QUIZ பகவத்கீதை பத்து (Part 2) QUIZ (Post No.12,450)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,450

Date uploaded in London – –  21 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 பகவத் கீதை பத்து

Quiz Series No.69

1.முதல் அணுகுண்டு சோதனையை தொலைவிலிருந்து பார்த்த அணு விஞ்ஞானி யார் அவர்க்கு நினைவில் வந்த பகவத் கீதை ஸ்லோகம் என்ன?

xxx

2. உலகிலேயே பெரிய பகவத் கீதை புஸ்தகம்  எங்கே இருக்கிறது?

xxx

3.கல்கி அவதாரம் வரும் என்பதை கிருஷ்ணன் எப்படி கோடி காட்டுகிறார் ?

xxx

4.பக்தர்களுக்கு கீதையில் என்ன PROMISE ப்ராமிஸ் செய்கிறார் தலையில் அடித்து சத்தியம் செய்கிறார் ?

xxx

5.தோன்றிற் புகழொடு தோன்றுக என்றான் வள்ளுவன்கீதையில் கண்ணன் இதைச் சொன்னானா ?

xxxx

6.எல்லாஉயிர்க்கும் இன்பம் என்று தொல்காப்பியன் சொன்னான் . பகவத் கீதையில் இக்கருத்து உளதா ?

xxx

7.உள்ளதனையது உயர்வு என்கிறான் வள்ளுவன்மனம் போல மாங்கல்யம் – என்கிறது தமிழ்ப் பழமொழி கீதையில் இதைக் கண்ணன் சொன்னானா ?

xxx

8.சாக்ரடீஸும் கிருஷ்ணரும் சொல்லிய ஒரே விஷயம் என்ன?

Xxx

9.ஞானிகளுக்கு தங்கமும் தெருவில் கிடக்கும் ஓடுகளும் ஒன்றுதான் என்று கண்ணன் சொன்னதை சேக்கிழார் எப்படிச் சொல்கிறார்?

10.கீதையின் முக்கிய அறிவுரை – பலனை எதிர்பார்த்து கடமையை செய்யாதே- வள்ளுவர் இதை எப்படிச் சொன்னார் ?

xxxx

விடைகள்

1.ராபர்ட் ஓப்பன்ஹீமர் J.Robert Oppenheimer 

கண்ணபிரானின் விஸ்வரூப தரிசனம் பகவத் கீதையின் 11ஆவது அத்தியாயத்தில் இருக்கிறது. உலகின் மிகப்பெரிய அணு விஞ்ஞானி (Father of Atomic Bomb) ராபர்ட் ஓப்பன்ஹீமர், அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவர் முதல் அணுகுண்டு வெடித்த கட்சியைப் பார்த்துவிட்டு பகவத் கீதையின் 11 ஆவது அத்தியாயத்தின் 12ஆவது ஸ்லோகத்தைச் சொல்லி வியந்தார். திவி சூர்ய சஹஸ்ரஸ்ய…………………………. ஆயிரம் சூரியன் ஒரே சமயத்தில் உதித்தால் என்ன நிகழுமோ அதைப் பார்த்து எனக்கு மயிர்க்கால்கள் தோறும் கூச்சம் ஏற்படுகிறது என்று சொல்லி அர்ஜுனர் வியந்ததை அப்படியே ராபர்ட் ஓப்ப்ன்ஹீமர் சொல்லி உலகை வியப்பில் ஆழ்த்தினார்

दिवि सूर्यसहस्रस्य भवेद्युगपदुत्थिता |

यदि भा: सदृशी सा स्याद्भासस्तस्य महात्मन: || 12||

divi sūrya-sahasrasya bhaved yugapad utthitā

yadi bhāḥ sadṛiśhī sā syād bhāsas tasya mahātmanaḥ

BG 11.12: If a thousand suns were to blaze forth together in the sky, they would not match the splendor of that great form.

தி³வி ஸூர்யஸஹஸ்ரஸ்ய ப⁴வேத்³யுக³பது³த்தி²தா |

யதி³ பா⁴: ஸத்³ருஸீ² ஸா ஸ்யாத்³பா⁴ஸஸ்தஸ்ய மஹாத்மந: || 11- 12||

தி³வி = வானத்தில்

ஸூர்யஸஹஸ்ரஸ்ய = ஆயிரம் சூரியன்கள்

யுக³பத் = ஒரே நேரத்தில்

உத்தி²தா = உதயமானால்

பா⁴: யதி³ ப⁴வேத் = பிரகாசம் எப்படி இருக்குமோ

ஸா = அந்த பிரகாசம்

தஸ்ய மஹாத்மந: = அந்த மகாத்மாவின்

பா⁴ஸ = ஒளிக்கு

ஸத்³ருஸீ² = நிகராக

ஸ்யாத் = இருக்கிறது

வானத்தில் ஒருங்கே ஆயிரம் சூரியன்கள் எழுவாராயின் அங்கு தோன்றும் ஒளி அந்த மகாத்மாவின் ஒளிக்கு நிகராக இருக்கிறது

