
Post No. 12,430
Date uploaded in London – 17 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
கொடுக்கல் வாங்கல் செய்ய உகந்த தினங்கள்!
ச.நாகராஜன்
வாகனங்கள்
விஷ்ணுவின் வாகனம் கருடன். (மத்ஸ்ய புராணம்)
சிவனின் வாகனம் நந்தி. (சிவ புராணம்)
இந்திரனின் வாகனம் ஐராவதம் யானை (நாரதீய புராணம், வாயு புராணம்)
சூரியனின் வாகனம் சப்த குதிரைகள் பூட்டிய ரதம் (மத்ஸ்ய புராணம்)
லக்ஷ்மியின் வாகனம் ஆந்தை (உலூக தந்த்ரம்)
துர்க்கையின் வாகனம் சிம்மம். . (சிவ புராணம்)
யமனின் வாகனம் எருமை ((நாரதீய புராணம், பால ராமாயணம்)
முருகனின் வாகனம் மயில்.
சரஸ்வதியின் வாகனம் ஹம்ஸம். (மார்கண்டேய புராணம்)
பிள்ளையாரின் வாகனம் மூஞ்சூறு.
பைரவரின் வாகனம் நாய்.
சீதளா தேவியின் வாகனம் கழுதை. (ஸ்கந்த புராணம், ருத்ர யாமளம்)
கேதுவின் வாகனம் புறா.
ப்ரம்மாவின் வாகனம் ஹம்ஸம். (நாரதீய புராணம், ஶ்ரீமத் பாகவதம்)
ராகுவின் வாகனம் புலி.
செவ்வாயின் வாகனம் குதிரை.
அக்னியின் வாகனம் ஆடு. (நாரதீய புராணம்)
கொடுக்கல் வாங்கல் செய்ய உகந்த நாட்கள்!
புதன்கிழமையில் யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. (ராமாசார்ய டீகா)
கடனைத் திருப்பிப் பெறுவதற்கு செவ்வாய் சுபமான நாளாகும்.
ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய் கிழமை, ஹஸ்த நட்சத்திர நாட்களில் கடன் வாங்கக் கூடாது.
மூன்று வித பலங்கள்!
பலம் – அதாவது வலிமை- மூன்று வகைப்படும்.
1) ஞானபலம் மந்த்ர சக்தி – மந்திரத்தின் மூலம் வரும் வலிமை ஞான பலம் ஆகும்.
2) கோசதண்ட பலம் ப்ரபு சக்தி – அரசை ஆளும் பலத்திற்கு செழிக்கின்ற கஜானாவும் வலிமை வாய்ந்த சேனையும் பலத்தை நல்கும்.
3) விக்ரம பலம் – உடல் வலிமையே வீரத்தை நல்கும்.
சக்திஸ்திரிவிதா: ஞானபலம் மந்த்ர சக்தி: | கோசதண்டபலம் ப்ரபு சக்தி: விக்ரமபலமுத்ஸாஹ சக்தி: || அர்த்த சாஸ்திரம் VI 2.33
லலித கலைகள்!
ந்ருத்யம் – நாட்டியம்
கீதம் – இசை
வாத்யம் – இசை வாத்தியங்கள்
இந்த மூன்றும் லலித கலைகள் எனப்படும்.
ந்ருத்யம் கீதம் ச வாத்யம் ச த்ரயம் லலிதமுச்யதே!
யாத்திரை!
யாத்திரை மூன்று வகைப்படும்.
குரு யாத்திரை
தேவ யாத்திரை
தீர்த்த யாத்திரை
குருயாத்ரா தேவயாத்ரா தீர்த்தயாத்ரேதி ச த்ரிதா |
கர்ப்பத்திலேயே நிச்சயிக்கப்படுபவை!
கர்ப்பத்திலேயே நிச்சயிக்கப்படுபவை ஐந்து விஷயங்கள்.
இவை மாற்ற முடியாதவை.
1) ஆயுள் – வாழ்கின்ற காலம் – வயது
2) கர்மா – தொழில் (செய்கின்ற வேலை)
3) வித்யா – கல்வி (படிப்பு)
4) வித்தம் – செல்வம்
5) நிதனம் – முடிவு (எப்படி முடிவு வரும் என்பது)
பஞ்சைதானி விலிக்யந்தே கர்பஸ்தஸ்யைவ தேஹின: |
ஆயு: கர்ம ச வித்யா ச வித்தம் நிதனமேவ ச ||
***