Trikuteswara Temple at Gadag
Post No. 12,466
Date uploaded in London – – 25 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 27
117. கடக் GADAG வட்டார கோவில்கள்
கடக் மாவட்டம் தார்வாட் மாவட்டத்திலிருந்து பிரித்து உண்டாக்கப்பட்டது . கடக் நகரில் இரண்டு பழைய கோவில்கள் இருக்கின்றன. இவைகளில் பழமையானது
த்ரிகூடேஸ்வர சிவன் கோவில் Trikuteshwara Temple சாளுக்கியர்களால் 1050 CE–க்குப்பின்னர் கட்டப்பட்டது . இதன் சிறப்பு சரஸ்வதிக்கும் சந்நிதி இருப்பதாகும் மும் மூர்த்திகளை குறிக்கும் வகையில் மூன்று சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன . இப்போதும் வழிபாடு நடக்கிறது அருகில் மூன்று கர்ப்பக்கிரகங்கள் காயத்ரி, சாரதா, சரSவதிக்காக இருக்கின்றன . சரஸ்வதி சிலையை விஷமிகள் சேதப்படுத்தி விட்டதால் வழிபாடு இல்லை.
அடுத்ததாக முக்கியத்துவம் பெரும் கோவில் ஶ்ரீ வீர நாராயணர் Veeranarayana Temple திருக்கோயில் ஆகும். இதை விஷ்ணுவர்தனர் என்ற மன்னர் 1100 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கட்டினார். இங்குள்ள முக்கிய தெய்வம் விஷ்ணு. . ஹொய்சாள இளவரசியை , ஶ்ரீராமானுஜாச்சாரியார் நோயிலிருந்து குணப்படுத்திய பிறகு, பிட்டி தேவா என்று அழைக்கப்பட்ட மன்னன் தனது பெயரை விஷ்ணுவர்த்தனா என்று மாற்றியது மட்டுமல்லாமல், ஜைன மதத்திலிருந்து ஸ்ரீ வைஷ்ணவ மதத்திற்கு மாறினார்.
இத்திருத்தலம் கர்நாடகா மாநில கடக் மாவட்டத்தில் கடக் நகரில் அமைந்துள்ளது.
ஶ்ரீவீர நாராயணர் கோயில் பஞ்ச நாராயண க்ஷேத்திரங்களில் ஒன்றாகும். மற்ற நான்கு கோவில்கள் மேல்கோட்டில் திருநாராயணருக்கும், தோன்னூரில் விஜயநாராயணருக்கும், தலக்காடு கீர்த்தி நாராயணருக்கும், பேலூரில் உள்ள சென்னகேசவ நாராயணருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
வீரநாராயண கோவில், இந்திய தொல்லியல் துறையின் கர்நாடக மாநிலப் பிரிவின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும்
ஸ்ரீ வீரநாராயண கோவிலில் சாளுக்கியர், ஹொய்சாளர் மற்றும் விஜயநகர சிற்பிகளின் அழகிய கலை வேலைப்பாடுகளை ஒருங்கே காணலாம் . கிழக்கு நோக்கிய பிரதான நுழைவு வாயிலில் நுழையும் போது கருட கம்பம் நிற்கிறது. கருவறையில் கருநீலக் கல்லில் செதுக்கப்பட்ட வீரநாராயணர் சிலை அனைவரையும் கவர்கிறது. கிரீடம், கர்ணகுண்டலம், சங்கம், சக்ரம், கதா, பத்மம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு, வீரகச்சேரி அங்கியில், வீரநாராயணன் அபயஹஸ்தாவுடன் தனது பக்தரைக் காக்கிறார். அவரது அகன்ற மார்பில் லக்ஷ்மியும், இருபுறமும் லட்சுமியும் கருடனும் நிற்கின்றனர்.
இந்த கோவிலின் முற்றத்தில், லட்சுமி-நரசிம்மர் கோவில், சரபேஸ்வர கோவில் மற்றும் பல தெய்வங்களின் சிறிய கோவில்கள் உள்ளன.
கடக் நகரத்திலிருந்து,
பெங்களூரு 416 கி.மீ., ஷிமோகா 261 கி.மீ., ஹுப்பிலி 58 கி.மீ. , தார்வாட் 76 கி.மீ., பல்லாரி 58 கி.மீ. , ஹம்பி 109 கி.மீ. நவபிருந்தாவனம் 115 கி.மீ, . கொப்பல் 64 கி.மீ.தூரம்.
கடக் நகரத்திற்கு ரயில் வசதி உள்ளது.
Xxxx
118. முஸ்லீம்கள் அழித்த ஐம்பது கோவில்களும், 100 ஆழ் கிணறுகளும் Step Wells of Lakkundi


