அனுமன் பிறந்த கிஷ்கிந்தா :கர்நாடக மாநிலத்தில் 108…..– Part 25 (Post.12,449)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,449

Date uploaded in London – –  21 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 25 

தாவண்கரே DAVANAGERE வட்டார கோவில்கள்

சூலகரே / சாந்திசாகர அருகில் வீரபத்ரேஸ்வரா, காளி , சித்தேஸ்வர் , கிருஷ்ணன் கோவில்கள் உள்ளன ( Veerabhadreshwara Temple, Kali Temple, Sri Siddheshwara Temple and Sri Krishna temple ).

Belagutti: பெலகுட்டி என்னும் இடத்தில் பழைய (old Siddeshwara temple ) சித்தேஸ்வர் கோவில் இருக்கிறது

Chennagiri: சென்னகிரியில் மலைமீதுள்ள கோட்டையில்  பேட்டே ரெங்கநாதசுவாமி கோவில் Bete Ranganathaswami இருக்கிறது

Honnali:ஹொன்னலியில் மல்லிகார்ஜுன கோவில் ;(Mallikarjuna Temple)

Kuruva Island:10 kms south-east of Honnali, துங்கபத்ரா ஆற்றின் தீவில் ராமேஸ்வர கோவில்; Rameshwara temple

சாந்த பென்ணுர் புஷ்கரணி

Santhebennur:சாந்த பென்ணுர் புஷ்கரணியில் நடுவில் உள்ள வசந்த மண்டபம் காண வேண்டிய இடங்கள் .

சாந்தபென்னூர்புஷ்காரணியையும் ராமர் கோவிலையும் 16-ஆம் நூற்றாண்டில் கங்க ஹனுமந்தப்ப நாயக்கர் கட்டினார்

அவர் அமைத்த புஷ்கரணி / குளம் 250 அடி நீளம், 240 அடி அகலம், 30 அடி ஆழம் உடையது  250 feet (76 m) and width of 240 feet (73 m),depth is over 30 feet (9.1 m). முன்னர் எட்டு கோபுரங்கள் குளத்தைச் சுற்றி இருந்தன. இப்போது 6 மட்டுமே எஞ்சியுள்ளன இது தண்ணீரில் மிதப்பது போல காட்சிதரும்

தாவண்கரேயில் துர்கம்மா, வீரபத்ர கோவில்கள் அமைந்துள்ளன (

Durgamma and Veerabhadra Temples: Two old temples in Davanagere town.)

ஹரிஹரிலிருந்து 6 கி.மீ தொலைவிலுள்ள ரஜனஹல்லி யில் வன்னி மஹாகாளி, அம்பா பவானி ,வால்மீகி குருபீடம், தீர்த்தமேஸ்வர் கோவில் பார்க்கவேண்டிய இடங்கள்

 தீர்த்தமேஸ்வர கோவிலின் இரண்டு சிறப்பு அம்ஸங்கள்

பிரம்மாவுக்கு கோவில் , இயற்கை நீரூற்று

Brahma Temple

Bannimahakali Temple, Amba Bhavani temple and Valmiki Gurupeetha

Thirtharameswara: Thirtharameswara temple in Honnali taluk is popular for its natural spring of holy water. Thirtharameshwara is one of the few temples with a shrine dedicated to Lord Brahma.

ஆன கொண்ட சித்தேஸ்வர கோவில் ( Anekonda:Known for a beautiful Hoysala style Eshwara temple)

Balleshwara: (Hoysala era Ballala Lingeshwara temple ) பல்லேஸ்வரத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் வல்லாள லிங்கேஸ்வர் கோவில் இருக்கிறது இது ஹொய்சாளர் கால கோவில்.

Hodigere: சத்ரபதி சிவாஜி மஹாஜின் தந்தை ஷாஜி பான்ஸ்லேயின்  சமாதி கோடிக்கரேயில் இருக்கிறது Known for Tomb of Shahji Bhonsale, father of Chatrapati Shivaji.

Joladhalu: ஜோலதளுவில் அம்பா பவானி/ குக்குடமம்மா ரேணுகா தேவி கோவிலில் சிங்கம் மீது அமர்ந்து த்ரி சூலம், டமருகம் ஏந்திய நிலையில் காட்சி தரும் அம்மனைத் தரிசிக்கலாம் Amba Bhavani temple (also known as Kukkvadamma Renuka). The deity is seated on a lion with a trishula and drum in her hands.

