QUIZ ராமேஸ்வரம்பத்து QUIZ (Post No.12,462)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,462

Date uploaded in London – –  24 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ராமேஸ்வரம் பத்து

Quiz Series No.70

1.ராமேஸ்வரம் ஒரு தீவா ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி எத்தனை மைல்கள் மதுரை எவ்வளவு தூரம்?

XXX

2.ராமேஸ்வரம் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றா ?

XXXX

3.ராமேஸ்வரம் பற்றி நாயன்மார்களில் யார் யார் பாடினார்கள் ?

XXXX

4.ராமேஸ்வரம் பற்றி திருப்புகழில் அருணகிரிநாதர் என்ன சொன்னார் ?

XXXX

5.ராமேஸ்வரத்தில் எத்தனை தீர்த்தங்கள் உள்ளன ராமேஸ்வரம் கடலில் குளிப்பது புண்ணியம் என்று லட்சக் கணக்காணோர் வருகின்றனரே . அந்தக் கடலுக்கு புராணத்தில் என்ன பெயர் ?

XXXX

6.காசி-ராமேஸ்வரம் என்று இணைத்துப் பேசுவதற்குக் காரணம் என்ன?

XXXX

7.ராமேஸ்வரம் சாதனை புஸ்தகத்தில் (BOOK OF RECORDS) இடம் பெறுவதன் கரணம் என்ன?

XXXX

8.ராமேஸ்வரம் கோவிலில் லிங்கத்துக்கு அடுத்தபடியாக தரிசிக்க வேண்டியவை யார் ?

XXX

9.ராமேஸ்வரத்தில் வேறு என்ன கோவில்கள்புனித இடங்கள் உள்ளன ?

XXXX

10.ராமர் இங்கு வந்ததன் காரணம் என்ன ?

xxxxx

விடைகள்

1.ராமேஸ்வரம் தமிழ் நாட்டில் உள்ளது. அது ஒரு தீவு. முன்னர் ரயில் பாதை மூலம் மட்டும் இணைக்கப்பட்டது. அந்தப் பாலம் 1964 புயலில் சேதம் அடைந்தவுடன் சரி செய்யப்பட்டு, புதிய சாலைப் பாலமும்  கட்டப்பட்டது. அந்தப் பாதைகளில் செல்லும்போது இரு புறமும் கடல் இருப்பதைக் காணலாம். மதுரையிலிருந்து சாலை வழியாக 3 மணிநேரத்தில் சென்றுவிடலாம். மதுரையிலிருந்து சுமார் 170 கிலோ மீட்டர் தொலைவில் ராமேஸ்வரம் உள்ளது. இப்போதுள்ள தனுஷ்கோடி, அங்கிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

XXX

2.ராமேஸ்வரம் 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் ஒன்று . நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டும் 12 ஜோதிர் லிங்க கோவில்கள் 12 இடங்களில் உள்ளன. அவற்றில் மிகவும் சிறப்பானது ராமலிங்கம் என்னும் ராமநாத சுவாமி கோவில் ஆகும். ராமரே சிவபெருமானை பூஜித்ததாக ஐதீகம் (வரலாறு).

XXXXX

3.இராமேஸ்வரம் திருமுறைப் பாடல்கள்      :   

அப்பரும் சம்பந்தரும் பாடியதால் , 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இதன் பெருமை பரவியது நமக்குத் தெரிகிறது

பதிகங்கள்    :   சம்பந்தர்    –   1. அலைவளர் தண்மதி (3.10),

                                    2. திரிதரு மாமணி (3.101);  

                   அப்பர்      –   1. பாசமுங் கழிக்க கில்லா (4.61);

பாடல்கள்     :   அப்பர்      –      நாடகமா டிட (6.71.8);

                   சுந்தரர்     –      ஈழ நாட்டுமா தோட்டம் (7.12.7);

நாயன்மார்கள் பற்றி பெரிய புராணம் பாடிய சேக்கிழார் பெருமானும் ராமேஸ்வரம் பற்றிப்  பாடியுள்ளார்

                   சேக்கிழார்  –     தேவர் தொழும் (12.21.409) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், 

                                      புண்ணியனார் (12.28.887) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம். 

