உடலுக்குச் சக்தி தரும் உணவுத் துணைப்பொருள்கள்! (Post No.12,471)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,471

Date uploaded in London –  27 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் ஹெல்த்கேர் மாத இதழில் ஆகஸ்ட் 2023 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

உடலுக்குச் சக்தி தரும் உணவுத் துணைப்பொருள்கள்!

ச.நாகராஜன்

ஆற்றலைக் கூட்டும் உணவுத் துணைப் பொருள்கள்

நல்ல ஆரோக்கியத்துடனும் சக்தியுடனும் செயல்பட வேண்டும் என்ற முனைப்பு உலகெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த வேக யுகத்திலோ, நாம் உண்ணுகின்ற உணவிலோ இதற்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துப் பொருள்களும் குறித்த விகிதத்தில் எப்போதும் சேர்ந்திருப்பது என்பது இயலாத ஒன்றாக அமைகிறது.

ஆகவே இந்தக் குறையை ஈடு செய்ய உணவுத் துணைப் பொருள்கள் இப்போது சந்தைக்கு வந்து விட்டன.

இவற்றைப் பற்றி முதலில் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். பின்னர் நமது குடும்ப மருத்துவரை நாடி அவரின் அறிவுரையையும் பெற்று உணவுத் துணைப்பொருள்களை உட்கொள்ளலாம்.

அப்போது சக்தியும் கூடும்; திறனும் கூடும்; வாழ்க்கையும் ஒளிரும்.

உடல் திறன், மனத்திறன் கூடும்

உடல் திறனும் மனத்திறனும் கூட ஒரு அருமையான மாத்திரை – Methylcobalamin, Alpha Lipoic Acid, Thiamine Monohydrate, Pyridoxine HCl, மற்றும்  Folic Acid ஆகிய அனைத்தும் இணைந்த மாத்திரை.

அனைத்து ஊட்டச் சத்துக்களும் ஒருங்கிணைந்த அற்புதமான ஒரு மாத்திரையாக இது அமைகிறது.

இது நமது ஆற்றலைக் கூட்டுகிறது. நரம்பு மண்டல இயக்கத்தை ஊக்குவிக்கிறது. மூளையை நன்கு செயல்பட வைக்கிறது. இதய சம்பந்தமான் ஆரோக்கியத்தை நல்குகிறது. மொத்தமாக மனித உடலின் ஆரோக்கியத்தைக் கூட்டுகிறது.

மனோசக்தி, உடல் சக்தி மேம்பட!

மனதையும் உடலையும் ஆற்றல் வாய்ந்ததாக ஆக்க Methylcobalamin இல் விடமின் பி 12  சக்தி உள்ளது. இது ஆற்றல் வளர்சிதைமாற்றத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. உணவைப் பயன் தரும் ஆற்றலாக மாற்ற இது வழி வகுக்கிறது. உடல் மற்றும் மன பலத்தை அதிகரிக்கிறது.

Alpha Lipoic Acid ஒரு நல்ல சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆகும். இது Methylcobalaminஇன் ஆற்றலைத் தூண்டும் விளைவுகளுக்குத் துணை செய்கிறது. மைட்டோகாண்ரியா இயக்கத்தை விரிவாக்கி இன்னும் அதிக ஆற்றலுக்கு வழி வகுக்கிறது.

இந்த ஊட்டச்சத்துக்களின் சேர்க்கையானது ஒரு மாத்திரை வடிவில் எளிதில் கிடைக்கிறது. அது மனதையும் உடலையும் வலுவாக்கி களைப்பு மற்றும் சோர்வை அகற்றுகிறது.

நரம்பு மண்டல இயக்கத்திற்கு உதவி செய்கிறது

விடமின் பி 1 என்று பொதுவாக அறியப்படும் Thiamine Monohydrate நரம்பு மண்டல இயக்கத்திற்குத் தேவையான இன்றியமையாத ஒன்று.  கார்போஹைட் ரேட்டுகளை ஆற்றலாக மாற்றி நரம்பு சமிக்ஞைகளை அனுப்புவதற்கு இது துணை செய்கிறது. விடமின் பி 6 அல்லது Pyridoxine HCl என்று அறியப்படுவது நரம்பு இயக்கத்தில் நியூரோ டிரான்ஸ்மிட்டர்களின் கூட்டுத்தொகுப்பால் முக்கிய பங்கை வகிக்கிறது.

இந்த இரண்டும் இணைந்து மாத்திரையாக வரும்போது அனைத்தும் இணைந்த வலுவான ஒரு உதவியானது நரம்பு மண்டல அமைப்பிற்குக் கிடைக்கிறது. இது மூளை சார்ந்த மற்றும் உடலின் பொதுவான ஆரோக்கியத்திற்கு நல்ல பங்கை அளிக்கிறது.