Kalkere:கல்கரே என்னும் இடம் குதிரை லாட வடிவில் அமைந்த மலைப் பள்ளத்தாக்கு. அங்குள்ள கோவில்கள் பல்லேஸ்வர, கல்லேஸ்வர , ஹனுமந்தராய கோவில்கள் ( Balleshwara, Kalleshwara and Hanumantharaya temples)

Mayakonda: மாயகொண்டா என்னும் இடத்திலுள்ள கோவில்கள் (Obala Narasimha temple and Keshava temple )ஒப்பிலா நரசிம்மர், கேசவர்

Nanditavare: நந்தித்தவரேயில ஹொய்சாளர் கால அமிர்த

மாணிக்கேஸ்வர கோவில் Amrita Manikyeshwara temple built in Hoysala style

Shankaranahalli: சங்கரன ஹல்லியில் ரெங்கநாத சுவாமி கோவில்; இது மயக்கொண்டா போல விஜயநகர பாணியில் சமைக்கப்பட்ட கோவில்

XXXX

114.Sri Eshwara Temple, Anekonda, Davangere

தாவணகரே அருகிலுள்ள ஆன கொண்ட ஈஸ்வரன் சிவன் கோவில் குறிப்பிட்டத்தக்கது . இங்குள்ள சிற்பங்கள் ஹோய்சாள, சாளுக்கிய பாணியில் அமைந்துள்ளன; ஆயிரம் ஆண்டு பழமையான கோவில் இது. அதற்குப்பின்னர் வந்த பல வம்ச அரசர்கள் தங்கள் கைவண்ணத்தைக் காட்டியுள்ளனர். அவர்களுடைய கல்வெட்டுகளும் உள.

கல்லேஸ்வர கோவில் கூரையில் கஜ சம்ஹார மூர்த்தி, மற்ற கடவுளர் புடை சூழ காட்சி தருகிறார்..முக்கிய கர்ப்பகிரகத்தில் சிவலிங்கம் இருக்கிறது. ஏனையன காலியாக உள்ளன.

12 ஆதித்யர்கள் உள்ள கூரையும் பார்க்க வேண்டிய ஒன்று; கோவில் தூண்கள் மிகவும் கலை வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன.

xxx

115.ஆன குண்ட் ; கிஷ்கிந்தா Anegundi, also known as Anegondi

ஹம்பி நகரம் போலவே முஸ்லீம் படைகளால் நாசமாக்கப்பட்ட அருமையான இடம் ஆன குண்ட்; விஜய நகர மன்னர்கள் யானைகளை பராமரித்த இடம்  இது ; கிஷ்கிந்தா என்ற ராமாயண பிரதேசமே இதுவும் ஹம்பி நகரமும் என்று கருதப்படுகிறது அருகில் காணப்படும்  ரிஷ்ய முக பர்வதம்பம்பா நதி தீரமும்  அதை உறுதி செய்கின்றன. புவி கர்ப்ப இயல் கணக்குப்படியும் இங்குள்ள பாறைகள் பல கோடி  ஆண்டு பழமையானவை என்று கணக்கிடப்பட்டுள்ளன. இப்போது இங்குள்ள கோட்டையில் துர்கா தேவி , கணேசர் சந்நிதிகள் இருக்கின்றன

பம்பா சரோவர் என்னும் குளம் அல்லி மலர்கள் நிறைந்து காணப்படுகிறது சிவன் கோவில், லட்சுமி கோவில்கள் அதை நோக்கி அமைந்துள்ளன

Gagan Mahal, Anegunde

விஜய நகர மன்னர்களுக்கு கட்டப்பட்ட ககன் மஹால் இன்னும் அப்படியே உள்ளது. இது 500 ஆண்டு பழமையான கட்டிடம்.

Anjanadri Hill: Climb 570 steps to visit Anjaneya Temple, said to be the birthplace of Lord Hanuman.

இங்கு அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி குன்றும் இருக்கிறது 570 படிகள் ஏறிச் சென்றால் கோவிலில் ஆஞ்ச நேயரை தரிசிக்கலாம். மற்ற இடங்களில் ஹனுமார் கோவிலுக்குப் போவதைவிட இங்கு ஹனுமார் கோவிலுக்குப் போனால் ராமாயண நினைவுகளும் கிஷ்கிந்தா தரிசனமும் கிடைக்கும்.

இங்குள்ள பம்பா ஏரிக்கு மறு புறம் ஹம்பி இடிபாடுகள் இருக்கின்றன

TO BE CONTINUED……………………………………………..

Tags- அனுமன் , கிஷ்கிந்தா , கர்நாடகம், மாநிலம்,  கோவில்கள் ,Part 25 , தாவண்கரே , பிரம்மா கோவில்,

Leave a comment

Leave a comment