
Post No. 12,441
Date uploaded in London – – 18 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கன்பூசியஸ் சொன்னதை வள்ளுவரும் செப்பினார்- Part 2
வள்ளுவரின் குறட்பாக்களை நூற்றுக்கணக்கான பெரியோர்களின் பொன் மொழிகளுடன் ஒப்பிடமுடிகிறது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அத்தனை பெரியோர்கள் சொன்னதையும் அவர் நமக்கு ஜுஸ் Juice பிழிந்து கொடுத்து இருக்கிறார் ; வள்ளுவர் (Tiru Valluvar) சீன மொழியைப் படித்ததில்லை ; ஆயினும் கன்பூசியஸ் எதிரொலியைக் குறளில் கேட்க முடிகிறது. வள்ளுவர் பாலி (Pali) மொழி படித்தாரோ இல்லையோ; ஆயினும் தம்ம பத (Dhammapada) எதிரொலியைக் கேட்க முடிகிறது ; வள்ளுவன் மாபெரும் சம்ஸ்க்ருத மொழி அறிஞன் என்பதில் சந்தேகமே இல்லை; இதனால் சம்ஸ்க்ருத இலக்கியத்தின் தாக்கத்தை முதல் குறளிலிருந்து கடைசி குறள் வரை காண முடிகிறது . வால்மீகி முதல் வள்ளுவர் வரை என்ற என்னுடைய தமிழ் புஸ்தகத்தில் இதைக் காட்டியுள்ளேன். நான் எழுதிய ஆங்கிலப் புஸ்தகத்தில் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர்களின் எண்ணங்களும் அப்படியே இருப்பதைக் காட்டி இருக்கிறேன்; வள்ளுவர் யாரையும் காப்பி Copy அடிக்கவில்லை. அவர் பிறவியிலேயே மஹா மேதாவி ; ஒரு அவதாரம் என்று சொன்னாலும் மிகையல்ல. உலகில் எங்கும் காண முடியாத புதுமையைச் செய்தார். உலக மஹா அறிஞ ர்களின் அத்தனை பொன்மொழிகளையும் சுருக்கி வரைந்தார் .
கன்பூசியஸ் (Confucius) என்ற சீன தத்துவப் பேரறிஞர் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். அவரை இன்று உலகம் முழுதும் போற்றுகிறது . தேசீய சீனா என்னும் தைவான் (Taiwan) நாட்டில் (பார்மோசா தீவு) அவர் பிறந்த தினம் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இதோ மேலும் சில ஒப்பீடுகள் :-
நல்லதைச் செய்ய ஆசைப்பட்டாலே போதும்! உங்களுடைய தீய குணங்கள் எல்லாம் ஓடிவிடும்.- என்று கன்பூசியஸ் (Confucius) சொன்னார்
வள்ளுவர் சொல்கிறார் : “அட கொஞ்சமாவது யூ ட்யூபில் You Tube அல்லது கோவில் உபன்யாசங்களில் அல்லது ரேடியோவில் நல்லதைக் கேளுங்கள்; உங்களுக்கு இமயமலை அளவுக்கு புகழ் ஓங்கிவிடும் என்கிறார்
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.– குறள் 416
[பொருட்பால், அரசியல், கேள்வி]
:எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.– என்பது இதன் பொருள் வள்ளுவர் பயன்படுத்திய சொற்களைக் கவனியுங்கள்
ஆன்ற பெருமை ; அதன் பொருள் ஆன்ற : adj. ஆல்-. சால்-. Excellent, grand, splendid; மாட்சிமைப்பட்ட. ஆன்றதவச் செந்நெறி (பெரியபு.ராணம் )
Xxxxx
ஞானத்தைப் பெறுவதற்கு ஆழமாக, அகலமாகவும் படித்தால் மட்டும் போதாது. படிக்கிற விஷயத்தில் முழுக் கவனத்துடன் கடைப்பிடிக்கவும் வேண்டும்.– என்று கன்பூசியஸ் (Confucius) சொன்னார்.
வள்ளுவரும் அதையேதான் சொல்கிறார்!
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக– திருக்குறள் 391
[பொருட்பால், அரசியல், கல்வி]
மணக்குடவர் உரை
கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க: கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக. கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.
Xxxx
துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு எடுக்கிறீர்களோ, அப்போதே வாழ்க்கையில் பாதி அபாயத்தைக் கடந்து விட்டீர்கள் என்பது உறுதி.– கன்பூசியஸ் (Confucius)
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு– குறள் 467
[பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை]
ஸம்ஸ்க்ருதச் சொல் – கருமம்
(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
இதில் வள்ளுவர் பயன்படுத்திய ஒரு புது வினைச் சொல்லை கவனிக்கவேண்டும் துணிக = துணிச்சலுடன் இறங்கு!
இன்னும் ஒரு குறளில் வெற்றி நிச்சயம் என்கிறார் :-
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்–குறள் 666
உறுதியாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்
Xxxxx
ஒருவரைப் பழி வாங்கத் தொடங்குவதற்கு முன்பு, இரண்டு கல்லறைகளைத் தோண்டிக் கொள்ளுங்கள்!– கன்பூசியஸ் (Confucius)
சொன்னது
வள்ளுவரோ இன்னும் ஸ்ட்ராங்STRONG காகவே பாடுகிறார்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு-– குறள் 204
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]
காரணமே இல்லாமல் ஒருவனுக்கு தீங்கு நினைத்தால் தர்மம் உனக்குக் கல்லறை தோண்டிவிடும் !
இதையும் விட ஸ்ட்ராங் STRONG ஆக இன்னும் ஒன்றும் சொல்கிறார்; நாம் செய்யும் தீவினைகளோ நல்ல வினைகளோ நம்மை நிழல் போல தொடர்ந்து வருமாம்.
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடி உறைந் தற்று– குறள் 208
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]
ஸம்ஸ்க்ருத புராணங்களில் இதை சித்திர குப்தன் என்பர். அதன் தமிழ் அர்த்தம் = மறைவான DRAWING ட்ராயிங் = ரகசிய சித்திரம். SECRET PICTURE= GUPTA CHITRA அதாவது யமனிடம் உள்ள கம்பியூட்டர் அமெரிக்காவில் நாஸா NASA ‘S SUPER FAST COMPUTER நிறுவனத்தில் உள்ளதை வீட சூப்பர் சூப்பர் கம்ப்யூட்டர் ; நமது தீய எண்ணங்களைக் கூட நினைவில் வைத்துக்கொண்டு, நாம் இறக்கும் நாளில் எமனுக்கு முன்னதாக PRESENTS ப்ரசன்ட் செய்யுமாம்; அந்த சித்ர குப்தன் அக்கவுண்ட் புக் ACCOUNT BOOK படி எமதர்ம ராஜன் நமக்கு தீர்ப்பு வழங்குவான். கணக்குத் தப்பாமல் தீர்ப்பு சொல்லுவதால் அவனுக்கு தர்மராஜன் JUSTICE KING என்றும் பெயர் . வள்ளுவர் சித்ர குப்தனை நிழல் SHADOW என்று மொழிபெயர்க்கிறார் !
— TO BE CONTINUED……………………….
Tags- சித்திர குப்தன், நாஸா, சூப்பர் கம்ப்யூட்டர், கன்பூசியஸ் , வள்ளுவர்,