Read more at: https://shaivam.org/hindu-hub/temples/place/86/rameswaram-ramanathar-temple/#gsc.tab=0

XXXX

4.திருப்புகழில் அருணகிரிநாதர்

4.வானோர் வழுத்துனது பாதா ரபத்மமலர்

     மீதே பணிக்கும்வகை …… யறியாதே

…………………………………

நாரா யணற்குமரு காவீ றுபெற்றிலகு

     ராமே சுரத்திலுறை …… பெருமாளே.

XXX

வாலவய தாகியழ காகிமத னாகிபணி

     வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல்

          வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு …… பொருள்தேடி

………………………………………………….

ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை

     பாணிதிரு மார்பனரி கேசன்மரு காஎனவெ

          யோதமறை ராமெசுர மேவுகும ராவமரர் …… பெருமாளே.

XXXX

5.கோவிலுக்குள் மட்டுமே 22 தீர்த்தங்கள் உள . மேலும் 31 தீர்த்தங்கள் தீவின் பல இடங்களில் இருக்கின்றன.

ராமேஸ்வரத்தில் உள்ள கடலுக்கு அக்னீ தீர்த்தம் என்று பெயர் 

XXXX

6.காசி – ராமேஸ்வரம் சென்று வந்தேன் என்று முதியவர்கள் சொல்லுவார்கள்  ராமேஸ்வரத்தில் உள்ள கடலுக்கு அக்னீ தீர்த்தம் என்று பெயர்  அந்தக் கடலில் (அக்கினி தீர்த்தத்தில்) ஸ்னானம் செய்து அந்த தண்ணீரையும் மணலையும் எடுத்துக்கொண்டு பிரயாகையில் கொட்டுவார்கள். காசியிலிருந்து கங்கை நீரைக் கொண்டுவந்து ராமலிங்கக சுவாமிக்கு அபிஷேகம் செய்வார்கள். தமிழ் நாட்டையும் உத்தரப் பிரதேசத்தையும் நாள் தோறும் இணைக்கும் காட்சியை, கண் முன்னே காணலாம்.இது ஒரு சம்பிரதாயம். அதாவது காசிக்கும் ராமேஸ்வரத்துக்கும் போய்வரவேண்டும் என்ற கட்டாயத்தை வலியுறுத்த இப்படி ஒரு முறை. (என்னுடைய கருத்து – நேரம் கிடைக்கும்போது பிரயாகை உள்பட மூன்று இடங்களையும் தனித்தனியே தரிசித்து கங்கையிலும் கடலிலும் குளித்தாலும் புண்ணியமே )

XXXX

7.LONGEST TEMPLE  CORRIDOR

7 உலகியிலேயே நீண்ட கோவில் பிரகாரம் ராமேஸ்வரத்தில் உள்ளது. அற்புதமான பொறியியல் வேலை அது. கருங்கல் கிடைக்காத தீவில் இவ்வளவு பெரிய பிரகாரம் அமைந்தது உலக அதிசயமே !

பிரகாரத்தின் நீளம் 640 அடி.

மொத்தமுள்ள பல பிரகாரங்களின் நீளம் 3850 அடி

வெளிப் பிரகாரத்தில் உள்ள தூண்கள் 1212. அவற்றில் சிற்பங்களும் உண்டு.

இவை 15-ம் நூற்றாண்டு முதல் கட்டப்பட்டன.

உலகப் பிரசித்திபெற்ற மூன்றாம் பிரகாரத்தை முத்துராமலிங்க சேதுபதி 300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் கட்டினார்.

