானுக்கு நீல நாகன் கொடுத்த ஆடையை அளித்து வள்ளல் பெயர் பெற்றவன் யார் ?
XXXX
9.இடை எழு வள்ளல்கள் யார் ?
XXXXX
10.நள்ளி என்ற வள்ளலின் சிறப்பு என்ன ?
xxxxx

Tamil Philanthropist Bekan with peacock
Answers
1.பாரி, காரி,ஓரி,
ஆய், அதியமான்,
பேகன், நள்ளி
xxxx
2.மயிலுக்கு போர்வை கொடுத்தான் பேகன்.
XXXXX
3.பறம்புமலை என்கிற பிரான்மலை தற்போது சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகில் உள்ளது. மதுரை, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை நகரங்களுக்கு நடுவில் உள்ளது.
பேகன், பொதினி மலையின் சிற்றரசன் . இந்த இடம் பழனி மழைப் பகுதி ஆகும்
xxxx
4. ஓரி -(கொல்லிமலை) தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன். தன் ஓரி என்னும் குதிரைமீதேறி, காரி என்னும் குதிரைமேல் வந்து தாக்கிய காரியோடு போரிட்டவன். புன்னை மரங்களையும் குன்றுகளையும் உடைய நாடுகளைக் கூத்தருக்குக் கொடுத்த ஓரி என்று சிறுபாணாற்றுப்படை அவனைப் புகழ்கிறது.
காரி – (திருக்கோவிலூர்) ஈர நன்மொழி கூறியவன். அருள்மொழி மிக்கவன். ஒளி மிக்க அச்சம் தரும் நீண்ட வேலினை உடையவன். தடக்கையையும் (பெரிய கை), காரி என்ற குதிரையையும் உடையவன். இம்மன்னனின் கொடைத்திறத்தை சிறுபாணாற்றுப்படை (91-95 அடிகள்) குறிப்பிடுகிறது.
உலகமே வியக்கும் வகையில் போரில் புகழ்மிக்க தன் குதிரையையும், பெரும் பொருளையும் இரவலர்க்குக் கொடுத்தான்.
xxxxx
5.அதியமான் – நெல்லிக்கனியை ஔவைக்கு அளித்தவன் (தர்மபுரி). இது அரிய நெல்லிக்கனி; சாவை ஒத்திப்போடும் மருத்துவ குணங்கள் உள்ள கனி . அதிகன், ஒருமுறை வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குச் சென்றான். அங்கு உள்ள மலைச்சாரலில் மருத்துவத் தன்மை உடைய நெல்லி மரத்தில் ஒரே ஒரு பழம் பழுத்துத் தொங்கியது. அதை அதிகன் பறித்து வந்தான். அக்கனியை உண்போர் நீண்ட நாள் உயிர் வாழ்வர் என்பதை இவன் அறிந்து கொண்டான். அத்தகு சீரிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஒளவையாருக்கு வழங்கினான் (ஒளவையார் சங்க காலத்து மிகச் சிறந்த பெண் புலவர்). இச்செய்தியை,
அமிழ்துவிளை தீம்கனி ஒளவைக்கு ஈந்த…………….. …………………. …………….. ………..
அரவக் கடல்தானை அதிகனும்…
(சிறுபாணாற்றுப்படை 101-103) சுட்டுகிறது.
XXXXX
6.சிறுபாணாற்றுப் படை என்னும் சங்க கால நூல் இவர்கள் அனைவரையும் ஒரு அணி ஆக்கி கடை எழு வள்ளல் என்பதால் இவர்கள் சங்க காலத்தின் துவக்கத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் . எங்கங்கோ வாழ்ந்த 7 பேரின் சிறப்பும் பெருமளவில் பேசப்பட்ட பின்னரே இப்படி ஒரு தொகுப்பு உருவாகும்.
Xxxxx

Tamil Philanthropist Nalli
7..முதல் எழு வள்ளல்கள்
1. குமணன்
2. சகரன்
3. சகாரன்
4. செம்பியன் (சிபிச் சக்கரவர்த்தி)
5. துந்துமாரி
6. நளன்
7. நிருதி
இதிலுள்ள குமணன் சங்க காலத்துக்கு முந்தைய வேறு ஒரு குமணன் என்றே கருத வேண்டியுள்ளது
xxxxx
8.ஆய் – நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்தவன் (பொதிகை மலை)
xxxxx
9.இடைக்கால ஏழு வள்ளல்கள்
அக்ரூரன், அந்திமான், அரிச்சந்திரன், கன்னன் (கர்ணன்),சிசுபாலன், சந்திமான், தந்திவக்கிரன்
அக்குரன் ; இவர் ஒருவேளை மகாபாரதம் சொல்லும் அக்குரன் ஆக இருக்கலாம் என்பது உ,வே.சா .கருத்து
Xxxxxx
10. நள்ளி தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த பெருந்தகை . மேலும் இக்கண்டீரக் கோப்பெரு நள்ளி வரையாது அளித்த வண்மை காரணமாக இவனிடம் பரிசில் பெற்ற பாணர்கள் மாலை வேளையில் வாசித்தற்குரிய செவ்வழிப் பண்ணை வாசிக்க மறந்தனர் ;, காலைப் பொழுதின்கண் வாசித்தற்குரிய மருதப் பண்ணை வாசிக்க மறந்தனர் என்று வன்பரணர் என்னும் புலவர் இவன் புகழைப் பாடுகிறார்.
.jpg)
Tamil Philanthropist Pari
—-subham—
Tags– 21 வள்ளல்கள், கடை எழு , இடை எழு , தலை எழு , சிறுபாணாற்றுப் படை