காந்திஜி நுழைய மறுத்த கோவில்: கர்நாடக மாநிலத்தில் 108…….– Part 23(Post No.12,432)

Banavasi Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,432

Date uploaded in London – –  17 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 23

தண்டேலி –24 kilometers from Dandeli –என்னுமிடத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் கவல (Kavala Caves) குகைகள் இருக்கின்றன. அங்கு ஒரு சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஹலியல்(Halial)  என்னும் ஊரில் 1996ல் கட்டப்பட்ட துல்ஜா பவானி கோவில், கோவா , கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநில பக்தர்களை ஈர்க்கிறது .

107.சிர்ஸி மாரிகாம்பா கோவில் Sirsi Marikamba Temple

இங்கு துர்கா தேவி மாரிகாம்பா என்னும் பெயரில் வழிபடப்படுகிறாள்.1688 ஆம் ஆண்டு இந்தக் கோவில் உருவானது .எண்தோள் துர்க்கை புலி மீது சவாரி செய்கிறாள். ஒரு அசுரனைக் கொல்லும் உக்ர வடிவில் சிலை செதுக்கப்பட்டுள்ளது . அருகிலுள்ள ஏரியில் இந்தச் சிலை கிடைத்ததாம்.

கொங்கணி பிரதேசத்தில் பரவிய காவி பாணி கலை வடிவ ஓவியங்களை இங்கே காணலாம்.

காந்திஜி நுழைய மறுத்த கோவில்

உத்தர  கன்னட மாவட்டத்தில் ஹுப்ளி யிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் கோவில் இருக்கிறது

இந்தக்கோவிலின் பூஜாரி விஸ்வ கர்ம குலத்தைச் சேர்ந்தவர். இங்கு எருமை பலி கொடுக்கப்பட்டுவந்தது 1934-ம் ஆண்டில் மஹாத்மா காந்தி இந்த ஊருக்கு வந்தார்; கோவிலில் மிருக பலி  கொடுக்கப்பட்டதைக் கேட்டவுடன் கோவிலுக்கு வர மறுத்துவிட்டார். பின்னர் கோவில் ட்ரஸ்டிகளில் ஒருவரே மிருக பலியை நிறுத்த இயக்கம் மேற்கொண்டு வெற்றிகண்டார் .

இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் ரத யாத்திரைக்கு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்; மஹாபாரத விராட பர்வத்தில் யுதிஷ்டிரர் வழிபட்டதாகக் கூறப்படும் துர்கா தேவி இவளே என்ற நம் பிக்கையும் மக்களிடம் உள்ளது.

108.வனவாசி மதுகேஸ்வர கோவில் Banavasi Madhukeshwara Temple

பனவாசி / வன வாசி என்னும் இடம் சிர்ஸி யிலிருந்து 24 கி.மீ .

கடம்ப வம்ச தலை நகர் .

இங்குள்ள மதுகேஸ்வர்- மதுமதி சிவன் கோவில் புகழ்பெற்றதும் பழமையானதும் ஆகும்.

கல்லிலான கட்டில் , உயரமான நந்தி, மியூஸியம் , கடம்ப வம்சத்தினர் சிற்பங்கள். இங்குள்ள சிறப்பு அம்சங்கள் :

இது கடம்ப வம்ச மன்னர்காளால் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது; கன்னட மொழி பொறிக்கப்பட்ட பழைய நாணயமும் இங்கே கண்டெடுக்கப்பட்து பொ .ஆண்டு 345 CE முதல் 200 ஆண்டுகளுக்கு ஆட்சிசெய்த கடம்பர்கள் இங்குள்ள பழைய சின்னங்களை உருவாக்கினார்கள்; கர்நாடகத்தின் முதல் மன்னர்கள் கடம்ப வம்சத்தினர்தான் . ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் கடம்போத்சவம் நடக்கிறது. யக்ஷ கான கேந்திரம் இது. கன்னட மொழியின் ஆதிகவி பம்பா , இங்குதான் தந்து படைப்புகளை எழுதினார்.

குறிப்பு

108 கோவில்கள் என்று தலைப்பிட்டு எழுதத் துவங்கிய பின்னர்தான் இது 1008 கோவில்களுக்கும் மேலாக உள்ள மாநிலம் என்பது புரிந்தது. ஆகையால்  முக்கியமான கோவில்களைத் தொடர்ந்து காண்போம்..

109. சஹஸ்ர லிங்க கோவில் Sahasralinga Temple

சிர்ஸி யிலிருந்து 17 கி.மீ தூரம்.

சுவாதி வட்டார மன்னர் தனக்கு மகப்பேறு கிடைப்பதற்காக ஆயிரம் லிங்கங்களை இங்கு அமைத்தார்.

12 ஆண்டுகளுக்கு முன்னர் கம்போடியாவிலும் இதே போல சஹஸ்ரலிங்கம் இருப்பது பற்றி ஆராய்ச்சிக்கட்டுரை எழுதியுள்ளேன் .

இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்துக்கும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள கம்போடியா நாட்டுக்கும் அதிசியமான தொடர்பு நிலவுகிறது. உலகப் புகழ்பெற்ற அங்கோர்வட் கோவில் கம்போடியாவில் இருப்பதைப் பலரும் அறிவார்கள். வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோநேசியா, கம்போடியா முதலிய நாடுகளில் இந்துக்கள் 1500 ஆண்டுகளுக்கு ஆட்சி செலுத்தியதையும் அகத்தியர், கவுண்டின்யர் என்ற இரண்டு பிராமணர்கள் இந்த ஆட்சியை நிறுவியதையும் பலரும் வரலாற்றுப் புத்தகத்தில் படித்திருப்பர். ஆனால் வியட்நாமில் ஸ்ரீமாறன் என்ற பாண்டியன் ஆட்சியை நிறுவியதும் கம்போடியாவில் சஹஸ்ரலிங்கம் இருப்பதும் பலருக்கும் தெரியாது.

கர்நாடகத்திலும் கம்போடியாவிலும் மட்டும் ஓடும் நதிக்கிடையில் இப்படி ஆயிரம் லிங்கங்களை யார் செதுக்கினார்கள், எப்போது செதுக்கினார்கள், ஏன் செதுக்கினார்கள் என்பது மர்மமாகவே இருக்கிறது. இதற்கான சாட்சியங்கள் பழைய நூல்களில் இல்லை. பெரும்பாலும் செவி வழிச் செய்தியில்தான் கிடைக்கிறது. ஆயினும் பல நூற்றாண்டுகளாக, ஒருவேளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவை இரண்டும் இருக்கக் கூடும்.

கர்நாடக மநிலத்தின் வடக்கு கன்னட பகுதியில் சால்மலா ஆற்றில் இந்த ஆயிரம் (சஹஸ்ர) லிங்கங்கள் இருக்கின்றன. சீர்சி என்னும் ஊரிலிருந்து  17 கிலோமீட்டர் பயணம் செய்தால் இதை அடையலாம். ஆற்று நீரோட்டத்தில் நூற்றுக் கணக்கான லிங்கங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இயற்கை அழகு கொஞ்சும் இடம்– மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென் மேற்குப் பருவமழை கொட்டும் காலங்களில் ஆறு கரை புரண்டு ஓடும் காட்சி கண்கொள்ளாக் கட்சியாகும். லிங்கங்கள் அதன் அடிப்பாகமான யோனியுடன் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஷால்மலா ஆற்றின் நீரால் இவைகளுக்கு எப்போதும் அபிஷேகம்தான். கோவில்களைப்போல யாரும் போய் அபிஷேகம் செய்யவேண்டியதில்லை.ஆண்டுதோறும் சிவராத்திரியின்போது ஏராளமான மக்கள் வந்து வணங்குகின்றனர்.

மஹாபாரதக் கதைகளைத் தொடர்புபடுத்திப் பேசும் கதைகளும்  உலவுகின்றன

109.கோடி லிங்கேஸ்வர கோவில்  , கோலார் தங்கச்சுரங்கம் Kotilingeshvara Temple KGF

இந்த தலத்தின் சிறப்புகள் :

108 அடி உயர சிவலிங்கம் கோவிலைச் சுற்றி லட்சக்கணக்கில் குட்டி சிவலிங்கங்கள் !!

நந்தியின் உயரம் 35 அடி.!

கோலார் தங்கச் சுரங்கம் அருகில், 6 கி.மீ . தொலைவில் நாஸ்தீகராக இருந்து ஆஸ்தீகராக மாறியவர் அண்மைக்காலத்தில்

சமைத்த கோவில்.

வரும் போகும் பக்தர்கள் ஆளுக்கு ஒரு லிங்கம் வீதம் வைத்து 70 லட்சம் குட்டி லிங்கம் வந்து விட்டதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது

பல்வேறு சந்நிதிகளும் புதிதாகத் தோன்றியுள்ளன.

சிவராத்திரி காலத்தில் ஹெலிகாப்டர் மூலம் அபிஷேகம் நட த்ததப்பட்டது

கூடிய விரைவில் ட்ரோன் Drone Abishekam அபிஷேகம் நடக்கலாம் !!

MY OLD ARTICLES ON KARNATAKA-CAMBODIA LINK

சஹஸ்ரலிங்கம்: கர்நாடகா-கம்போடியா …

Tamil and Vedas

https://tamilandvedas.com › சஹ…

5 Jun 2012 — கர்நாடக மநிலத்தின் வடக்கு கன்னட பகுதியில் சால்மலா ஆற்றில் இந்த ஆயிரம் (சஹஸ்ர) …

The Mysterious link between Karnataka and Cambodia

Tamil and Vedas

https://tamilandvedas.com › 2011/11/11 › the-mysteri…

11 Nov 2011 — It is very interesting to find out a mysterious link between the Indian state of Karnataka and a South East Asian country Cambodia.

Pictures of Sahasralinga in Karnataka, Cambodia

Tamil and Vedas

https://tamilandvedas.com › pictures…

5 Jun 2012 — “The Mysterious Link between Karanataka and Cambodia“. … Above two pictures are from Karnataka Sahasralinga near Sirsi.

–subham—

Tags – காந்திஜி, எருமை பலி , சஹஸ்ரலிங்கம், கோடி லிங்கம், கடம்ப வம்சம், பழைய கோவில் , மாரிகாம்பா

Leave a comment

Leave a comment