கோவிலில் பெரிய பீமன் முரசு!! கர்நாடக மாநிலத்தில் 108……. Part 24 (Post No.12,442)

Chandravalli Cave

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,442

Date uploaded in London – –  18 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 24 

110.ஸ்ரீ காமாட்சி சாரதா ஸ்ரீ சக்ர கோவில் Sri Kamakshi Sharada Sri Chakra Temple, Hebbur

துமகூரிலிருந்து 23 கி.மீ.

ஹெப்பூரில் ஆதி பராசக்தியின் ஸ்ரீ சக்ர கோவில் இருக்கிறது. ஸ்ரீ கோதாண்டாஸ்ரம  மடம் இதை நிர்வகித்து வருகிறது பஞ்ச லோகத்தாலான ஸ்ரீ சக்ரம் 300 ஆண்டுப் பழமை உடைத்து. காமாக்ஷி சாரதா 4 கரங்களில் பாச, அங்குச, புஸ்தக, அக்ஷமாலா சகிதம் காட்சி தருகிறாள் . ஸ்ரீ சக்ர பீடத்தின் மேல் அவள் நிற்கிறாள் .

111.கைத்தல சென்னகேசவ கோவில் Sri Kaidala Chennakeshava Swamy Temple

தும்கூரிலிருந்து 6 கி.மீ

புகழ் பெற்ற  சிற்பி ஜனக ஆசாரியும், அவரது மகன் தங்கன ஆசாரியும் கட்டிய கோவில். இந்த ஊரில் பிறந்த ஜனக ஆசாரி பிழைக்க வழியில்லாமல் தவித்த போது வைஷ்ணவ ஆசார்யார் ஸ்ரீ ராமாநுஜரைத் தரிசித்ததாகவும் அவரது வேண்டுகோளின்பேரில் கோவில்களைக் கட்டியதாகவும் சொல்லப்படுகிறது பிட்டிதேவன் என்ற பெயர்கொண்ட மன்னன் , ராமாநுஜரைத் தரிசித்து தனது மகளின் நோயை அவர்  தீர்த்துவைக்கவே பரம பாகவதனாக மாறி விஷ்ணு வர்த்தனன் என்று பெயர் ஏற்றான் . ராமானுஜர் வேண்டுகோளின்படி அவன் ஜனகாச்சாரியைக் கொண்டு கோவில் களைச் சமைத்தான். இங்குள்ள சென்ன கேசவர் , அந்த  ஆசாரியின் கடைசி சிற்பம் என்றும் அது அற்புதமாக வந்துள்ளது என்றும் பக்தர்கள் கூறுவார்கள் அந்த ஆசாரி ஒரு கையை இழந்து, இறை அருளால் கை பெற்ற .கதைகளும் புழக்கத்தில் வலம் வருகின்றன.

எடியூர் ஸ்ரீ சித்த லிங்கேஸ்வர கோவில் EDIYUR SIDDHALINGESVARA SAMADHI

வீர சைவ துறவி சித்தலிங்க சுவாமிகளின் ஜீவ சமாதி இங்கு இருக்கிறது .அவர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆகையால் வீரசைவர்களுக்கு இது ஒரு புனிதத் தலம்

Gali mantapa

112. சித்ர துர்கா குகைக் கோவில்கள் CHITRADURGA CAVES AND TEMPLES

சித்ர துர்கா அருகிலுள்ள சந்திர வல்லி குகைகள் பல்லாயிரம் ஆண்டு வரலாறு  (PRE-HISTORIC AND KADAMBA DYNASTY) படைத்த இடம். அங்கு பழங்கற்கால, உலோக கால சின்னங்கள், நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குந்தல தேசத்தை ஆண்ட மன்னர்களின் வரலாற்றுச் சின்னங்களும், கடம்ப வம்ச மயூர சர்மனின் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன  ஒரு குகையில் சிவலிங்கம், மற்றும் தியான அறை உளது .

ஒபவா என்ற வீராங்கனை, ஹைதர் அலியை எதிர்த்து போரிட்ட இடம் இது.