xxxx

2.உலகிலேயே பெரிய பகவத் கீதை புஸ்தகம்  புது டில்லியில் ஹரே கிருஷ்ணா கோவிலில் இருக்கிறது .  இதை 2019 ஆம் ஆண்டு பிப் ரவரி மாதம்  இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

 சுமார் 670 பக்கங்களுடன், 800 கிலோ எடைக் கொண்டதாக பகவத் கீதை புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2.8 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும் கொண்ட இந்த புத்தத்தில் 18 வகையான அற்புத ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.  இந்த பிரமாண்ட புத்தகம் இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் அச்சிடப்பட்டது. . அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் என்பதன் ஆங்கில வார்த்தையின் சுருக்கம் கொண்ட “இஸ்கான்” ISKCON கோவில் உலகின் பிரமாண்ட பகவத் கீதை கொண்ட கோவில் என்ற பெருமையை பெற்றுள்ளது.

Xxxx

3.பரித்ராணாய சாதூணாம், விநாசாய துஷ்க்ருதாம் (பகவத் கீதை 4-8) :

சாதுக்களைக் காத்தற்கும், துஷ்டர்களை அழிப்பதற்கும் யுகம் தோறும் அவதரிப்பேன்.

XXX

4. ந மே பக்த ப்ரணச்யதி (9-31): என் பக்தன் அழியவே மாட்டான்

பாரதியும் இதைச் சொல்கிறார்

நம்பினார் கெடுவதில்லை ; இது நான்கு மறைத் தீர்ப்பு – பாரதி

XXX

5.ஆமாம்; சொன்னான் .உத்திஷ்ட, யசோ லபஸ்வ ( கீதை 11-33): எழுந்திரு, புகழ் அடை.!

XXX

6.உளது .சர்வ பூத ஹிதே ரதா (12-4, 11-55): தே மாம் ஏவ ப்ராப்னுவந்தி: எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க நினைப்பவர்கள் என்னையே வந்து அடைகிறார்கள்.

XXX

7.ஆமாம்; அழகாக செப்புகிறான் :

உத்தரேத் ஆத்மநாத்மானம்: தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும்.தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது.தனக்குத் தானே நண்பன், தனக்குத் தானே பகைவன் (Bhagavad Gita 6-5).

XXX

8.ஆத்மவான் பவ: (2-45) : உன்னையே நீ அறிவாய் Know Thyself (Socrates)

“Know thyself” (Greek: Γνῶθι σαυτόν, gnōthi sauton)[a] is a philosophical maxim which was inscribed upon the Temple of Apollo in the ancient Greek precinct of Delphi. சாக்ரடீஸ் இந்த வாசகத்தை அடிக்கடி சொல்லி ,அதுவே விவேகம் தரும் என்றார்

XXX

9.ஓடு , பொன்  ஆகிய இரண்டையும் ஒன்றாகப் பார்ப்பவன் குணக் குன்று ஆவான் –பகவத் கீதை 7-8 மற்றும் 14-21

சாமலோஷ்டாம்ச் ம – காஞ்சனநஹ  (7-8).

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினர்

ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார் – பெரிய புராணத்தில் சேக்கிழார்.

ஓடும் இருநிதியு மொன்றாகக் கண்டவர்கள்

நாடும் பொருளான நட்பே பராபரமே — தாயுமானவர்

XXXX

10.கர்மன் ஏவ அதிகாரஸ்தே மா பலேஷூ கதாசன (2-47): கருமத்திலேயே உனக்கு அதிகாரம், ஒருபோதும் பலனில் இல்லை.

மழை , எதையாவது திரும்ப எதிர்பார்க்கிறதா? அது போல நீயும் கடமையை செய் என்கிறார் வள்ளுவர்

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றுங் கொல்லோ உலகு-குறள் 211

XXXxx 

Tags- பகவத்கீதை, குய்ஸ், பத்து, பெரிய, அணுகுண்டு சோதனை, .ராபர்ட் ஓப்பன்ஹீமர் ,கைம்மாறு வேண்டா கடப்பாடு

Leave a comment

Leave a comment