மோக்ஷ வாயில் காப்பாளர்கள் நால்வர் யார்? (Post No12,468)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,468

Date uploaded in London –  26 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

மோக்ஷ வாயில் காப்பாளர்கள் நால்வர் யார்?

ச.நாகராஜன்

மோக்ஷ வாயில் காப்பாளர்கள் நால்வர்!

மோக்ஷத்தின் வாயில் காப்பாளர்கள் நால்வர்.

அவர்கள் : 1) சம – மனதைக் கட்டுப்பாடுடன் வைத்திருப்பவர்

2)விசாரம் – விசாரம் செய்பவர்

3) சந்தோஷம் – எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவர்

4) சாது சங்கமம் – சாதுக்களுடன் இருப்பவர்

மோக்ஷத்வாரே த்வாரபாலாஸ்சத்வார: பரிகீர்திதா |

ஷமோ விசார: சந்தோஷச்சதுர்த்த: சாது சங்கமம் ||

*

காகத்திடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நான்கு!

காகத்திடமிருந்து ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டியவை நான்கு விஷயங்கள்.

அவையாவன:

1) யுத்தம் – நம்மை அநியாயமாக எதிர்ப்பவர்களுடன் யுத்தம்

2) ப்ராதருத்தானம் – அதிகாலையில் எழுந்திருத்தல்

3) சஹ பந்துபி: போஜனம் – நமது உணவை சுற்றத்தாருடன் பகிர்ந்து உண்ணுதல்

4) ஸ்த்ரீ சம்ரக்ஷணம் – ஆபத்துக் காலத்தில் பெண்களைப் பாதுகாத்தல்

யுத்தம் ச ப்ராதருத்தானம் போஜனம் சஹ பந்துபி: |

ஸ்தீரியமாபதத்தாம் ரக்ஷெச்சது: சிக்ஷேத குகுடாத் ||

–    சுபாஷித ரத்னாபாண்டாகாரம் 162/403

*

இச்சா ப்ராப்தி அடைய தொழ வேண்டிய நான்கு தெய்வங்கள்!

நமது இச்சையை பூர்த்தி செய்ய நாம் தொழ வேண்டிய நான்கு தெய்வங்கள் :

1) ஆரோக்கியம் அடைய – பாஸ்கரன் – (சூரியன்)

2) தனம் (செல்வம்) அடைய – ஹுதாசனன் (அக்னி)

3) ஞானம் (அறிவை அடைய) மகேஸ்வரன் (சிவன்)

4) முக்தி அடைய – ஜனார்தனன் (விஷ்ணு)

ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத்தனாமிச்சேத் ஹுதாசனாத் |

ஞானம் மஹேஸ்வராதிச்சேன்முக்திபிச்சேஜ்ஜனார்தனாத் ||

*

மரணத்திற்கான நான்கு வாயில்கள்!

மரணத்திற்கு நான்கு வாயில்கள் உண்டு.

அவையாவன:

1) அனுசிதகார்யாரம்பம் – உசிதமில்லாத காரியத்தைச் செய்ய ஆரம்பித்தல் (யோசித்துப் பார்த்தால் இதில் அனைத்தும அடங்கும்)

2) ஸ்வஜன விரோதம் – சொந்தக்காரர்களுடன் விரோதம்

3) பலீயஸா ஸ்பர்தா – பலவான்களுடன் போட்டி போடுதல்

4) ப்ரமதாஜனவிஸ்வாசம் – இளம் பெண்களிடம் நம்பிக்கை

அனுசிதகார்யாரம்ப: ஸ்வஜனவிரோதோ பலீயஸா ஸ்பர்தா |

ப்ரமதாஜனவிச்வாஸோ ம்ருத்யோத்வாராணி சத்வாரி ||

*

ப்ராணாயாமத்தால் அடையும் பயன்கள் நான்கு!

ப்ராணாயாமத்தைச் செய்வதால் அடையும் பயன்கள் நான்கு உண்டு.

அவையாவன

1) சாந்தி – அமைதி

2) ப்ரசாந்தி – பெரும் சாந்தம்

3) தீப்தி – மஹிமை, பெருஞ்சிறப்பு

4) ப்ரசாதம் – முழு ஓய்வு நிலை

ப்ரயோஜனானி சத்வாரி ப்ராணாயாமஸ்ய வித்தி வை |

சாந்தி: ப்ரசாந்திதீப்திஸ்ச ப்ரசாதஸ்ச சதுஷ்டயம் ||

***

Leave a comment

Leave a comment