கன்பூசியஸ் வாழ்வில் சுவையான சம்பவங்கள் (Post No.12,469)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,469

Date uploaded in London – –  26 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

கன்பூசியஸ் வாழ்வில் சுவையான சம்பவங்கள் 

கன்பூசியஸ் CONFUCIUS  ஒரு சீன தத்துவ ஞானி. 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார். அவர் சொன்ன பொன்மொழிகள் அனலெக்ட்ஸ் THE ANALECTS என்ற நூலில் உள்ளன. தமிழில் பாரதியார், இவரது மதத்தையும் தனது பாடலில் சேர்த்து தமிழ் கூறு நல்லுலகத்துக்கு இவரை அறிமுகம் செய்துவைத்தார்  செப்டம்பர் 28ம் தேதி (CONFUCIUS BIRTH DAY SEPTEMBER 28) இவரது பிறந்த தினத்தை.ஆண்டுதோறும்  தேசீய சீனா  எனப்படும் குட்டி நாடு தாய்வான் (TAIWAN) ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறது..

சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் ஒரு கதை கேட்டிருப்பீர்கள் . வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருந்தாராம் ; ஒரு மாணவன் அதைக்  கவனிக்காமல் வேறு ஏதோ ஒன்றை சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண் டிருந்தானாம். வாத்தியார் , அவனை சுட்டிக்காட்டி, டேய் பையா! எழுந்திரு , இவ்வளவு நேரமாக நான் கத்திக்கொண்டிருக்கிறேனே ;  உனக்கு இதுவரை என்ன தெரிந்தது ? சொல்.! என்றாராம் .

சார் ! பொந்துக்குள் எலி போய்விட்டது; ஆனால் இன்னும் வால்  மட்டும் போகவில்லை என்றானாம் ; அவன் சொல்லைக் கேட்டு மற்ற மாணவர்கள் கொல் என்று சிரித்தார்களாம்.

அவன் அவ்வளவு நேரம் கவனித்தது ஓரி எலியின் நடமாட்டத்தை தான்!

இதே போல கன்பூசியஸ் CONFUCIUS  வாழ்வில் ஒரு சம்பவம் நடந்தது

அவர் உடனே சொன்னார் :

யாருக்கு உண்மையை அறிய பிரியமில்லையோ அவனுக்கு நான் சத்தயத்தைப் போதிப்பதில்லை.

எந்த ஒரு ஆர்வமுள்ள மாணவனையும் நான் திருப்பி அனுப்பியதில்லை ; அவன் காய்ந்த மாமிசத் துண்டுகளை தட்சிணையயாக கொண்டு வந்தாலும் அதை ஏற்பேன்

என்றார் .

நான் சொன்ன பாடத்தை திரும்பவும் சொல்லவும் மாட்டேன். 4 மூலைகள் உள்ள காகிதத்தின் ஒரு முனையைக் காட்டினால் அவனுக்கு மற்ற மூன்று முனைகளும் சொல்லாமலேயே  தெரிய வேண்டும் .

xxx

இப்படியெல்லாம் அவர் உபதேசம் செய்து கொண்டிருந்த ஒரு வகுப்பில் ஒரு மாணவன் தூங்கிக்கொண்டிருந்தான் . கன்பூசியஸ் CONFUCIUS  ஒரு நல்ல ஆசிரியர் உடனே அவர் சொன்னார் :

உளுத்துப்போன மரத்தில் எந்த உருவத்தையும் செதுக்க முடியாது ; சாணியைக்கொண்டு சுவர் எழுப்ப முடியாது. அவனை நான் ஏன் கண்டிக்கவேண்டும்?

இவ்வாறு சொல்லி அவனைக் கண்டிக்கவும் இல்லை. அந்தப்பையன் சுகமாகக் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தான்.

xxxxx

இன்னொரு சுவையான சம்பவம்,

கன்பூசியஸ் CONFUCIUS  பல வேலைகளைச் செய்தார்; வெறும் ஆசிரியர் வேலையோடு நிற்கவில்லை. அவர் சீன அரசாங்க அதிகாரியாகவும் இருந்தார் அவர் விரும்பிய பெரிய பதவிகள் அவருக்குக் கிடைக்கவில்லை; அதில் அவருக்கு ஏமாற்றம்தான்.

கற்றோருக்கு சென்ற விடமெல்லாம் சிறப்பு

உண்டோ குரங்கு ஏற்றுக்கொள்ளாத கொம்பு என்று தமிழில் படித்திருக்கிறோம் ; அது போல கன்பூசியஸுக்கும் சென்றவிடமெல்லாம் பெரியாத மரியாதை கிடைத்தது ; ஆனால் சீனாவின் குட்டி நாடுகளை ஆண்ட எந்த மன்னனும் இவருக்குப் பெரிய பதவியைக் கொடுக்கவில்லை; அவர் மிகவும் வருத்தப்பட்டு பிறந்த  Qufu கூஃபு  என்ற   இடத்துக்கே (QUFU  in China)  சென்று 72ஆவது வயதில் இறந்தார் .

இதே போல வருத்தப்பட்டு இறந்த பாரதியாருக்கு நாம் கோவில் கட்டியது போல சீனாவும் இன்று அவருக்குக் கட்டப்பட்ட கோவிலை பெரிய சுற்றுலாத் தலமாக பராமரித்துவருகிறது

அவர் பிறந்த இடம் சீனாவில் உள்ள  Qufu என்னும் நகரம்  .

