உலகப் புகழ்பெற்ற ஹம்பி: கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற …..– Part 26 (Post12,458)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,458

Date uploaded in London – –  23 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 26 

116.உலகப் புகழ்பெற்ற ஹம்பி HAMPI, Vithala Temple, Virupaksha Temple, Hazara Rama Temple, Malyavanta Raghunathaswamy Temple, Ahyuta Raya’s Temple, Krishna Temple, Two Huge Ganesa Statues

ஹம்பியும் பம்பா ஏரியின் மறுபுறத்திலுள்ள ஆன குண்ட என்னும் இடமும் ராமாயணத்தில் குறிப்பிடப்படும்; கிஷ்கிந்தா என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு .

ஹம்பி, துங்கபத்திரை (பம்பா) ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. விஜயநகரப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது.

இவ்வூர் பெங்களூருவிலிருந்து 353 கிமீ தொலைவிலும், பெல்லாரியிலிருந்து 74 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.  13 கிமீ தொலைவிலுள்ள ஹோஸ்பேட் Hospet  இவ்வூருக்கு அருகிலுள்ள ரயில் நிலையம்.  (Hampi, ஹம்பி) கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில்   இருக்கிறது. அருகிலுள்ள விமான தளங்கள் – ஹுப்ளி அல்லது பெல்காம் . இது யுனெஸ்கோ அங்கீகரித்த உலகப் பண்பாட்டுச் சின்னங்களில் (UNESCO HERITAGE SITE) ஒன்று

துங்கபத்திரை நதியின் மற்றோரு பெயர் ‘பம்பா’. .பம்பா நதி நகரம் என்பது ஹம்பி எனப்பட்டது. தமிழ் மொழியில் உள்ள   “ப” என்னும் எழுத்து கன்னடத்தில் “ஹ” ஆகும்  நாம் பத்து போலி என்றால் அவர்கள் ஹத்து போலி என்பர் .

முஸ்லீம் படைகளால்  நாசம் செய்யப்பட்டது போக எஞ்சியிருப்பதை இன்று காணலாம். சிறிது கண்களை மூடிக்கொண்டு விஜய நகர சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறந்த நாளில் இது எப்படி இருந்தது என்று எண்ணிப்பார்க்க வேண்டும் . இந்த இடிபாடுகள் 25 சதுர கிலோமீட்டர் பரப்புக்குச் சிதறிக்கிடக்கின்றன. முஸ்லீம்கள் செய்த மாபெரும் அழிவு வேலைகளில் மன்னிக்க முடியாத வரலாற்றுச் சின்னம் இது

XXXX

ஹம்பி நகர கோவில்கள்

இரண்டு பெரிய கணபதி சிலைகள் Kadalekalu Ganesha Temple, Hampi

ஹம்பி பஸ் நிலையம் அருகில் கடலைகளு கணேசர் கோவில் இருக்கிறது . இவர் பெயர் தமிழில் கடலைப் பருப்பு (BENGAL GRAM) பிள்ளையார்  ஹம்பியில் உள்ள பெரிய பிள்ளையார்களில் இதுவும் ஒன்று 15 அடி உயரம். ஒரே கல்லில் செதுக்கப்பட்டது; கணபதி தொந்தி பருப்பு வடிவத்தில் இருப்பதால் இப்பெயர் என்று சொல்லுவார்கள் அது தவறு . பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் என்ற அவ்வையார் பாட்டு கன்னடியர்களுக்குத் தெரியாது !!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமி வை

நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்

சங்கத் தமிழ் மூன்றுந்தா –-ஒளவையார் 

இரண்டாவது கணபதி கோவில் சசிவ கல்லு Sasivekalu Ganesha கணேசர் கோவில்

சசிவ கல்லு என்றால் கடுகு (mustard seed) என்று அர்த்தம் ; விஜயநகர சிற்பக் கலைக்கு எடுத்துக்கட்டாக நான்கு கைகளுடன் தரிசனம் தரும் இந்தப் பிள்ளையார் வெட்ட வெளியில் நட்ட நடுவில் நிற்கிறார்  இவருடைய உயரம் எட்டு அடி. 500 ஆண்டுக்கு மேல் வரலாறு உடையது  என்பது இரண்டாம் நரசிம்மரின் கல்வெட்டு மூலம் அறியக்கிடக்கின்றது (1500 CE  K ing Narasimha II)