Hidimbeshwar Temple ஹிடம்பேஸ்வர கோவில்

நாயக்கர் ஆட்சி செய்த இடம் இது. இந்த இடம் மஹாபாரத ஹிடம்பன், ஹிடும்பி, கடோத்கசன் ஆகியோருடன் தொடர்புபடுத்திப் பேசப்படுகின்றது. கோட்டை கொத்தளங்கள் நிறைந்த இடம். கோட்டையில் உள்ள 18 கோவில்களில் இதுவும் ஒன்று.

அடுமல்லேஸ்வர் கோவில் அருகில் உள்ளது.

சித்ர துர்க கோட்டைக்குள் உள்ள பல கோவில்களில் சித்தேஸ்வரர் கோவிலும் ஒன்று கோட்டையின் மேல்தளத்தில் 18 கோவில்களை நாயக்க மன்னர்கள் கட்டினார்கள்.நாயக்கர்களின் குல தெய்வம் ஏக நாதேஸ்வரி ..கோட்டையின் நுழை வாயிலில் பராசக்தியின் பாத சுவடுகள் பொறிக்கப்பட்டுள்ளன .பல்குணேஸ்வர , கோபால கிருஷ்ண சந்நிதிகளும் இருக்கின்றன.

கோவிலில்பெரிய பீமன் முரசு

மலை மீது ஏறிச் சென்றால் நல்ல சிற்பங்களைக் காணலாம். பீமன் பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் பெரிய முரசு இருக்கிறது

ஹிட ம்பேஸ்வர கோவிலில் உள்ள முரசு குறிப்பிடத்தக்கது பத்து அடி சுற்றளவும், ஆறு அடி உயரமும் உள்ள ஒரு உருளை பீமனின் முரசு என்று சொல்லப்படுகிறது இது இரும்புத் தகடுகளால் செய்யப்பட்டது கோவிலின் வாயிலில் ஒற்றைக்கல் தூண் நிற்கிறது.

மலை அடிவாரத்தில் சித்தேஸ்வர கோவில் இருக்கிறது கோபால கிருஷ்ணர் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் சுமார் 600 ஆண்டுகளுக்கு முந்தியவை.

கோட்டையின் கீழ்தளத்தில் உத்சவம்பா கோவிலும் இருக்கிறது. இப்படி ஒரே கோட்டையில் நிறைய கோவில்கள் இருப்பது சிறப்பு அம்சம் .

லிங்காயத்துக்களின் முக்கிய மடமான முருகாராஜேந்திர மட ம் அருகில் இருக்கிறது

கோட்டையில் விழும் மழை  நீரை சேமித்து மீண்டும் பயன்படுத்த சில அமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் கோட்டைக்குள் தண்ணீர் தட்டுப்பாடே இராது .

அங்கி மட வட்டாரத்தில் பஞ்சலிங்கேஸ்வர கோவில் இருக்கிறது. அங்கு 5 லிங்கங்கள் உள்ளன.

கோட்டையில் துப்பாக்கி மருந்து உற்பத்தி செய்யும் ஆலைகளும் இருந்த தடயங்களைக் காணலாம்

113.ஹரிஹர் கோவில் HARIHAR HARIHARESWARA TEMPLE

வீர நரசிம்ம மன்னாரின் தளபதி 1228-ல் கட்டிய ஹரிஹரேஸ்வர கோவில் ஹரிஹர்  என்னுமிடத்தில் இருக்கிறது. சிவனின் வலதுபுறமும் விஷ்ணுவின் இடது புறமும் ஒரே சிலையில் அமைந்த சங்கர நாராயணனே ஹரியும் ஹரனும்.ஆவர் . இந்தக்கோவில் ஹொய்சாளரின் உன்னத சிற்பக்கலைக்கு எடுத்துகாட்டாக அமைந்து இருக்கிறது.

இந்த ஊர் தாவண்கரே மாவட்டத்தில் இருக்கிறது.

TO BE CONTINUED………………………………………

TAGS சித்ர துர்கா , குகை, கோவில்கள், ஹரிஹர் , பீமன் முரசு ,

Leave a comment

Leave a comment