சுவையான சம்பவம் இதோ ,

கன்பூசியஸ் CONFUCIUS  சிடம் பாடம் கேட்டப் பலருக்கு அரசாங்கத்தில் பெரிய பதவிகள் கிடைத்தன.. அட, இந்த அதிகாரி கன்பூசியஸை விட பெரியவர் என்று ஒருவர் சொன்ன  காமெண்ட்/ விமர்சனம் காதில் விழுந்தது . அப்போது ஒருவர் சொன்னார்

நான் நம்முடைய நிலை என்ன என்பதை ஒரு வீட்டின் உவமையைக் காட்டி சொல்கிறேன். நான் கட்டிய சுவர் ஒருவனுடைய தோள் உயரம்தான். யாரும் எட்டிப்பார்த்து உள்ளே என்ன நடக்கிறது என்பதை எளிதில் அறியலாம். ஆனால் என்னுடைய குருநாதன் கட்டிய வீட்டின் சுவரோ மதில் போல உயர்ந்தது. யாரும் எட்டிப்பார்க்க முடியாது. ஆனால் அந்த வீட்டிற்குக் கதவுகள் உண்டு ; கதவைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் அதனுள்ளே அழகை யாரும் ரசிக்கமுடியாது;  சிலரே அந்தக் கதவு இருக்கும் இடத்தைக் காண்கிறார்கள் .

என்னுடைய மாஸ்டர் / குருநாதன் சூரியன், சந்திரன் போன்றவர்.; அவரை யாரும் குறை சொல்லமுடியாது; அவருடன் ஏனையோரை ஒப்பிட்டால் அவர்கள் வெறும் மணல் மேடுகள் தான் .

xxxxx

கன்பூசியஸ் ஒரு வேத கால ரிஷி போலவே பேசினார்

நான் எதையும் புதிதாகச் சொல்லவில்லை; பழங்கால அறிவினை, ஞானத்தை மீண்டும் உங்களுக்கு அளிக்கிறேன்

வேத கால ரிஷிகளும் இதையே சொன்னார்கள் நாங்கள் மந்த்ர த்ருஷ்டாக்கள். அதாவது காலத்தால் அழியாத உண்மைகளைக் காண்பவர்கள்; அதை உங்களுக்கு அப்படியே சொல்கிறோம்.என்றனர் ரிஷி முனிவர்கள்.

இதனால் வேதங்களுக்கு அபெளருஷேயம் என்று பெயர்; அதாவது புருஷர்களால் / மனிதர்களால் உண்டாக்கப்பட்டதல்ல .

இன்னும் ஒரு பெயர் ச்ருதி அதாவது கேட்கப்பட்டது; கேள்வி ஞானம் ;

சங்கத் தமிழ் புலவர்களும் வேதங்களை எழுதாக் கிளவி என்று போற்றினர்.

XXX

இன்னும் ஒரு சுவையான விஷயத்தைக் கேளுங்கள்

கன்பூசியஸ் தன் வாழ்க்கையை சுருக்கி வரைந்தார் ,

15 வயதில் கற்பதில் பெரிய ஆர்வம் ஏற்பட்டது; கற்க கசடறக்  கற்றேன்

30 வயதில் கற்றபின் அதற்குத் தக நின்றேன் ;

40 வயதில் ஐயங்கள் அகன்றன ;

50 வயதில் ஆன்மீக வாழ்வில் நுழைந்தேன்;

60 வயதில் ஆண்டவன் கட்டளையை மீறாமல் நின்றேன்;

70 வயதில் என்னுடைய வழிப்படி சென்றேன் ; ஒரு தவறும் நடக்கவில்லை .

XXXX

கன்பூசியஸ் சொன்னது எப்படி கிடைத்தது?

தேவாரம், திருவாசகத்தை நால்வரும் எழுதவில்லை. நால்வரைச் சூழ்ந்து நின்ற அடியார்கள் அவைகளை நினைவில் வைத்து நமக்கு எழுதி வைத்தனர். புத்தரும் புஸ்தகம் எழுதவில்லை; முக்கிய சீடர்கள் அவர் சொன்னதை தம்மபதம் என்ற நூலாக நமக்குத் தந்தனர். அதுபோலவே கன்பூசியஸும் நூல் எதையும் எழுதவில்லை அவர் சொன்ன பொன்மொழிகளை, உபதேசங்களை அவரது சீடர்கள் தொகுத்து அனலெக்ட்ஸ் என்ற ப்புஸ்தகமாக நமக்கு அளித்தனர். அவரோ தன் வாழ்நாளில் லூ மாகாணம் பற்றிக் கொஞ்சம் எழுதினார். 

கன்பூசியஸ் சொன்னதோடு அவரது பிரதான சீடர் மென்சியஸ் MENCIUS  சொன்னதையும் சேர்த்து நமக்கு அனலெக்ட்ஸ் ANALECTS  என்ற புஸ்தகமாக அளித்தனர் ; இதை தமிழில் தத்துவ முத்துக்கள் என்று மொழிபெயர்க்கலாம்.

–subham—

Tags- கன்பூசியஸ், சுவையான சம்பவங்கள்,  அனலெக்ட்ஸ்,The Analects

Leave a comment

Leave a comment