XXXXX

1.விருபாட்சர் கோயில், ஹம்பி கடைத்தெருவில் இருக்கிறது . பம்பாவதி கோயில் என்றும் அழைக்கப்படும்  மூன்று கோபுரங்களைக் கொண்டுள்ளது. கிபி 1510 ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயர் முடிசூட்டிக்கொண்டபோது அவருக்கென அர்ப்பணிக்கப்பட்ட கோவில்.. சிவனுக்கும் , புவனேசுவரிதேவிக்கும்  கருவறைகள் உள்ளன. இந்த கோயிலில் துங்கபத்திரை ஆற்றின் கரையில் ஹேமகுதா மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஒன்பது அடுக்கு களைக்கொண்ட 50 மீட்டர் உயர கோபுரம் உள்ளது. இது தென்னிந்திய கட்டிடக்கலை பாணியில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு சாந்து போன்ற பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.

7 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது ; 11ம் நூற்றாண்டு வரை விரிவுபடுத்தப்பட்டதால் பல வகை சிற்பங்கள் அந்தந்த காலத்தைக் காட்டும் கண்ணாடிகளாக நமக்கு காட்சி தரும்

விருபாக்க்ஷா கோயில் மண்டபத்தில் உள்ள 100 தூண்களில் ஐம்பத்தி ஆறு தூண்கள், இசைகருவிகளிலிருந்து எழக்கூடிய இசையை எழுப்பும். 

2.அச்சுதராயர் கோயில்-

1534 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

3.படவிலிங்கம்– இது ஹம்பியிலுள்ள லிங்கங்களுள் அளவில் மிகப் பெரியதாகும். இலட்சுமி நரசிம்மர் சிலைக்கு அடுத்துள்ள ஒரு அறையில் இந்த லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் சென்று பார்க்கும்போது இந்த லிங்கத்தில் மூன்றாவது கண் உள்ளதைக் காணமுடியும். (depicting the three eyes of Shiva) லிங்கத்தின் அடிப்பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது.

4.சந்திரமௌலீசுவரர் கோயில்: இந்த சிவன் கோவில் 900 ஆண்டு வரலாறு படைத்தது.

5.மால்யவந்த இரகுநாதசுவாமி கோயில்:இக்கோயிலின் உட்புறச் சுவர்களில் வினோதமான மீன் மற்றும் பிற கடல்வாழ் உயிரின வடிவங்களின் வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.

6.ஹசார ராமர் கோயில் :உட்சுற்றுச் சுவரில் இராமாயண காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன .

7.விட்டலர் கோயில்: கல்லால் ஆன தேர்,ஊஞ்சல் கூடம்,இசைத்தூண்கள் உள்ளன.

விட்டலா கோயில் 16 ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான ஆலயம். இங்குதான் இசை எழுப்பும் தூண்கள் உள்ளன விஜயநகர அரசரான இரண்டாம் தேவராயரின் காலத்தில் கட்டப்பட்டது .விக்கிரகங்கள் கருவறையில்  வைக்கப்பட்டுள்ளன.ஆனால் நம்மால் பார்க்க முடியும். புகழ்பெற்ற கல் தேர்/ரதம் இங்குதான் உள்ளது இந்த தேரின் சக்கரங்களும் கல்லால் ஆனவை என்பது மட்டுமல்லாமல் இந்த சக்கரங்கள் ஒட்டுமொத்த கல் தேரின் எடையையும் தாங்கியபடி நகரவும் கூடியவை இந்துக்களின் பெரிய திறமைக்கு இதுவும் ஒரு சான்று ; இது  ஒரு மாபெரும் தொழில் நுட்ப அதிசயம்!