கடக் நகரிலிருந்து 12 கி.மீ தொலைவிலுள்ள லக்குண்டி என்னும் இடத்தில் 50 கோவில்களை முஸ்லீம் படைகள் தாக்கி அழித்துவிட்ட இடிபாடுகளை இன்றும் காணலாம். முஸ்லீம்கள் தாக்கி அழித்த கோவில்களில் வெளவால்கள் சுகமாக வசிக்கின்றன; சமண ஆலயங்களும் உள்ள பகுதி கடக் மாவட்டம்.
100 STEP WELLS
லக்குண்டியின் சிறப்பு அங்குள்ள படிக்கட்டு STEP WELLS ஆழ்கிணறுகள் ஆகும். அந்தக்காலத்தில், தண்ணீரை சேர்த்துவைக்க நம்மவர்கள் என்ன பாடுபட்டனர் என்பதை இந்தக் கிணறுகள் காட்டுவதோடு அழகிய பொறியியல் வேலைப்பாடுகளையும் காட்டுகின்றன. இவைகளை கல்யாணி (Kalyani) என்று அழைத்தனர் .
மேலை சாளுக்கிய மன்னர்கள் தங்க நாணயங்களை வெளியிட்டுப் புகழடைந்தவர்கள். அவர்கள் இந்த இடத்தில் 100 ஆழ் கிணறுகளையும் (STEP WELLS) 50 கோவில்களையும் கட்டினார்கள்.
இங்கு மாணிக்கேஸ்வரர் கோவில் இருக்கிறது Manikeshwara Temple. கலைவேலைப்பாடுமிக்க stepwell called Musukina Bavi முசுகின பாவி ஆழ் கிணறு இங்கே வெட்டப்பட்டுள்ளது அந்தக்காலத்தில் பெண்களின் அரட்டைக் கச்சேரிக்கும், சமூக உறவாடலுக்கும் இந்தக் கிணறுகள் மையமாக விளங்கின. மன்னர்களோ கோடைக்காலத்திலும் மக்களுக்கு தண்ணீர் கிடைக்க இவைகளை அமைத்தனர். சிற்பிகளோ தங்கள் கைவண்ணத்தைக் காட்டுவதற்கு இந்தக் கிணறுகளை பயன்படுத்தினர். இந்தியா முழுதும் இது போன்ற கலை வேலைப்பாடு மிக்க ஆயிரக்கணக்கான ஆழ் படிக் கட்டுக் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. கர்நாடக பெண்கள் இன்றும் கிணறுகளை வழிபடுகின்றனர்
ஒவ்வொரு கிணற்றுச் சுவர்களிலும் நடன அழகிகள், இசைக்க கலைஞர்கள் , தேவதைகள், பிராணிகள் ஆகியவற்றைக் காண முடிகிறது
1087ஆம் ஆண்டு ஹொய்சாளர்கள் கட்டிய காசி விஸ்வேஸ்வரர் கோவிலின் நுழை வாயிலும் லேத் LATHE முறையில் கடையப்பட்ட ஸ்தம்பங்களும் நமக்கு ஹொய்சாளர்களை நினைவுபடுத்தும் Kashi Vishveshwara Temple built in 1087 CE has carved doorways and polished lathe-turned pillars,இது சிவன் கோவில் ; மேற்கில் சூரியன் கோவிலும் கிழக்கில் நன்னேஸ்வரர் கோவிலும் உள்ளன . To its west is a Surya temple, and towards its east is the Nanneshwara temple.

Lathe Polished Pillar of Hoyshala Temples

Veera Narayana Perumal
xxxx
Brahma JInalya, Lakkundi
1007 ஆம் ஆண்டில் எழுப்பப்பட்ட பிரம்ம ஜினாலய என்னும் சமண கோயில் குறிப்பிடத்தக்கது தான சிந்தாமணி அத்திமபே Danachintamani Attimabbe என்னும் இளவரசி நூற்றுக்கணக்காண சமண ஆகலயங்ககளை எழுப்பி எண்ணற்ற தானங்களை செய்ததால் கர்நாடக மக்கள் அவளை அன்புடன் நினைவு கூறுகிறார்கள் பிரம்ம சமணர் ஆலயத்தில் பிரம்மா , ஸரஸ்வதி சிலைகளும் இருக்கின்றன.
கொப்பல் என்னும் ஊர்தான் அருகிலுள்ள பெரிய ஊர். 53 கி.மீ தொலைவுதான்
லக்கண்டியில் தொல்பொருட் துறை மியூசியமும் உளது.
கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற பாதாமி குகைகள், ஐஹோல், பட்டடக் கல் கோவில்களை அடுத்ததாகக் காண்போம்
To be continued…………………………………….
Tags- லக்குண்டி, ஆழ் கிணறுகள், படிக்கட்டு கிணறுகள், கடக் கோவில்கள் , சமண இளவரசி , ஜினாலயம், கர்நாடக மாநில, 108 புகழ்பெற்ற , கோவில்கள் , Part 27 , GADAG, STPP WELLS