OLDEST EXILE GOVERNMENT IN THE WORLD

விபீஷணரை இந்தியமண்ணிலேயே ராமர், இலங்கை அரசனாக முடி சூட்டிய இடமும் இதுதான். உலகின் முதல் EXILE GOVERNMENT ‘எக்ஸைல் கவர்மெண்ட்’ ராமபிரானால் உண்டாக்கப்பட்டது. அங்கு உயரமான இடத்தில் கோதண்ட ராம சுவாமி கோவில் உள்ளது .

xxxx

8.கோவிலில் உள்ள சந்நிதிகள்

ராமநாதர், ராமலிங்கர் என்றழைக்கப்படும் சிவலிங்கம்.

பர்வத வர்த்தனி என்னும் அம்மன் சந்நிதி; அங்கு ஸ்ரீசக்கரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.அனுமன் கொணர்ந்த லிங்கம்- விசுவநாதர்; அவரது துணைவியார் – விசாலாட்சி; செளபாக்கிய கணபதி; சந்தான கணபதி; மஹா கணபதி; பெருமாள் சந்நிதி; உலகப்  பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் நடராஜர் சந்நிதி; ஆஞ்சனேயர்; மஹாலெட்சுமி; பள்ளியறை; இவை தவிர பல மண்டபங்கள். பதஞ்சலி முனிவர் சமாதி அடைந்த புனித இடமும் இராமேஸ்வரம்.கோவிலுக்குள் இருக்கிறது.

xxx

9.கந்தமாதன பர்வதம் ;ஜடாயு தீர்த்தம்; பஞ்சமுகி ஹனுமான் கோவில்;

லக்ஷ்மண தீர்த்தம்; வில்லூண்டி தீர்த்தம்; கோதண்டராமசுவாமி கோவில்

((நம்பு நாயகி அம்மன் கோவில்,சாட்சி ஹனுமான் கோவில்))

இவை தவிர இயற்கை ஆர்வலர்களுக்கு கடல் வள தேசீய பூங்கா, (MARINE PARK) சுற்றிலும் பறவைகள் பாதுகாப்பிடங்கள் (BIRD SANCTUARIES)  இருக்கின்றன. தொலைவில் பாம்பன் பாலமும் , அரிச்சல் முனை என்னும் தனுஷ்கோடியும் இருக்கின்றன

 இந்திய ஜனைதிபதியாவும் நாட்டின் தலை சிறந்த விண்வெளி, விஞ்ஞானியுமான (PRESIDENT ABDUL KALAM) அப்துல் கலாமின் ஊர் இராமேஸ்வரம். அவரைப் பற்றிய காட்சி சாலையும் இருக்கிறது ; பாம்பனில் மீன் காட்சி சாலை இருக்கிறது . 

xxxx

10.முதலில் இலங்கைக்கு பாலம் கட்ட இங்கு வந்தார். பின்னர் இலங்கையிலிருந்து திரும்பி வருகையில் வந்தார்

ராம பிரான், இராவணன் என்னும் பிராமணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி (பிராமணக் கொலை) தோஷம் ஏற்பட்டது அதிலிருந்து விடுபட இமயமலையில் இருந்து சிவ லிங்கத்தை எடுத்துவர அனுமனை அனுப்பினார். அவர் வருவதற்குத் தாமதம் ஆகவே , சீதையே மணலால் லிங்கத்தைச் செய்து கொடுக்க, ராமன் அதை வழிபட்டார். அவரே மூலவர். பின்னர் அனுமன் கொண்டு வந்த லிங்கத்தையும் அதே கோவிலில் ராமர் பிரதிஷ்டை செய்து பூஜிக்க உத்தரவிட்டார்.

xxxx

 —SUBHAM—

TAGS- ராமேஸ்வரம், தீர்த்தங்கள், பார்க்கவேண்டிய இடங்கள், அதிசயங்கள், கோவில், பாம்பன், தனுஷ்கோடி

Leave a comment

Leave a comment