QUIZ சங்கீத முத்திரை பத்து QUIZ (Post.12,439)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,439

Date uploaded in London – –  18 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

சங்கீத முத்திரை பத்து

QUIZ SERIES N0.68

1.பாடலில் முத்திரை வைத்துப் பாடும் வழக்கத்தை யார் துவக்கியது?

xxxxx

2.கர்நாடக இசையில் முத்திரைSIGNATURE வைத்துப் பாடிய முதல்வர் யார் ? அவருடைய முத்திரை என்ன?

xxxxx

3.சங்கீத மும்மூர்த்திகளின் முத்திரைகள் என்ன ?

Xxxxx

4.முத்திரைக்கு வேதத்தில் ஆதாரம் இருக்கிறதா?

xxxx

5.ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் முத்திரைகள் இருக்கின்றனவா?

Xxxx

6.ஜெயதேவரின் முத்திரை என்ன ?

xxxx

)

7.பாபநாசம் சிவனின் முத்திரை என்ன ?

xxx

xxxx

8.வாசுதேவ என்ற முத்திரையுடன் முடியும் பாடல்கள் யாருடையவை ?

Xxxx

9.துகாராம் மராத்தி மொழியில் பாடிய அபங்கங்களை எப்படி கண்டுபிடிக்கலாம் ?

xxxx

10.அபங்கம் பாடிய யார் ஏக ஜநார்த்தனி  என்ற முத்திரை வைத்துப் பாடல்களை இயற்றினார் ஏன் ?

xxx

விடைகள்

1.நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தன் தேவாரத்தைப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் தமிழ் பரப்பினார். அவருடைய  விக்ரகங்கள் அனைத்தும் டான்ஸ் ஆடும் போஸில்தான் இருக்கும். அவர் தனது பாடலில் முத்திரை வைத்து– அதாவது தனது  பெயரை — பல வகைகளில் சொல்லி, பாடி முடிப்பார் ; நமக்குத்  தெரிந்து இந்தியாவில் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வழக்கத்தைத் துவக்கியவர் சம்பந்தர்தான்

xxxxx

2.சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கன்னடத்தில் கிருதிகள் இயற்றிய புரந்தரதாசர்தான் கர்நாடக இசையின் பிதாமஹர் . அவருடைய முத்திரை புரந்தர விட்டல; இந்த வரியுடன் பாடல் முடியும்

xxxxx

3.சியாமா சாஸ்திரிகள் சியாம கிருஷ்ண என்றும் முத்து சுவாமி தீட்சிதர் குரு குஹ என்றும் முத்திரை வைத்து பாட்டு எட்டுக் கட்டினர். தியாகராஜர், ஞான சம்பந்தர், புரந்தரதாசர் போல,  தனது பெயரையே பயன்படுத்தினார்

பவமான சுதுடுபட்டு, பாதார விந்தமுலகு

நீ நாம ரூபமுலகு நித்ய ஜய மங்களம்

ப்ரஹ்லாத நரதாதி பத்லு பொகடி ஸண்டு

ராஜீவ நயன தியாகராஜாதி வினுதனமன

xxxx

4.வேதத்தில்தான் முத்திரை வைத்துப் பாடும் வழக்கம் தோன்றியது ; பல ரிஷிகள் ஒரு குறிப்பிட்ட வகையில் துதிகளை முடிக்கின்றனர்; இன்னும் பலர் தனது பெயரையே சொல்லிப்படுகின்றனர். ஞான சம்பந்தர் ரிக்வேதத்தை அதிகமாகப் புகழ்வதால், முத்திரை வைத்துப் பாடுவதை ரிக்வேதத்தில் கற்றார் என்றால் அது மிகையாகாது 

xxxxx

5.உண்டு ;மீரா கே பிரபு கிரிதர் நாகர — மீராபாய்

கபீர் கஹதா – கபீர் பாடல்கள்

xxx

6.ஜெயதேவர் பாடிய நூல் கீத கோவிந்தம் . இதில் 24 அஷ்டபதிகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஜெயதேவரின் பெயருடன் முடியும் .

எடுத்துக் காட்டாக , முதல் அஷ்டபதி முடியும் வரிகள்

ஸ்ரீ ஜயதேவ கவே: இத முதிதம் உதாரம்

ஸ்ருணு ஸுகதம் ஸுபதம் பவஸாரம்

கேசவ த்ருத தஸவித ரூப (ஜயஜக தீஸஹரே

xxxx

7.பாபநாசம் சிவன் தனது முத்திரையாக “ராமதாஸ” என்பதை வைத்து கிருதி, வர்ணம்,பதம், இசைநாடகங்கள், ஜாவளி ஆகிய பல இசை வடிவங்களை இயற்றியுள்ளார்.

xxxx

8.கோவை மாவட்டத்தில் பிறந்த மைசூர் வாசுதேவாவாச்சாரியார் (1865- 1961) முத்திரை வாசுதேவ ;சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு முதலிய மொழிகளில் அனேக கீர்த்தனங்களைச் செய்து அச்சிட்டு பிரசித்தப்படுத்தினார் பல சமஸ்தானங்கள், மடங்களில் பெரிய விருதுகளை பெற்றார்.

xxxx

9.அவை துகா மனே என்ற முத்திரையுடன் முடியும்

xxxx

10.ஏக்நாத்

ஏகநாத் என்பது பாடிய மகானின் பெயர்; அவருடைய குரு ஜனார்த்தன சுவாமி. இரண்டையும் இணைத்து இப்படி ஏக ஜநார்த்தனி  முத்திரை வைத்தார் .

XXXXX

 TAGS- முத்திரை, பாடகர், இந்துஸ்தானி, கர்நாடக இசை, பாடல் இயற்றியோர் , கிருதிகள், கீர்த்தனைகள் , சங்கீத மும்மூர்த்திகள், SIGNATURE

Leave a comment

Leave a comment