இவைகளில் தற்போது வழிபாடு நடைபெறுகிறது:

XXXXX

பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல்

1.கல்லால் ஆன ரதம் , 2.உக்ர நரசிம்மரின் பெரிய சிலை, 3.விரூபாக்ஷர் கோவிலின் அற்புத சிற்பங்கள் , 4.தாமரை மாளிகை, 5.துலாபாரம், 6.யந்த்ரோதாரகா ஆஞ்சநேயர் கோவில், 7.யெதுரு பசவண்ணா என்னும் நந்தி சிலை, 7.ஹஸர ராமர் கோவில் ராமாயண சிற்பங்கள், 8.இசை எழுப்பும் தூண்கள், 9.படவி லிங்கம், 10 படிகள் குளம் (Step Well)  , 11. பெரிய 2 கணேசர்கள் ….….. என்று பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் நீளும்.

XXXX

வெளிநாட்டினர் என்ன சொன்னார்கள்?

” இந்த நகரத்தின் தெருக்களில் வைரங்கள், மாணிக்கங்கள், முத்துக்கள், விலைமதிப்பற்ற கற்கள், துணிவகைகள் ஆரஞ்சு முதற்கொண்ட பல வகையான பழங்கள் என்று பூமியில் உள்ள அத்தனையும் விற்கப்படுகிறது ” என்று போர்ச்சுகீசிய பயணி 1522 இல் ஹம்பி வந்தபோது எழுதிவைத்தார் Domingo Paes, a Portuguese visitor between circa 1520 and 1522.

1533ல் விஜயம் செய்த போர்ச்சுகீசிய பயணி பெர்னாவோ நுனிஸ் Fernao Nuniz, a Portuguese traveller in 1535 இந்த ஹம்பி நகரம் ரோமாபுரி போல பெரிய நகரம் ; அரசரோ பலம் வாய்ந்தவர். ஆண்டுக்கு 13000 குதிரைகளை விலைக்கு வாங்குகிறார் என்று எழுதி வைத்தார் 

,

விஜயநகரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் இந்தியாவிலேயே நிகரில்லாதவை என்று இந்தியா என்னும் அதிசயம் என்ற நூலில் வரலாற்று அறிஞர் A.L.. பாஷம் (The Wonder that was India by A L Basham) எழுதுகிறார் .

துலாபாரம்

விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் . பண்டிகை நாட்களில் மன்னரின் எடைக்கு நிகராக தங்கம் மற்றும் வைர நகைகளை துலாபாரத்தில் வைத்து மக்களுக்கு வினியோகிப்பதுவழக்கமாக இருந்தது. இங்கு பண்டிகை நாட்கள் மிக மிக விசேஷமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்படும். இந்த தகவலை கிருஷ்ண தேவராயர் காலத்தில் அங்கு வந்த பயணி அப்துல் ரசாக் Abdul Razzaq, an envoy from Herat, Persia, circa 1442-44. தனது குறிப்பில் விவரமாக எழுதியிருக்கிறார்..

எழுத்தாளர் ராபர்ட் சீவல் தன்னுடைய . “தி பர்காட்டன் எம்பெயர்ர் “R OBERT SEWELL’S , A Forgotten Empire,என்ற பெயர் புத்தகத்தில் “செல்வச் செழிப்பிலும், உச்சத்திலும் கீர்த்தியிலும் இருந்த இந்து சாம்ராஜ்ஜியம் தோற்கடிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு நாளும் வாள்களாலும், ஆயுதங்களாலும் நகரமே இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இப்படி ஒரு அழிவு அதுவும் திடீரென்று வரும் என்று யாரும் நினைத்து பார்த்ததே இல்லை ” என்று எழுதி இருக்கிறார்.

–to be continued

Tags- ஹம்பி , கர்நாடக மாநிலத்தில், 108 புகழ்பெற்ற, கோவில்கள் ,  Part 26 ,

Leave a comment

Leave a comment