பர்மா வரலாற்றில் சுவையான சம்பவங்கள் -2 (Post No.12,384)

Burmese King Anirudh

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,384

Date uploaded in London – –  7 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

PART 2

நராதிபதி 1256- 1287

பர்மிய மன்னன் நராதிபதியின் லீலைகளைத் தொடர்ந்து காண்போம்.. அவரை எதிர்த்து நாட்டின் சில பகுதிகளில் கலகம் வெடித்தது ; உடனே முதல் மந்திரி தலைமையில் படைகளை அனுப்பி அதை அடக்கினார். முதலமைச்சர் 62 வயதில் காலமானார். தனது மகன்களும் கலகக்காரர்களுடன் சேர்ந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அரண்மனையிலேயே அவர்களும் வாழ ஏற்பட்டு செய்தார். தினமும் அவர்களுடனே சேர்ந்தும் சாப்ப ட்டார் . அப்படி சாப்பிடுகையில் மாற்றா ம்தாய் மனப்பான்மையுடன் உணவு பரிமாறினார். மூத்த மகன்களுக்கு பன்றி இறைச்சியின் நல்ல பாகங்களையும் இளைய மகன்களுக்கு பலரும் விரும்பாத பாகங்களையும் பரிமாற ஏற்பாடு செய்தார். அவர்கள் வெவ்வேறு மனைவியருக்குப் பிறந்தவர்கள் . இதை அறிந்த இளைய மகன்களின்  தாய் சமையல்காரனிடம் சொல்லி , இறைச்சியின் நல்ல பகுதிகளை தனது மகன்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்தாள் . இது மன்னருக்குத் தெரிந்துவிட்டது. உடனே சமையல்காரனுக்குத் தக்க தண்டனை கொடுத்துவிட்டு, இளைய மகனை டேய், பன்றிக்கால் திருடா என்று ஒவ்வொரு நாளும் ஏசிவந்தார் .

மங்கோலிய தாக்குதல்

இது ஒரு புறமிருக்க, சீனாவிலிருந்து மங்கோலிய அரசன் குப்ளாய்கான்  Kublai Khan பர்மாவின் Pagan பகான் அரசைத் தாக்கி வெற்றி கொண்டான். படைகளின் வெற்றிக்குப் பின்னர் குப்ளாய்கான் , பீகிங் நகரிலிருந்து தூதர்களை அனுப்பி கப்பம் செலுத்த உத்தரவிட்டான் . ஆனால் கப்பம் செலுத்தாமல், பீகிங் நகருக்கு Peking/ Beijing  புத்தரின் பற்களில் ஒன்றை அனுப்பி அதை வணங்குமாறு கேட்டுக்கொண்டான் . குப்ளாய்கான், ஒரு கடிதம் அனுப்பினான். நல்லெண்ணத்தைக் காட்ட, உங்கள் சீனியர் அமைச்சர் அல்லது ஒரு சகோதரனை பீகிங்  நகருக்கு அனுப்பி வையுங்கள் என்பது கடிதத்த்தின் சாராம்சம் .

குப்ளாய்கான் தூதர்கள், அரண்மனைக்குள் வந்த போது காலணிகளைக் கழற்றவில்லை. செருப்புகளைக் கழற்றிவிட்டு அமருங்கள் என்று சொன்னதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர்.அவர்களுக்கு உடனடி மரண தண்டனை விதித்தான் நராதிபதி. அவனுடைய அமைச்சர்கர்கள் அது தவறு; தூதர்களை அவமதிக்கக் கூடாது. எய்தவன் ஒருவன் இருக்க அம்பு என்ன செய்யும் ? என்ற பழமொழிகளை எல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் மூர்க்க மன்னன் அதைக் கேளாமல் தூதர்களைக் கொன்றான்.அதோடு நிற்காமல் எந்த பர்மிய பகுதிகளை குப்ளாய்கான் வென்றானோ அந்தப் பகுதிகளை மீட்பதற்காக படையும் எடுத்தான் . அந்தப் பகுதி குறுநில மன்னர்கள், குப்ளாய்கான் உதவியை நாடினர் . மங்கோலியப் படைகள் மீண்டும் உள்ளே வந்தவுடன் நராதிபதி  தன் பகான் பிரதேசத்தை விட்டு ஓடி , டெல்ட்டா பகுதியில் தங்கினான் . பின்னர் தான், குப்ளாய்கானின் ஆட்சியை ஒப்புக்கொண்டு கப்பம் கட்டுவதாகச் சொல்லி பகானை நோக்கி பயணம் மேற்கொண்டான். ஆனால் அவனது மகன்களில் ஒருவனே அவனைக் கொன்றுவிட்டான்.

பகான் வம்ச ஆட்சி The Pagan Dynasty அத்துடன் முடிவுக்கு வந்தது. 250 ஆண்டுகளுக்கு முன்னர் 1044ம் ஆண்டு அநிருத்தன் துவக்கிவைத்த புகழோங்கிய ஆட்சி அவமானத்துடன் வெளியேறியது..

பர்மாவில் ஒரே நேரத்தில் வெவ்வேறு பகுதிகளை வெவ்வேறு அரசர்கள் ஆண்டார்கள். தமிழ் நாட்டில் சேர, சோழ , பாண்டிய மன்னர்களும், பல குறுநில மன்னர்களும் ஒரே காலத்தில் ஆட்சி செய்தது போல மியன்மாரில் நடந்தது. யாருடைய கை மேலோங்குகிறதோ , அப்போது அவர்கள் பெரும்பகுதியைப் பிடித்து சாம்ராஜ்யத்தை நிறுவினர். சில நே ரங்களில்  அவர்கள் ஆட்சி தாய்லாந்து , கம்போடியா, லாவோஸ் பகுதிகள் வரை நீடித்தது.

மலேயா, இந்தோனேஷியா போன்ற நாடுகள் துலுக்கர் வசம் சிக்கி, முஸ்லீம் நாடுகள் ஆனபோதும் பர்மா அதில் சிக்க வில்லை . இன்றுவரை புத்தமதமே நீடிக்கிறது .

—SUBHAM—-

Tags- பர்மா, வரலாறு, நராதிபதி, குப்ளாய் கான், பன்றி இறைச்சி

Leave a comment

Leave a comment