உள்ளத்தால் உணரும் தன்மையை ஊக்குவித்தல்

காக்னிடிவ் ஹெல்த் என்று சொல்லப்படும் உள்ளத்தால் உணர்ந்து அறியும் தன்மையை ஊக்குவிப்பது Methylcobalamin, Alpha Lipoic Acid, Thiamine Monohydrate, Pyridoxine HCl, மற்றும் Folic Acid ஆகியவற்றின் கூட்டிணைப்பே. இந்த ஊட்டச் சத்துக்கள் மூளை ஆற்றலை ஆரோக்கியமாகச் செயல்பட உதவுகின்றன.இவற்றிற்கு மூளை ஆற்றலைப் பாதுகாக்கும் தன்மைகள் இருக்கலாம். குறிப்பாக Methylcobalamin மற்றும் Folic Acid ஆகிய இந்த இரண்டும் மனநிலையையும் முளை செயல்பாட்டு முறைகளையும் காப்பாற்றி நியூரோடிரான்ஸ்மிட்டர்களின் உற்பத்திக்கு உறு துணை செய்கிறது. மூளைக்குத் தேவையான சத்தைக் கொடுத்து மூளை தகவல் பரிமாற்றத்தைச் செய்வதன் மூலம், இந்த மாத்திரைகள் மூளைச் செயல்பாட்டையும் மனத் தெளிவையும் நன்கு இருக்குமாறு செய்ய உதவுகிறது.

இதயக் குழலியின் ஆரோக்கியம்

Cardiovascular  எனப்படும் இதயக் குழலியத்தின் ஆரோக்கியம் மிக முக்கியமான ஒன்று. இதை ஆரோக்கியமாகப் பாதுகாப்பது உடலின் முழு ஆற்றலுக்கு இன்றியமையாததாகும். மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடெண்டான Alpha Lipoic Acid ஆக்ஸிஜன் குறைபாட்டால் வரும் மன அழுத்தத்திலிருந்து (oxidative stress) ஒருவரைப் பாதுகாக்கிறது. இது இதயக் குழலிய பிரச்சினைகளுக்கு காரணமான ஒன்றாகும்.

Thiamine Monohydrate மற்றும் Pyridoxine HCl ஆகியவை இதயக் குழலிய ஆரோக்கியத்திற்கு ஹோமோசிஸ்டெய்ன் வளர்சிதைமாற்றத்திற்கு (metabolism of homocysteine உறுதுணையாக இருக்கிறது. இதயநோய்க்குக் காரணமாக உள்ள அமினோ அமிலம் மேலெழும்போது அதைச் சரி செய்கிறது.  இதயக்குழலிய ஆரோக்கியத்தை உறுதிப் படுத்தி இரத்தம் உறைதல் மற்றும் ரத்தக் குழாய்களின் இயக்கம் ஆகியவற்றில் Folic Acid  முக்கியபங்கை வகிக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்களின் கூட்டு, ஒரு மாத்திரை வடிவில் இருக்கும் போது அது இதயத்தை முழுமையாக ஆரோக்கியமாகச் செயல்பட வைப்பதோடு ரத்தஓட்ட அமைப்பையும் நன்கு இருக்குமாறு செய்கிறது.

உடலின் மொத்த வலிமையைக் கூட்ட வழி

உடலின் மொத்த வலிமையைக் காப்பதோடு கூடுதல் வலிமையுள்ளதாக அதை ஆக்க Methylcobalamin, Alpha Lipoic Acid, Thiamine Monohydrate, Pyridoxine HCl, மற்றும் Folic Acid ஆகியவை தக்க படி இணைக்கப்பட்டு மாத்திரையாக ஆகிப் பயன்பாட்டிற்குத் தரப்படும் போது அது உடலை மிக்க வலிமையாக்கும் டானிக்காக ஆகிறது.

ஆற்றல் உற்பத்தி, நரம்பு மண்டல இயக்கம், மூளை ஆற்றலின் ஆரோக்கியம், இதயக் குழலியத்தின் நலத்தன்மை ஆகியவை அனைத்திற்கும் உறுதுணையாக இருந்து இந்த மாத்திரைகள் மொத்தமான உடல் ஆரோக்கியம் மற்றும் வலிமையை உறுதி செய்கின்றன. இவை உடலின் முக்கியமான இயக்கங்களைத் தேவையான அளவு மட்டுமே இயங்க வழி வகுக்கின்றன. ஒவ்வொரு தனி மனிதரும் உயிர்த்துடிப்புள்ள, சுறுசுறுப்பான வாழ்க்கையை அனுபவிக்க இந்த மாத்திரைகள் உதவுகின்றன.

பல நன்மைகளைப் பெற ஒரு மாத்திரை

சுருக்கமாகச் சொல்லப்போனால் Methylcobalamin, Alpha Lipoic Acid, Thiamine Monohydrate, Pyridoxine HCl, மற்றும் Folic Acid ஆகியவை சேர்ந்துள்ள மாத்திரைகள் மூளை ஆற்றல், பொதுவான மொத்த உடல் நலம், உடல் வலிமை, இதயக் குழலிய ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்தையும் நல்குகின்றன. பல நன்மைகளை ஒருங்கே பெற இவை வழி வகுக்கின்றன.

என்றாலும் கூட இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் முன்னர் உங்களது குடும்ப வைத்தியரைக் கலந்து ஆலோசிப்பது இன்றியமையாதது. சரியான வழிகாட்டுதல் கிடைக்கப்பெற்றால் உடல் ஆரோக்கியத்திற்கான முழு அணுகுமுறையைப் பெற்றவர்களாவோம். வாழ்க்கையை அனுபவிக்கும் திறன் படைத்தவர்களாவோம்!

***

Folic acid

Leave a comment

Leave a comment