
Post No. 12,453
Date uploaded in London – – 22 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இரண்டு முயல்களைத் துரத்திச் செல்பவனுக்கு ஒன்றுமே கிடைக்காது – கன்பூசியஸ்
“The man who chases two rabbits catches neither.”
– Confucius
அவர் சொல்வது உண்மைதானே : இரண்டும் வெவ்வேறு திசையில் பாய் ந்து ஓடும் ; நாம் ஒன்றையும் பிடிக்கமுடியாது. கன்பூசியஸ் வாழ்ந்ததோ 2500 ஆண்டுகளுக்கு முன்னர். இப்போதுள்ள துப்பாக்கிகள் அப்போது கிடையாது. நவீன துப்பாக்கிகளோ ஒரே நேரத்தில் பல திசைகளில் ரவைகளை வீசும். நிற்க.
சீன தத்துவ ஞானி இங்கே வலியுறுத்துவது FOCUS போகஸ் ; அதாவது கவனம் ; ஒன்றே குறியாக இருக்கவேண்டும் . கவனம் சிதறக்கூடாது .
நம்மில் பலரும் ஒரே நேரத்தில் பல சாதனைகளை நிகழ்த்த மனக்கோட்டை கட்டுகிறோம் ; 20, 30 ஆண்டுகளுக்குப் பின்னரும் அவைகளை அடைவதில்லை ; நம்மை நாமே எண்ணிப்பார்த்து, மனதிற்குள் சிரித்துக் கொள்கிறோம். காரணம் என்ன? ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று முயல்களை வேட்டையாட நினைத்தோம் . ஒன்றும் கிடைக்கவில்லை.
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் வங்காளத்தில் வாழ்ந்தவர் ; அவர் அதிகம் படிக்காதவர். ஆனால் தவம் செய்து பெரிய ஞானியாக ஆனதோடு சுவாமி விவேகானந்தர், சகோதரி நிவேதிதா போன்றவர்களை உருவாக்கியவர் . அவர் இதையே கிராம மக்களுக்கும் புரியும் பாஷையில் சொல்கிறார்:
ஒரு மனிதன் கிணறு வெட்ட ஆரம்பித்தான்;இருபது அடி ஆழம் தோண்டி யும் தண்ணீர் வரவில்லை ; இன்னும் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே முப்பது அடி ஆழம் தோண்டினான் ; அப்போதும் தண்ணீர் கிடைக்கவில்லை. கடைசியாக வேறு ஒரு இடத்தைத் தெரிவு செய்து அங்கே இன்னும் கொஞ்சம் ஆழமாகத் தோண்டினான் ; தண்ணீரின் சுவடே தெரியவில்லை. வெறுப்படைந்து கிணறு வெட்டும் ஆசையையே விட்டுவிட்டான் இப்படி மூன்று இடங்களில் அவன் பூமியை வெட்டியதைக் கூட்டிப் பார்த்தால் சுமார் 100 அடி ஆழம் வரும். இப்படி இடம் விட்டு இடம் மாறித்தோண்டாமல் ஒரே இடத்தில் தோண்டியிருந்தால் அவனுக்கு வெற்றி கிடைத்திருக்கும். . ஒரே விஷயத்தை , ஒரே கடவுள் வழிபாட்டை நம்பாமல் மாறிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு உவமையாக பரமஹம்சர் இதைச் சொல்கிறார்.
நம்பிக்கை என்பதற்கு பதில் நாம் குறிக்கோள், லட்சியம், கவனம்/ FOCUS என்று எந்தச் சொல்லையும் இங்கே போடலாம். ஒரே விஷயத்தில் கவனம் இல்லாமல் நாம் மாறிக்கொண்டே இருந்தால் ஆன்மீகத்திலும் சரி, பொது வாழ்விலும் சரி, பிஸினஸிலும் சரி முன்னேற முடியாது.
புகழ்பெற்ற ஹார்வர்ட் பிசினஸ் கல்விநிறுவனத்தில் ஒரு பொன் மொழி/ அறிவுரை உண்டு:
Harvard Business School strategy guru Michael Porter ஹார்வர்ட் பிஸினஸ் ஸ்கூல் உத்திகளை வகுக்கும் குரு மைக்கேல் போர்ட்டர் சொல்கிறார்
“The essence of strategy is choosing what not to do.”
சிறந்த உத்தி என்பது என்னவென்றால் எதைச் செய்யக்கூடாது என்பதை அறிவதே .
முன்னர் நாம் கண்டதை வேறு விதமாகச் சொல்லுவது இது. அதாவது எதைச் செய்யவேண்டும் என்று அறிவாயாக.
இது நாம் 2800 ஆண்டுகளுக்கு முன்னரே பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷத்தில் கண்ட வழிமுறை!
அது ‘நேதி’, ‘நேதி’ (இது இல்லை, இது இல்லை ; ந+இதி =நேதி ) என்று சொல்லி கடவுளை, பிரம்மத்தை அறியும் முறையைக் காட்டுகிறது.
Xxx

சாதனைகள் செய்வது எப்படி ?
இன்னும் ஒரு அனுபவ சாலி சொல்கிறார் : வாழ்க்கையில் வெற்றி அடைய, உங்கள் குறிக்கோளை அடைய, கவனம் தேவை.
ஒரு காகிதத்தை எடுங்கள் ; அதில் தேதியுடன் நீங்கள் உங்கள் லட்சியத்தை, இலக்கினை, குறிக்கோளை எழுதுங்கள் . ஒவ்வொரு நாளும் அல்லது அடிக்கடி அதன் கீழ் , அதற்காக நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று தேதியுடன் எழுதுங்கள்.
மீண்டும் மீண்டும் என்ன செய்தீர்கள்? எவ்வளவு படிகள் முன்னேறினீர்கள்? என்று எழுதுங்கள் .
உங்கள் முன்னேற்றத்தின் வேகத்தையோ சோம்பேறித்தனத்தின் வேகத்தையோ அதன் மூலம் அறியலாம் . அதுவரை நிகழ்ந்த தவறுகளையும் அது நினைவுபடுத்தும்.. எதிர்கால வெற்றிக்கு அது துணை நிற்கும்.
ஆக, ஆன்மீக வாழ்விலும், பொது வாழ்விலும் , வணிகத்திலும் முன்னேற போகஸ் / கவனம் சிதறாமை FOCUS அவசியம் ஆகும்.
–subham—
Tags- கன்பூசியஸ் , உபநிஷத், போகஸ் , கவனம், பரமஹம்சர், நேதி